கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கம்பஹா மாவட்டமும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும். (By Abdul Careem)

இன்று தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனேகர் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுத்திருப்பர். இம்முடிவுகளின் தொகுப்பே இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு எம்மை ஆளப்போகிறது. இவை சாதாரண முடிவுகளல்ல எம்மை ஆளப்போகும் எமது தலையெழுத்துக்களின் பிரதிகள்.

கம்பஹாவில் UNPல் ஷாபி ரஹீமும் UPFAல் A.H.M நௌசாதும் JVPல் கவுஸ் மொஹிடீனும் போட்டியிடுகின்றனர். இதில் ஒப்பீட்டளவில் ஷாபி ரஹீமுக்கே அதிக விருப்பு வாக்குகள் கிடைக்கும் சாத்தியமுள்ளது. எமது வாக்கு ஒரு அந்நியருக்குப் போவதால் தனிப்பட்ட இலாபங்கள் தவிர்ந்து சமூகத்திற்கான பிரயோசனங்கள் மிகக் குறைவே. கம்பஹாவைப் பொறுத்தவரை ஒரு முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றைய சூழ்நிலையில் அசாத்தியமே. இருப்பினும் ஷாபி ரஹீமுக்கு இடும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியலுக்கான பேரம் பேசலை வலுப்படுத்த உதவும். எனக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும், ஷாபி ரஹீமுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் இவர்களது பல நகர்வுகள் நான் எனக்கு இயன்ற மட்டங்களில் விமர்சித்தது உண்டு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் முஸ்லீம் பிரதி நிதித்துவத்தை விட முஸ்லீம் கட்சியொன்றின் பிரதிநிதித்துவம் இன்றியமையாதது. இதுவே எமக்கு பாதகமான பல சட்டங்கள் பாராளமன்றத்தின் மூலம் அமுலாவதை தடுக்க உதவும். பதிருத்தீன் மஹ்மூத், ஷேர் ராஷிக் பரீத் போன்ற தலை சிறந்த அரசியல் தலைவர்களின் மத்தியில் அஷ்ரபின் காலம் அரசியலின் ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படக் காரணம் அஷ்ரப் வெறுமனே முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை விடுத்து பலமான முஸ்லீம் கட்சியொன்றின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் நிறுவியதே. இன்றைய அரசியலில் பேரம் பேசலின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுப்பதே அனுகூலமானது. இது தனி நபரை விட ஒரு கட்சியினால் முன்னெடுக்கவே சாத்தியங்கள் அதிகம் (கடந்த காலங்களிம் முஸ்லீம் கட்சிகளின் பேரம் பேசல் தமக்கான அமைச்சு, பிரதி அமைச்சுப் பதவிகளுடனும் சுருக்கப்பட்டது என்பது என்னவோ கசப்பான அனுபவமே.) 

இறுதியாகவும் சுருக்கமாகவும் 

1.UPFA ற்கு இடும் ஒவ்வொரு வாக்கும் பட்டுப்போய்கொண்டிருக்கின்ற மகிந்த எனும் விசக்கொடிக்கு ஊற்றப்படுகின்ற நீர் துளிகளாக அமையலாம்.

2.JVP ற்கு இடும் வாக்குகள் அவர்களது 10 உடன் சேர்ந்த 11 ஆவது வாக்காகவே அமையும். இன்னும் இவர்கள் விருப்பு வாக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் JVPன் முஸ்லீம் வேட்பாளருக்கு இடும் வாக்கால் பெரிய அழுத்தங்கள் உருவாகப் போவதில்லை.

3.UNP ன் அந்நியர் ஒருவருக்கு இடும் வாக்கால் அவர் சார்ந்த பிரதேச முஸ்லீம்களுக்கே சாதகங்கள் ஒலிய இலங்கையின் முஸ்லீம் சமூகத்திற்கும் பெரியளவில் சாதகங்கள் இருக்கப் வாய்ப்பில்லை.

4.ஷாபி ரஹீமிற்கு இடும் வாக்குகளால் ஒன்று அவரது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதியாகும் அல்லது முஸ்லீம் காங்கிரசுக்கான தேசிய பட்டியல் பேரம் பேசலுக்கு உருதுணையாக அமையும்.

இவற்றில் முன்னைய மூன்றை விடவும் நான்காவது ஒப்பீட்டளவில் சிறந்தது. ஏனெனில் இது ஒரு முஸ்லீம் கட்சியின் இருப்பை உறுதிப்படுத்தும்.

(நாம் எமது ஒவ்வொரு வாக்கையும் இட எமது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இவ்வளவு சித்திக்கும் போது ஷாபி ரஹீமும் முஸ்லீம் காங்கிரசும் தமது அற்ப இலாபங்களுக்கு அப்பால் ஒரு பொதுத்தளத்தில் சமூக நலன்களுக்காக வஞ்சகம் இல்லாமல் சிந்திப்பது மாபெரும் கடமையாகும்.)

0 comments:

Post a Comment