கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்வோம்

சுமார் 70,000 த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட கம்பஹா மாவட்டத்திலிருந்து விகிதசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1989 ஆண்டு முதலாவதாக நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் தொடக்கம் 2010 ஆண்டு இறுதியாக நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் எமது மாவட்ட முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவோ முஸ்லிம் கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கோ எமது மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களின் அரசியல் ரீதியான ஒற்றுமையின்மை அரசியல் விழிப்புணர்வின்மை வாக்களிக்க செல்லாம இருப்பது கட்சியில் போட்டியிடுகின்ற பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கே மூன்று விருப்பு வாக்குகளையும் அளிப்பது அற்ப சொற்ப இலாபங்களை கருதி வாக்களிப்பது போன்ற காரணங்களால் தொடர்ந்தும் எம்மாலே இழக்கப்பட்டுக் கொண்டு வருகின்ற கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இம்முறையாவது இன்ஷா அல்லாஹ் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான கௌரவ ரணில் விக்கரமசிங்க அவர்களுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவுப் ஹகீம் அவர்களுக்குமிடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் எமது மாவட்டத்தின் ஒரே ஒரு முஸ்லிம் மாகான சபை உறுப்பினருமான கௌரவ சாபி ரஹீம் அவர்களை ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் (18ஆம் இலக்கத்தில்) ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பதனை நாங்கள் அனைவரும் அறிவோம்.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்ட முஸ்லிம் வாக்களர்களில் 99 சதவீதமானவர்கள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கே வாக்களிப்பதிருப்பதனாலும் 2004 ஆண்டு தொடக்கம் இன்று வரை 3 முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினரான கௌரவ சாபி ரஹீம் அவர்கள் தனது 11 வருட பதவிக்காலத்தில் கட்சி, பிரதேச வேறுபாடுகள் இன்றி பல கோடிக்கணக்கான நிதி ஓதிக்கீடுகளின் மூலம் மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் கிராமங்களுக்கும் தன்னாலான சேவைகளை செய்துள்ளார். எனவே எமது பெறுமதி முக்க வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு அளித்து எமக்கு இருக்கின்ற 3 விருப்பு வாக்குகளின் ஒன்றினை கௌரவ ஷாபி ரஹீம் அவர்களின் வெற்றி இலக்கமாகிய 18 ஆம் இலக்கத்துக்கும் அளித்து கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய மக்கள் காங்கிரஸ் மிகவும் அன்பாய் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

பின்வரும் முக்கியவிடயத்தை பற்றியும் வேட்பாளராகிய கௌரவ சாபி ரஹீம் அவர்கள் கருத்திற்கொண்டு செயற்பட்டால் முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இன்ஷா அல்லாஹ் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலிலே தான் மாத்திரமே மீண்டும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் 4000 விருப்பு வாக்குகளை பெற்று 2ஆம் இடத்துக்கு தெரிவாகும் வேட்பாளருக்கு தனது பதவிக்காலத்தில் இரண்டு வருட காலத்தினை தருவதாக கௌரவ சாபி ரஹீம் அவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் வாக்குறுதி அளித்தார். இத்தேர்தலில் போட்டியிட்ட கஹடோவிடையை சேர்ந்த சகோ. முஸ்தாக் மதனி ஹாஜியார் அவர்கள் கஹடோவிட, ஒகடபொல, உடுகொட, திஹாரிய, மல்வான உட்பட ஏனைய முஸ்லிம் கிராமங்களினதும் அமோக ஆதரவுடன் சுமார் 4300 விருப்பு வாக்குகளை பெற்று பட்டியலிலே 2ஆம் இடத்துக்கு தெரிவாரனார். எனவே அளிக்கப்பட வாக்குறுதி சம்பந்தப்பட்ட விடயங்களை கௌரவ சாபி ரஹீம் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டுமெனவும் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கமால் அப்துல் நாஸர் (JP)
முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்
பொதுச் செயலாளர்
ஐக்கிய மக்கள் காங்கிரஸ்
இல. 86, கஹடோவிட
077 97 10 282

0 comments:

Post a Comment