கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலங்கையில் மக்களைவிடவும் தொலைபேசிகள் அதிகம்!



இலங்கை சனத்தொகை 2010ம் ஆண்டில் 20.65 மில்லியனாக இருந்தது. ஆயினும் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பாக தொலைபேசித் துறையின் வளர்ச்சி அதைவிட கூடுதலாக இருக்கின்றது.


இலங்கையின் சனத்தொகை 20.65மில்லியனாக இருந்தாலும் எங்கள் நாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், வீடுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ள தொலைபேசிகள் மற்றும் சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் என்பன 20.8 மில்லியனாக இருக்கின்றது.

இந்த புள்ளி விபரங்களின் படி எங்கள் நாட்டின் ஒவ்வொரு பிரஜையிடமும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் தொலைபேசிகள் இருப்பது ஆதாரபூர்வமாக இப்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் தெரிவித்த தொலைத்தொடர்புகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் பின்தங்கிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களும் ஒரு கையடக்கத் தொலைபேசியை வைத்திருக்கிறார்கள் என்றார்.

வயலுக்கு சென்று விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் கையிலும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இன்று இருக்கின்றன. சில பிச்சைக்காரர்கள் கூட இரகசியமாக கைத்தொலைபேசிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பொதுவாக பாடசாலைகளுக்கு கைத்தொலைப்பேசிகள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவ, மாணவிகளும் இந்த தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து தங்கள் பைகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவசியம் ஏற்படும் போது அவற்றை அவர்கள் இயக்குகிறார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நூறு பேர்களுக்கு 100.8 கையடக்கத் தொலைபேசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் விடலைப் பருவத்தை சேர்ந்வர்களை தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய ஆபாச படங்களைக் கொண்ட இணையத்தளங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வசதியாக இருக்கின்றதென்று ஆசிரியர்களும் பெற்றோரும் கவலை கொண்டுள்ளார்கள்.

1 comments:

யதார்த்தி said...

விவசாயி முதல் விற்பன்னர் வரை அனைத்து தரப்பினரும் செல்போன் பாவனையாளர்களே என்பது இலங்கையின் தொழிநுட்ப அறிவு வீதத்தை எடுத்துக்காட்ட பெருமையாக இருந்தாலும், இள வயது மாணவர்கள் குறிப்பாக முஸ்லிம் பெண் மாணவிகள் மத்தியில் மலிந்து போயுள்ள இந்த அதி தீவிர செல்போன் பாவனை ஆரோக்கியமானதொரு இஸ்லாமிய சூழலுக்கு உகந்ததா எனக் கேட்டால் இல்லை என்பது புத்தி ஜீவிகளின் பதிலாக இருக்கும்.
கஹடோவிடவைப் பொறுத்தவரை இன்று 9ஆம் ஆண்டு சிறுமிகள் தொடக்கம் உயர்தரம் படிக்கும் மாணவிகள் வரை பெற்றோர் செல்போன் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். கேட்டால், மகள் எங்கே இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளத்தான் என்பார்கள். கடைசியில் எங்கே என்று தெரியாமல் ஓடிப்போவதற்கு இதுதான் காரணம் என்பதை இவர்கள் அறிவதில்லை.
இப்படி கூறும் பொது பெரும்பாலான பெற்றோர் தரப்பிலிருந்து வரும் பதில் எங்கள் பிள்ளை அப்படியில்லை, ஐந்து நேரமும் தொழுகிறார், தவ்ஹீத்வாதி, ஆலிமா படித்தவள் என்பதுதான். இறுதியில் இவர்களின் பிள்ளைகள்தான் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை புள்ளிவிபரங்கள் கூறித்தெரிய வேண்டியதில்லை.
முதலில் wrong number இல்தான் தொடங்கும். அடுத்து "நேத்து call பண்ணி disturb பண்ணிட்டேன் sorry.." என்பார்கள். இறுதியில் wrong sideக்கே ஓடிவிடுவார்கள். இப்படித்தான் கூடுதலான செல்போன் காதல் என்ற கருமாதி நிகழ்கிறது.
இதற்கு எல்லாம் அடிப்படை காரணம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு செல்போன் வாங்கிக்கொடுப்பதும் அவர்களை முறையாக கண்காணிக்க தவறுவதுமாகும்.
இஸ்லாத்தை பொறுத்தவரை ஓர் ஆண் இன்னொரு பெண்ணுடன் தனித்து நின்று கதைப்பது தடுக்கப்பட்டதாகும். இதைத்தான் அப்பட்டமாக இந்த செல்போனும் செய்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் என்னாகும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதுமில்லை.
மிஞ்சிப்போனால் பிள்ளை எங்கே என்பதை தெரிந்துகொள்ளலாம் என்ற ஒரு நன்மையே தவிர மீதி 99% வீதமும் அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குவதற்கே துணை போகும் இந்த இள வயது செல்போன் பாவனை.
இன்னும் சொல்லப்போனால் பெற்றோர் பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு call பண்ணி கேட்கும் போது அவர்களுக்கு பொய் சொல்வதற்கும் இது ஏதுவாகின்றது. ஆகவே பிள்ளைகளின் நிலை பற்றி அறிய மாற்று வழிகள் ஏதாவது யோசிக்கலாம்.
இதுபற்றிய யதார்த்தமானதொரு உரையை கீழுள்ள சுட்டியில்(link) தொடுப்பதன் மூலம் பார்க்கலாம்.
(பார்க்க பாகம்-27)
http://onlinepj.com/kutumbaviyal/islam_koorum_kudumbaviyal/

Post a Comment