சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன, அல் பத்ரியாவின் சிறந்த பெறு பேறாக 9 A ..
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளை http://www.doenets.lk/ எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவ, மாணவிகளில் சிறந்த பெறு பேறாக ஒரு மாணவி 9 A (அதி விசெட சித்திகள்) பெற்றுள்ளதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.
7 comments:
அல்பத்ரியா மாணவர்களின் நிலைமைகள் எப்படி?
மாணவர்களின் சிறந்த பெறுபேராக 7A, 2B ஆம்.
சிறந்த பெறுபேறு எடுத்த எமது மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
மாஷாஅல்லாஹ் சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளதாம். வாழ்த்துக்கள்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற எமது பிள்ளைகளை நானும் வாழ்த்துகிறேன். அதேனேரம் உயர் தர வகுப்பு மாணவகளின் நிலைதான் கவலையளிக்கின்றது.
கடந்த சில நாட்களாகவே உயர்தர வகுப்புக்களில் பாடங்கள் ஒழுங்காக நடைபெறாமல் இருந்து வருவது குறித்து சம்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கவலைப்படுகின்றனர். ஏனைய வகுப்புக்களுக்குப் ப்ரீட்சை நடைபெறுவதக் காரணம் காட்டிப் பாட வேளைகளில் பாடத்துக்கு வராமல் காலத்தைக் கடத்தி வருகின்றார்களாம் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் சிலர். மறு புறமாக இதுகாலவரை ஏதோ பேரளவிலாவது இயங்கிவந்த வர்த்தகப் பிரிவைக்கூட இழுத்து மூடும் பரிதாப நிலையும் தோன்றியுள்ளதாம்.
வர்த். பிரிவு மட்டுமன்றி, கலைப் பிரிவும் பாடசாலை மீது நம்பிக்கை இழந்துள்ளதைக் காணமுடிகின்றது. இப்படியே போனால் ஏ.எல். எங்கு போய் முடியும்?
கதார் நாட்டுச் சங்கமே (கெஸ்க்) நீங்களாவது இது பற்றிச் சிந்திக்கக் கூடாதா????
குடும்பம் குடும்பமாகச் சென்று உம்ரா செய்வதை விட இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையாவது இவர்கல்சிந்திக்க க் கூடாதா????
எமதூரின் கல்வி முன்னேற்றம் குறித்து அலட்டிக்கொள்ளும் புத்தி ஜீவிகளே இது உங்கள் கவனத்துக்கு!
ஓ. எல். திருப்தி தந்தாலும் ஏ.எல். நிலைதான் கவலையளிகின்றது.
கடந்த சில நாட்களாகவே உயர்தர வகுப்புக்களில் பாடங்கள் ஒழுங்காக நடைபெறாமல் இருந்து வருவது குறித்து சம்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கவலைப்படுகின்றனர். ஏனைய வகுப்புக்களுக்குப் ப்ரீட்சை நடைபெறுவதக் காரணம் காட்டிப் பாட வேளைகளில் பாடத்துக்கு வராமல் காலத்தைக் கடத்தி வருகின்றார்களாம் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் சிலர். மறு புறமாக இதுகாலவரை ஏதோ பேரளவிலாவது இயங்கிவந்த வர்த்தகப் பிரிவைக்கூட இழுத்து மூடும் பரிதாப நிலையும் தோன்றியுள்ளதாம்.
கலைப் பிரிவு மாணவர்கள் கூட பாடசாலை மிது நம்பிக்கை இழந்துவிட்டுள்ள நிலயையே காணமுடிகிறது.
எமதூரின் கல்வி முன்னேற்றம் குறித்து அலட்டிக்கொள்ளும் புத்தி ஜீவிகளே! கெஸ்க் சங்கமே! இது உங்கள் கவனத்துக்கு!
very happy to hear kahatowita O/L results. As well Uduogoda and Thihariya also same best results.
Post a Comment