கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈத் பெருநாள் தொழுகை கஹட்டோவிட அல்பத்ரியா ம.வி மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து மௌலவி மஸ்ஊத் ஸலபி அவா்களின் உரை இடம் பெற்றது.
இவ்வுரையில் சமகால முஸ்லிம்களின் நிலை பற்றி எடுத்துக் கூறியதுடன் குறிப்பாக மியன்மார் மற்றும் ஸிரியாவின் இன்றைய நிலை பற்றிக்குறிப்பிட்டுக்காட்டினார். இம்மக்களின் அவல நிலைக்காக
துஆ செய்வதே எம்மால் செய்ய வேண்டிய ஒரு பேருதவி என்றும் குறிப்பிட்டார். மேலும் முஸ்லிம் சமூகத்தின் பலம் ஒற்றுமையிலே தங்கியிருப்பதாகவும் இவ்வொற்றுமை ஏகத்துவ கொள்கையில் ஏற்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஏகத்துவமில்லாத வேறு எந்த வகையில் ஒற்றுமைப்பட்டாலும் அவ்வொற்றுமை பிரயோசனமற்றது என்றும் குறிப்பிட்டார். மைதானத் தொழுகையில் சுமார் 1200 பேரளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Photos Update Click here:
0 comments:
Post a Comment