கஹடோவிடாவில் போதைபொருள் விற்பனையா?
எமது அயல் ஊர்களான ஓகடபொல உடுகொட திஹாரிய போன்ற ஊர்களில் அவ்வப்போது இதுபோன்ற செய்திகளை நாம் செவியுற்றுள்ளோம். எனினும் இச்சீரழிவுகளிலிருந்து தப்பிய நிலையில் காணப்பட்ட எமது ஊரில் அண்மையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கஹடோவிடா பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் எமது ஊர் நபர் ஒருவர் முஸ்லிமல்லாதோருக்கு நள்ளிரவு நேரங்களில் கஞ்ஜா விற்பனை செய்கின்றார் என்ற தகவல் ஊர்மக்களிடைய பரவலாக கதைக்கப்டுகின்றன. குறித்த நபர் ஒரு சில அரசியல்வாதிகளின் உதவிகளோடு தான் இச் செயலை மேற்கொள்கிறார் எனவும் இவர்கள் கூறிகின்றார்கள்.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட எமது ஊரிலுள்ள துடிப்புள்ள சில இளைஞர்கள் அவர் இரவுவேளை பாலிகா வித்தியாலயத்திற்கு அறிகே உலாவிக்கொண்டிருக்கும் போது, நிறுத்தி விசாரிக்கவும் அவர் இவர்களுடன் வாக்குவாதப்பட்டுள்ளனர். எனவே குறித்த நபர் பதிவாகியுள்ள பள்ளிவாசல் நிறுவாகத்திற்கு இத்தகவலை இவ்விளைஞர்கள் கொண்டுசென்றுள்ளனர். அவர்களும் இவரை விசாரிக்கவும் குறித்த குற்றச்செயலை புரிந்ந நபர் தான் அவ்வாறு நடந்துகொள்ளவேயில்லை எனவும் தான் அக்குற்றச்செயலை செய்திருந்தால் தன்னைக் கையுமையுமாக பிடிக்குமாறும் வாதிடுகிறார்.
எது எவ்வாறாயினும் அல்லாஹ் ஹராமாக்கிய விடயங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. தவறு செய்வதைக்கண்டு தடுக்காவிட்டால் நாமும் பாவியாவோம். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றவேண்டும்.
போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் முற்றாக தடுக்கிறது
போதைப் பொருள் பாவனை ஒரு மனிதனிடத்தில் பல வகையான தீங்குகளை எதிர்நோக்கச் செய்கிறது.
1. மார்க்கத்துக்கு முரணாகச் செயற்படல்
2. பொருளாதாரச் சிக்கல்களுக்கு உள்ளாக்கல்
3. உடலில் பாரிய நோய்களை உண்டாக்கல்.
4. தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தல்.
1. மார்க்கத்துக்கு முரணாகச் செயற்படல்
2. பொருளாதாரச் சிக்கல்களுக்கு உள்ளாக்கல்
3. உடலில் பாரிய நோய்களை உண்டாக்கல்.
4. தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தல்.
இக்கொடிய போதைப் பொருட்கள் பாவனை பற்றியும் அதனால் ஏற்படும் பாரிய பாதிப்புக்கள் பற்றியும் அல்குர்ஆன், ஹதீஸ்களில் வருகின்ற சில அறிவிப்புக்கள் வருமாறு.
- போதை தரக்கூடியவைகளையும் இன்னும் சோர்வை ஏற்படுத்தக் கூடியவைகளையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
- விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் வணக்கத்துக்காக நடப்பட்ட சிலைகளும், அம்பு எறிந்து குறிப்பார்த்தலும் (இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவைகளாகும். ஆகவே இவைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி வெறுவீர்கள்.
- அல்குர்ஆன் 5:90 - அல்லாஹுத்தஆலா மதுபானத்தையும் அதனைக் குடிப்பவனையும், குடிக்கச் செய்பவனையும் விற்பனை செய்பவனையும், வாங்குபவனையும் அதனைச் சுமப்பவனையும், சுமக்க வைப்பவனையும் சபித்துள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூதாவூத்
- நபி (ஸல்) கூறியுள்ளார்கள் மனிதனின் சுய புத்தியை மாற்றக்கூடிய அனைத்து மதுபானங்கள் போதைப் பொருட்கள் அருந்துவதை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. - புகாரி முஸ்லிம்
- நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? - அல்-குர்ஆன்
நீங்கள் உங்கள் கைகளால் உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:15)
3 comments:
எமது ஊரிளா? அல்லாஹ் காப்பாற்றவேண்டும். யார் அந்த மூதேவி.... அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும். இல்லாவிட்டால் அல்லாஹ்வுடைய சோதனை இவனுக்கு மிகக்கொடியாதாக இருக்கும்.
i think its better to keep an eye on him. next time publish his name with family.
எமது ஊரிலும் போதைப்பொருள் விற்பனையா? எங்கே இந்த பள்ளிவாயல்கள், தேளஹீத் வாதிகள், இயக்கவாதிகள்... இவர்களுக்கெள்ளாம் தத்தமது அடைக்களங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமென்றால் அதுபோதுமென்று மௌனம் காப்பவர்கள்தானே!
Post a Comment