கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் வகையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்ட பின்னர் அதிருப்தியடைந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கிய தரப்புக்கள், கூட்டமைப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து அந்த தரப்புக்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, துமிந்த திஸாநாயக்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து தமது முடிவை அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த அணியினர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் முன்னணி ஒன்றை அமைப்பதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரின் கீழ் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கப்பட்டு அதுவே மஹிந்த ராஜபக்சவின் தரப்புக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும்.
இதன்கீழ் சம்பிக்க ரணவக்க மற்றும் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் கொழும்பில் போட்டியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு எதிரான நல்லாட்சி ஐக்கிய தேசிய முன்னணியில் மேலும் பலர் இணைவு
மஹிந்தவுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து மேலும் பலர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் பொதுத்தேர்தலில் இவர்கள் போட்டியிடவுள்ளனர்.
ஏற்கனவே இந்த முன்னணியில் அர்ஜூன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க, ராஜித சேனாரத்ன, ஹிருனிக்கா, ரத்தன தேரர், ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
தற்போது அது விரிவாக்கப்பட்டு எஸ். பி.திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, பியசேன கமகே, சரத் அமனுகம, ரெஜினோல்ட் குரே, சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, நியூமல் பெரேரா ஆகியோர் புதிய அணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் புதிய முன்னணியில் இணைந்து கொள்வதற்கு முன்னர், ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனுவில் கைச்சாத்திட்டமையை திரும்பப் பெற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இந்த வாரம் லண்டனில் இருந்து நாடு திரும்பியவுடன், விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தின் கீழ் பௌத்த பிக்குகள் போட்டியிட முடியாது என்று யாப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அத்துரலியே ரத்தனவின் விடயம் தொடர்பில் தீர்வுக்காணப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment