கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சகோதரர் முகிதீன் மாஸ்டர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச்  சோ்ந்த  சகோதரர் அல்ஹாஜ் முஹிதீன் மாஸ்டர் அவர்கள்  இன்று (25.5.2015) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் உம்மு நாயிமா அவர்களின் அன்புக் கணவரும், ஷீராஸ் (குவைட்),  ரிஹாம்( குவைட்) ஆகியோரின் தந்தையும் ஆவார். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் முகியத்தீன்  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار  


இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

சகோதரி வித்யாவுக்காக குரல் கொடுத்த நமது ஊரைச் சார்ந்த மௌலவி உமைர் ( ஈமானி) அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்!

சமீபத்தில் மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சகோதரி வித்யாவுக்காக குரல் கொடுத்த நமது ஊரைச் சார்ந்த மௌலவி உமைர் ( ஈமானி) அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!

இந்த வீடியே வடிவம் லங்கசிரி இணையம் மற்றும் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது.

1964 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோ மாநகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் இல் நடைபெற்ற சம்பவம்.

10,000 மீட்டர் ஓட்டப் பந்தயம் 17 நாடுகளை சேர்ந்த 29 வீரர்கள்,அவர்களில் இலங்கையினை சேரந்த ரனதுங்க கருணாநன்த என்வரும் ஒருவர். ஓட்டப்பந்தயம் ஆரம்பமாகியது சர்வதேச நாட்டு ஒட்டப்பந்தய வீரர்களின் திறமைக்கு முன் இலங்கை வீரர் ரனதுங்க கருணாநன்த விற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது அமெரிக்காவினை சேர்ந்த பில்லி மில்ஸ் என்ற முன்னனி வீரர் ரனதுங்க கருணாநன்தவினை பல சுற்றுகள் பின் தள்ளி முதலிடம் பிடித்தார்.
இன்னும் சில ஆயிரம் மீட்டர்கள் மீதம் உள்ள நிலையில் பல சர்வதேச வீரர்கள் முதல் மூன்று இடங்கள் தீர்மாணிக்கப்பட்டது என அறிந்தவுடன் 10,000 மீட்டரை பூரணப்படுத்தாமல் போட்டியினை இடை நடுவே நிறுத்திக் கொண்டனர்.
ஆனால் ரனதுங்க கருணாநன்த மாத்திரம் தான் கடைசி இடம் என்பதனை அறிந்தும் தனது ஒட்டத்தை நிறுத்திக் கொள்ள வில்லை அனைவரும் ஒடி முடித்து விட்ட நிலையில் ரனதுங்க கருணாநன்த மாத்திரம் மைதானத்தில் ஓடுவதனை பார்த்த ரசிகர்கள் கேலிச்சிரிப்பு சிரித்தனர் என்றாலும் ரனதுங்க கருணாநன்த மனம் தளர வில்லை நம்பிக்கையுடன் தனது 10,000 மீட்டர் துரத்தையும் ஒடி முடிக்கனும் என்ற இலக்கில் குறியாக இருந்தார்
இவருடைய 10,000 மீட்டர் எல்லையினை நெருங்கும் போது ரசிகர்கள் ரனதுங்க கருணாநன்தவின் நோக்கத்தினை அறிந்து கொண்டனர் அடுத்த கணம் அனைத்து ரசிகர்களும் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து ரனதுங்க கருணாநன்தவின் முயற்சிக்கு கைதட்டல்கள் மூலம் உற்சாகம் வழங்கினர்.
இருதியில் ரனதுங்க கருணாநன்த மக்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் தனது 10,000 மீட்டர்களை ஒட்டத்தை ஓடி முடித்தார்.
ஓட்டப் போட்டி முடிவடைந்ததன் பின்னர் ஒரு ஊடகவியலாளர் ரனதுங்க கருணாநன்தவிடம் ஏன் நீங்கள் கடைசி இடம் என அறிந்தும் ஏன் ஓட்டத்தை பூர்த்தி செய்தீர்கள்
“வெற்றியோ தோல்வியோ ஓலிம்பிக் பேட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது கணவு அந்த கணவு எனக்கு நிஜமாகியது எனக்கு கிடைத்த வாய்ப்பினை நான் முழுமையாக பயண்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன் எனவே எனது ஓட்டத்தை பூரணப்படுத்தினேன்”
இவருடய இந்த நம்பிக்கை 1964ஆம் டோக்கியோ ஒலிம்பிக் முடிந்த பின்னும் ஜப்பான் மக்கள் மனதில் பதிந்து காணப்பட்டது. ஜப்பான் அரசாங்கம் இவருடைய சம்பவத்தை பாடசாலை மாணவர்களுக்கு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதற்காக பாட புத்தகத்தில் இணைத்துக் கொண்டது
ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த நிகழ்வுகள் பற்றிய எவ்வித கருசனையும் காட்டவில்லை
இவ்வாரு இருக்கும் போது 1975ஆம் ஆண்டு ஜப்பான் அரசு ரனதுங்க கருணாநன்தவிற்கு தனது நாட்டில் தொழில் ஒன்றினை வழங்க முன்வந்தது ஆனால் ரனதுங்க கருணாநன்த ஜப்பானுக்கு பயணமாவதற்கு சில தினங்கள் மீத மிருக்கும் போது குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் -----------------இன்று வரை ரனதுங்க கருணாநன்த தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் இலங்கையில் மாத்திரமல்ல ஜப்பான் நாட்டிலும் நீடிக்கின்றது.
ரனதுங்க கருணாநன்தவின் மறைவினை செவியுற்ற அவரது மனைவி சுயநினைவினை இழந்து புத்தி சுயாதீனம் அற்ற நிலைக்கு தல்லப்பட்டாள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் போதுமானவன்
முகநூல் - Next Change

ரோகினியா முஸ்லிம்கள்/ காணமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் எங்கே போனது மனிதநேயம் ???

காணமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை உலகமே ஒன்று கூடி தேடியது, இன்றும் தேடுகிறது. அதில் பயணித்தவர்கள் இறந்திருப்பார்கள் என்றிருந்தாலும் அந்த விமானத்தை தேடும் பொருப்புணர்வை பாராட்டி, ஆஹா.. இதுவல்லவோ மனிதம் என்று பலரும் சிலாகித்தார்கள்.

இன்றோ 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரோகினியா முஸ்லிம்கள் கடலிலே மிதந்து கொண்டுள்ளனர்.
எங்கேடா போனது உங்கள் மனிதம்???

பரிதாபமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவிய வரலாறு..

மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது .
ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் .
மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது .
அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் .
01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
02) பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் )
இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்று 1956 அரசாங்கம் மறுத்தது . இதனால் 1978 இல் இராணுவ அரசாங்கம் அக்யாத் நகரில் பாரிய இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது . இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது .
1990 களில் முஸ்லிம்மீதான தாக்குதல்களை தீவிரமடைந்தது இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர் .

அதேபோல் 1996 இல் மட்டும் 56 பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது . அன்றிலிருந்து இன்றுகூட ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை படுமோசமாக உள்ளது .
இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் இன்று பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதால் உண்ணுவதற்கு உணவில்லை , உடுப்பதற்கு உடையில்லை , வாழ்வதற்கு நாடில்லாமல் சிறு பிள்ளைகள் , கற்பணிப் பொண்கள் வயோதிபர்கள் ,கடலில் தத்தழித்துக் கொண்டு உய்ரைவிடுகின்றார்கள் . இதுதான் ரோஹிங்கியா முஸ்லிம்களின் சோக நிலை .

முகநூல்

நேற்று சீமா, இன்று வித்தியா, நாளை ? ? ? உங்களுடைய சகோதரிகளுக்குக் கூட இது நடக்கலாம்.... கண்டிப்பாக வாசியுங்கள்.

வெறுத்துப் போன மனதுடன் சீமாவுக்காய் எழுந்த கண்ணீரின் தொடராய் இந்தப் பதிவு தொடர்கிறது, என் உடன் பிறவா சகோதரி வித்தியாவைத் தொட்டு.

சீமா.. என் காத்தான்குடி மண்ணின் கறைபடிந்த கைக்குள் அகப்பட்டு மரித்துப் போனவள். பால்மணம் மாறா அந்தப் பச்சைக் குழந்தையும் காமுகன் ஒருவனால் சிதைக்கப்பட்டாள்.. சின்னாபின்னமாக்கப்பட்டாள்.. உருவழிக்கப்பட்டாள்.. இறுதியில் உயிரழிக்கப்பட்டாள்..
ஓங்கியெழுந்த கண்டனங்களும், உரிமைக்கான குரல்களும் சில மாதங்களில் நியதியாய் மெதுமெதுவாய் அமைதியடைந்தன.

இன்று வித்தியா..
ஆசைகளையும், இலக்குகளையும் கனவாய்க் கொண்டவள். மிக அருகில் தெரிந்த பூரிப்பான புது வாழ்க்கையை எதிர்பார்த்து நடந்தவள். யுத்தம் நிர்மூலமாக்கிய பிரதேசத்தில் இருந்து புதியதோர் வாழ்க்கைக்காய் புறப்பட்டவள். என் கண்காணாத் தோழி.. கொரூரமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறாள்.. காமுகர்களின் கோரப் பசிக்கு இரையாகி இருக்கிறாள்.. உயிர்போகும்வரை போராடி தோற்றுப் போய் எமை விட்டும் தூரப்போயிருக்கிறாள்.

மௌனித்துப் போகிறது மனம். சிந்திக்க மறக்கிறது மூளை. மடை திறக்கிறது விழிகள். தோற்றுப் போகிறது விரல்கள்..!

ஏ.. மட மானுட சமூகமே.. என்னவாயிற்று உனக்கு..?
அடிப்படைப் பண்பாட்டு வீழ்ச்சியில் இருந்து அதியுயர் ஆட்சி வரைக்கும் அராஜகமே தளைத்தோங்குவதைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் உனக்கு கைவந்த கலையாயிற்றோ??

நானும் குற்றம் சொல்ல விரும்பவில்லை மேலும்.. இரண்டு பாடங்களை மட்டும் இங்கு பதிந்துவிட்டுப் போய் விடுகிறேன்!

முதலாவது..

என் பதிவை வாசிக்கும் தாய்க்கும் தந்தைக்குமானது.. ஆணுக்கும் பெண்ணுக்குமானது.

உங்கள் குழந்தையைச் சூழ்ந்துள்ள அபாயத்தை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

பாலியல் துஷ்பிரயோகத்தின் அடிப்படை அலகு, வீடுதான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை தன் சொந்தத் தந்தையால், சகோதரனால், கணவனால், பாட்டனால், மாமனால், மச்சானால், சிற்றப்பனால், பெரியப்பானால் என்று அத்தனை உறவுகளும் அதற்கு பல விதங்களில் அச்சுறுத்தலாய் அமைகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

வெளிப்படையாய் சிந்தியுங்கள். மூடி மறைப்பதை விட்டும் பூசி மெழுகுவதை விட்டும் வெளி வாருங்கள்.

உங்கள் குழந்தை உங்களிடம் ஓடோடி வந்து இன்னவர் என்னைத் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று கூறும் என எதிர்பார்க்காதீர்கள். அது ஒருக்காலும் நடக்காது. ஏனெனில் தனக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது அந்தக் குழந்தை.
எங்களில் எத்தனை பேர் வெளிப்படையாய் கற்றுக் கொடுத்திருக்கிறோம் எங்கள் குழந்தைக்கு, எது நல்ல தொடுகை எது கெட்ட தொடுகை என்று ?
எங்களில் எத்தனை பேர் கற்றுக் கொடுத்திருக்கிறோம் எம் குழந்தைகளுக்கு, எது பாலியல் துஷ்பிரயோகம் என்று??

வார்த்தைகளால் பேசுவதையே பாவமாய் நாம் கருதும்போது, எவ்வாறு எங்கள் குழந்தை அதை விளங்கியறிந்து வெளிப்படுத்தும் என நாங்கள் எதிர்பார்ப்பது??

நாங்களே எங்கள் குழந்தையிடம் பேசத் தயங்கும்போது, எவ்வாறு நம் குழந்தை தனக்கு நேரும் அநியாயங்களை எம்மிடம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பது?

இன்று ஆசிரியர் என்ற பெயரில், மௌலவி என்ற பெயரில், மத போதகர் என்ற பெயரில், ஆட்டோக்காரன் என்ற பெயரில், அண்டை வீட்டுக்காரன் என்ற பெயரில், கடைக்காரன் என்ற பெயரில், இன்னும் ஏதேதோ பெயர்களிலெல்லாம் தமக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் ஒவ்வொரு சிறுமியும், சகோதரியும் திணறிக் கொண்டிருக்கின்றபோது…

குறைந்தது ஓரிருவர் அவர்களுக்காய் குரலெழுப்பவும் தீர்வு தேடியும் களமிறங்க.. அந்தோ பரிதாபம்!

என் சமூக உலமாக்கள் என்றும், தலைவர்கள் என்றும் சொல்கின்ற ஒரு சிலர் அவர்களைப் பார்க்கின்ற ஒழுங்கும், அவர்களுக்கெதிராய் முன்வைக்கும் அப்பட்டமான விமர்சன வார்த்தைகளும் அப்பப்பா…!!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கெதிராய் ஒரு சகோதரி தன் ஆதங்கத்தை முன்வைத்தபோது அதற்கெதிராய் ஒரு உலமா(?) மேற்கோள்காட்டிய அவரது படுகேவலமான முகநூல் விளக்கம் இன்னும் என் கண்முன் வந்து போகிறது.
பெண்களுக்கெதிரான வன்முறை என்று நான் பேச வரவில்லை.
இது எங்கள் வீட்டுக் குழந்தைக்கான, என் சகோதரிக்கான, என் தோழிக்கான வெளிச்சொல்ல முடியா அவலநிலை என்ற மனநிலையையே எம் ஒவ்வொருவருள்ளும் ஏற்படுத்த விரும்புகின்றேன்.

குறைந்தது உங்கள் வீட்டுப் பெண்கள் பற்றியேனும் கரிசனை கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு அதனுடைய மொழியில் உலகில் உள்ள எல்லா விடயங்களையும் கற்றுக் கொடுங்கள்.

நல்லதையும் கெட்டதையும் அடையாளம் காண கற்றுக் கொடுங்கள்.
இந்த உலகில் அவளைச்சூழவுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்து வாழக் கற்றுக் கொடுங்கள்.

தைரியமாய் எதிர்த்துக் கேள்வி கேட்கக் கற்றுக் கொடுங்கள்.
தவறுகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டக் கற்றுக் கொடுங்கள்.
தன் உடம்பினதும், உளத்தினதும் இயற்கை மாறுதல்களை இயற்கையாகவே அறிந்துணரக் கற்றுக் கொடுங்கள்.

மார்க்கம் என்ற பெயரில் எதையும் திணிக்க முயலாமல் அவள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூறி மார்க்கத்தை நடைமுறைப்படுத்துங்கள்.

தலையில் இருந்த துணியை ஏன் இறைவன் மார்பையும் நோக்கி இறக்கச் சொன்னான்? என்ற விதியை, இறைவனின் சட்டம் என்ற நிலையையும் தாண்டி அதன் நியாயங்களையும் தாற்பரியங்களையும் தெளிவுபடுத்தி இறைவனின் வார்த்தைகளை உண்மையாக்கி உணரச் செய்யுங்கள்.
எங்கள் வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு அவர்களது சிறுபராயம் முதலே பெண்கள் பற்றிய மகமையையும், யதார்த்தத்தையும் உணர்த்துங்கள்.

பெண்களை தன் சகோதரியாக, தன்னைப் போன்ற ஒரு மனிதப்பிறவியாகப் பார்க்கும் ஒழுங்கைக் கற்றுக் கொடுங்கள். பாலியல் துஷ்பிரயோகத்தால் ஒரு பெண் எந்தளவு தூரம் மன உளைச்சலுக்கு உள்ளாவாள் என்பதை நியாயமாகப் புரிய வையுங்கள்.

ஆணும் பெண்ணும் ஒரே ஆத்மாவில் நின்றும் படைக்கப்பட்ட படைப்பு என்பதை வலியுறுத்திக் கூறுங்கள்.

காதலுக்கும், காமத்திற்கும், யௌவன ஹோர்மோன் மாற்றங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கித் தெளிவுபடுத்துங்கள்.
பிழையான, தவறான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது எவ்வாறு அந்த இடத்தில் சரியாகவும், நீதியாகவும், மனிதனாகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டிக் கொடுங்கள்.

தயவு செய்து உங்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாய் இருங்கள்.
ஒரு ஆண் சிறுவனின் சரியான சந்தர்ப்பத்தில் நாம் ஒரு சிறந்த தாயாக, தந்தையாக, சகோதரனாக, சகோதரியாக இருக்கத் தவறும் பட்சத்திலேயே அந்த வெற்றிடத்தை அவன் மோசமான நபர்களைக் கொண்டு நிரப்புகின்றான் என்கிற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிறுவர்கள் சிறுவர்கள் என்று அவர்களைத் தூரப்படுத்த வேண்டாம்.
80% மூளை 15 வயதிற்கு முன்னரே வளர்ச்சியடைந்து விடுகிறது. அந்த வயதெல்லைக்குள் நாம் சுட்டிக்காட்ட மறந்த பல விடயங்கள்தான் வயதான பின்னர் பக்கச்சார்பாக நோக்கப்படுகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

சீமா, வித்தியா போன்றோர் எங்கள் கைதாண்டிய நிலையில் இருந்தாலும், குறைந்தது எம் வீடுகளில் உள்ள பெண் சிறுமிகளையாவது காக்க வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

நான் பதிவிடும் இரண்டாவது பாடம்:
சீமா ஒரு முஸ்லிமல்ல..
அவள் ஒரு பெண் சிறுமி.. ஒரு சகோதர மனிதப் பிறவி.
வித்தியா ஒரு ஹிந்து அல்ல..
ஒரு பெண் யுவதி.. ஒரு சகோதர மனிதப் பிறவி.
என் ஒட்டு மொத்த மனித சமூகமே…
தயவு செய்து இப்படியான விடயங்களில் எம் இனம் தொடர்பான தனித்துவங்களை கொஞ்சம் தூர வையுங்கள்.

இதனை ஒரு மனிதனுக்கு நிகழ்கின்ற அடிப்படை உரிமை மீறலாக அல்லது ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையாகப் பாருங்கள்.
அன்று சீமாவுக்காய் குரல் கொடுத்த எம் முஸ்லிம் சமூகம் இன்று வித்தியாவுக்காய் குரல் கொடுக்க முன்வரவில்லை.. அனுதாபம் தெரிவிக்க தயாராகவில்லை..அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்படவில்லை..!

இன்று வித்தியாவுக்காய் குரல் கொடுக்கும் என் சகோதர சமூகம், அன்று சீமாவுக்காய் கண்டனக் கோஷமெழுப்பவில்லை.. போராட்டம் செய்யவில்லை.. நீதிக்காக அழுத்தம் கொடுக்கவில்லை..!

ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளுமே அதைத் தமக்குரிய கடமையாய் கைக்கொண்டது.

நாம் இவ்வாறுதான் மாற்றப்பட்டிருக்கிறோம்.
எமது அரசியல்வாதிகளும் எமது மதத் தலைவர்களும் இதைத்தான் அறுவடையாய் தந்திருக்கிறார்கள் எமக்கு!!
மனிதத்துவத்தை தாண்டிய ஒன்றாய் மதம் எம் தலைக்கடித்துவிட்டது.
இல்லை இல்லை..
அவ்வாறு எம் மூளைகள் சலவை செய்யப்பட்டுவிட்டது!!!

இஸ்ஸதுன்னிஸா, மருத்துவபீடம் – கிழக்கு பல்கலைக்கழகம்-

சக்தி ஊடக வலையமைப்புக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் ஒரு அன்பான வேண்டுகோள்.

இலங்கையில் உள்ள சிறு பான்மை மக்களிடையே மிகவும் பிரபலியமாய் விளங்கும் தொலைகாட்சி செய்தி ஊடகம் என்றால் , அது சக்தி வலையமைப்பு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே, ஆனால் இந்த சக்தி செய்தி வலையமைப்பு , நடுநிலை பேணல் என்ற உன்னதமான விடையத்தை தனது செய்திகளில் கடைப்பிடிக்கின்றது என்றால் , நிச்சயம் அந்த நடுநிலைமை என்ற பதம் அவர்களின் செய்திகளில் , அதல பாதாளத்தை நோக்கி சென்றிருப்பதை நாம் கண்கூடாக காண முடியும் .

ஒரு பொறுப்புவாய்ந்த ஊடகமாக செயற்படவேண்டிய இவ்வூடகம், ஏதோ , பழி வாங்கும் மனநிலையில் செய்திகளை , எந்தவித ஆதாரமும் இன்றி தொகுத்து வழங்குவது மிகவும் கேவலத்துடன் கூடிய வரம்பு மீறலாகும்.

காடுகளை காப்பாற்ற போகின்றோம் என்ற தொனியில், தாம் பட்ட காயத்துக்கு மருந்து தடவும் ஒரு ஈனத்தனமான திட்டமிடப்பட்ட பொய்யான இட்டுககட்டல்களை அவிழ்த்து விடுவதன் மூலம், தாமும் ஒரு மூன்றாம் நிலைக்கு கீழ் உள்ள ஒரு சாதாரண செய்தி ஊடகம் என்ற உண்மையை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டனர் அவர்கள்.

பொது மக்களின் , அடிப்படை உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட செய்திகளை , எந்தவித தேடலும் இன்றி , ஆதாரங்களும் இன்றி , வில்பத்து காடுகளில் வாழும் ஐந்தறிவு விலங்குகள் போல , முன்னுக்குப்பின் முரணாக , முகங்களை மறைத்து, சேலை கட்டிய கோழைகளைப்போல தொகுத்து வழங்கியதன் மூலம், தமக்கும், இதற்கு முன் இலங்கையில் இருந்த பேரினவாத குழுக்களுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்று பறை சாற்றி சென்றுவிட்டது சக்தியின் நியூஸ் பர்ஸ்ட் குழுமம்.

ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவருடனான மோதல் போக்கில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி மக்களின் , மீள் குடியேற்றம் என்ற அடிப்படை உரிமையில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிடும் சக்தி செய்தி வலையமைப்பு மிகவும் அசிங்கமான முறையில் கலங்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்.

ஊடக சுதந்திரம் என்பது , நியாயமான முறையில் , மிகவும் உணர்வுபூர்வமான வகையில், தீர விசாரிப்பதன் மூலம் வெளிக்கொணரப்படும் செய்திகளே என்பது எழுதப்படாத விதி என்றாலும், அதில் ஆகக்குறைந்தது, தீர விசாரிப்பை கூட செய்யாமல், சிலரின் முகங்களை மூடி,உண்மைக்கு புறம்பாக , ஒரு சமூகத்தின் உரிமையை கொச்சைப்படுத்துவது , நிச்சயம் ஊடக விபச்சாரம் என்பதை நான் இங்கு எந்தவித ஒளிவு மறைவுமின்றி தெரிவிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

பழிவாங்கல் என்ற தனிப்பட்ட ஒரு திட்டமிட்ட செயலினால் , நீங்கள் தெரிவுக்கும் செய்திகள் மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் என்றால், இன்ஷா அல்லாஹ் , அந்த பழிவாங்கள் கூட ஒரு வட்டமாய் மாறி , என்றோ ஒருநாள் நிச்சயம் உங்களையும் பழிவாங்கும் என்பதை மட்டும் நினைவில் நிறுத்தவும்.

madawalanews

ஒரே சிம் கார்டில் ஒன்பது நம்பர் பயன்படுத்தலாம்.

உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒருநொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.

உலக பிரபலமான ப்ளாக்பெரி நிறுவனம் விர்ச்சுவல் சிம் ப்ரோவிஷனிங் எனும் தொழில்நுட்ப சேவையினை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது.

இந்த சேவையின் மூலம் ஒரே சிம் கார்டினை கொண்டு ஒன்பது நம்பர்கள் வரை ஒரே கருவியில் பயன்படுத்த முடியும்.

ஒரே  மாதம் முப்பது லட்சம் டூயல் சிம் கொண்ட மொபைல்கள் விற்பனையாகும் நாட்டில் இந்த சேவை நல்ல வரவேற்பை பெறும் என்பதோடு பலருக்கும் இது பயனுள்ளதாகவும் இருக்கும் என ப்ளாக்பெரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லால்வானி தெரிவித்தார்.
இந்த சேவைக்கான தொழில்நுட்பம் தற்சமயம் தயாராக உள்ளது, இருந்தும் இதற்கான அனுமதி பெறுவது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சுனில் தெரிவித்தார்.

புது வரவுகளால் பொலிவுறுமா அல்பத்ரியா

கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் கல்விக்குப்புத்துயிரூட்டி பல துறைகளிலும் எம்மண்ணின் மைந்தர்களை பல துறைகளிலும் பிரகாசிக்கச்செய்த பெருமை அல்பத்ரியாவுக்கு உரித்தானதென்றால் அது மிகையாகாது.

எனினும் கடந்த சில வருடங்களாக எமதுரின் கல்வித்துறையில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டு பின்னடைவை அடைந்துள்ளதாக எமதுரின் புத்திஜீவிகள் மத்தியில் அலசப்பட்டு வந்தது.மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன
இந்த வகையில் ஆசிரியர் வளங்களை பரிமாறிக்கொண்டு மாணவர்களின் கல்விக்கு புத்துயிரூட்ட  வழி வகைகளை மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

இம் முயற்சி சிறந்ததாக அமைய நாம் பிராத்திப்பதோடு எமதுரின் கல்வி நிலை முன்னேறி பல துறைகளிலும் எமது மைந்தர்கள் மிளிர பிராத்திப்போம்.