சினிமா இசையுடன் சங்கமித் ஈத் பெருநாள் விளையாட்டுப் போட்டி
பெருநாள் என்பது சந்தோசமான ஒரு தினமாகும். இதில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயலாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களும் பெருநாள் தினத்தன்று விளையாட்டுப் போட்டியை கண்டு கழித்துள்ளார்கள் என்பதை நாம் ஹதீஸ்களின் மூலம் அறிகின்றோம். ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவா்கள் நபியவர்களின் முதுகுக்குப்பின்னாலிருந்து விளையாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு கழித்துள்ளார்கள் என்றும் நாம் அறிகின்றோம்.
எனினும் இன்றைய தினம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சினிமாப் பாடல்களை ஒளிபரப்பியமை பற்றி பலரும் பலவாறு கருத்துத் தெரிவிக்கின்றனர். பலகாலமாக மறைந்து போயிருந்த பெருநாள் தின விளையாட்டுப் போட்டி மீண்டும் நடாத்தப்படுவது சந்தோசமாக இருந்தாலும் சினமாப்பாடல்கள் மற்றும் இசையுடன் கூடிய பாடல்கள் ஔிபரப்பியமை மார்க்கத்தில் எந்தளவுக்கு அங்கீகாரம் பெற்ற விடயம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆரம்பகாலம் போலன்றி மார்க்க விடயத்தில் விளிப்புணர்வு ஏற்பட்டு வரும் இத்தருணத்தில் முன்மாதிரியான ஒரு விளையாட்டுப் போட்டியாக இது அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஓரளவு முன்மாதிரியான விடயங்களைக் காட்டித் தந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த வருடங்களில் நடைபெற்றமை(தஃவா பள்ளியின் பள்ளிக் கூடம், Good child pre school) குறிப்பிடத் தக்கது.
11 comments:
சரியாகச் சொன்னீர்கள். தமிழ் சினிமாப்பாடல்களுடன் தொடங்கிய பெருநாள் விளையாட்டுப்போட்டி இன்று இங்கிலூசுப் பாடல்களுடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது. என்ன வித்தியாசம் என்றால் நேற்றைய தினம் ஏதோ ஒருவகையில் அதிகாரத்தில் உள்ளவர்களால் (பள்ளிவாசல், ஜமாத்துக்கள், இயக்கங்கள்,...) இவற்றுடன் அந்த ஜாஹிலியத் அரங்கேற்றப்பட்டது. இன்று இந்த வாலிபர் கூட்டத்தினால் அறங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் யாரிடம் போய் முறையிடுவது. யாவர்ரையும் தடுக்கவேண்டியவர்களே இந்த ஜாஹிலியத்தை செய்யும் போது அவர்களால் இவர்களைத் தடுக்கமுடியுமா. அல்லாஹ் இவர்றையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறான். இதைவிடவும் மேலான ஜாஹிலியத்தை எல்லாம் உங்களுக்கு நல்ல இனிமையான, சந்தோசமான விடங்களாக காட்டுவான். அதன் பின்னர் ஒரே அடியாக அல்லாஹ்வுடைய சோதனை இந்த ஊரை அடையும் (அழிக்கும்) அப்போதும் இந்த மார்க்கம் பேசிக்கொண்டிருக்கும் இந்த தாயிக்களெல்லாம்தான் இதற்கு பொறுப்பு என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.
யா அல்லாஹ் எங்களது ஊரைக் உண்னுடைய சோதனையிலிருந்து காப்பாற்றுவாயாக, வீனாக எங்களையெல்லாம் தன்டித்துவிடாதே...
சகோதரா உங்கள் ஆதங்கம் புரிகிறது. என்ன செய்ய. ஆனாலும் ஒருவிடயம். ஒரு முறை நபியவர்கள் பெருநாள் தினமன்று அபுபக்கர்( றழி)அவர்களுடன் தனது வீட்டுக்கு வரும்போது இரு சிறமிகள் ஜாஹிலிய்யாக்காலப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். உடனே அபுபக்கர் அவா்க்ள கோபமுடன் நிபியவர்ர்களின் வீட்டில் ஜாஹிலியத்தா எனக் கோபப்பட்டார். உடனனே நபியவர்கள் எனது உம்மத்துகக்கு இரண்டு தினங்கள் சந்தோசமான நாட்கள் என அவரை அமைதிப்படுத்தினார். இப்போது சொல்லுங்கள் நபியவர்கள் இன்று இருந்தால் இதனை எப்படிப் பார்த்திருப்பார்....
கஷ்டோடியான் உங்களது ஆதங்கமும் எனக்குப் புரிகிறது. எப்படியிருந்தாலு நீங்கள் மேற்கோள் காட்டிய அந்த ஹதீஸை சற்று நிதானமாக படித்துப்பாறுங்கள் அதிலிருந்து ஒருவிடயத்தை தெளிவாகப் புறிந்துகொள்ளமுடியும். அதாவது கற்றறிந்த ஸஹாபக்கள் அதை புரிந்துவைத்திறுந்தார்கள். அதுபோன்ற விடயங்களை அந்த ஸஹாபாக்கள் செய்ய முன்வரவில்லை.
இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமைநாள் வரை உருமாற்றி விடுவான். அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி( நூல் : அஸ்ஸ‚னனுல் குப்ரா, பாகம் : 3, பக்கம் : 272 புகாரி (5590( விபச்சாரம் மதுபட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாலும் இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகைநாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1619 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இருஅறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது. சைத்தானின் இசைக் கருவிகளா? என்றுஅபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி)அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீசொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்றுநபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்குமட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடைசெய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி( நூல்: அஹ்மத் 2494 ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தன் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்)வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள் (என்னிடம் அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை(காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதேப் பாதைக்குவாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்) நூல் : அஹ்மத் (4307( குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடை செய்யப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
கஷ்டோடியானின் கருத்தில் இசையை அவா் அனுமதித்தில்லை. மாறாக நபியவர்கள் பெருநாள் தினத்தில் ஜாஹிலிய்யாப் பாடல்களைப் பாடிய சிறுமிகளை தடுக்கவில்லை என்பதனால் அன்றைய தினம் மட்டும் அதற்கு அனுமதி வழங்கலாம் என்ற ஒரு கருத்தே புலப்படுகின்றது. எனவே இசை ஹராம் என்று ஆதாரம் கூறுவதைவிட அன்றைய தினம் மட்டும் அது கூடுமா கூடாதா என்று பரிகிறமாதிரி அவருக்குச் சொன்னால் புரிந்துவிடும் அல்லவா...!
கஷ்டப்பட்டு தமிழில டைப்பன்னி கொமென்ட அனுப்பினா நீங்க பப்லிஷ் பன்னிரில்லையே, நான் உன்மையைத்தான் எழுதினேன். உங்களுக்கு பெயர்கள் தான் பிரச்சினையென்றால் அதை டிலீட் பண்ணிவிட்டு மற்றவற்றைப் போடலாமே..
oorda otrumaya ellamal sevazatku vahabihaludaya thittam boys be alert. thowheed enum muha mudiya pottukkondu oorla pirivina uruwakkina onahalukku oru thahuziyum ellada ezila kayi vathiyiyatthukku.
இசையைவிட்டுவிட்டாலும் பரவாயில்லை நான் கேட்ட ஒருபாடலை இங்கே நினைவுபடுத்துகிறேன். இதை உங்களது தாய் தந்தையுடன் சகோதர சகோதரிகளுடன இருந்து சற்று நிதானமாக கேழுங்கள்..
வென்னிலவே வென்னிலவே... பென்னே பெண்னே கல்லா மரமா...
இதற்கெள்ளாம் வக்காலத்து வாங்க ஒரு கூட்டமா..
கந்திரிச் சோத்தில் உடம்பு வளா்ந்திருக்கும் பெயரில்லா அனோனிமசுக்கு எதற்கு கொமென் அடிக்குதென்னே தெரியாது. சும்மா வஹாபிகளுக்கு ஏசுறான். கந்திரிச் சோத்தால உடம்பு வளர்ந்தளவுக்கு மூளை வளரெல்லேன்னு நினைக்குறன். இசைக்கும் வஹ்ஹாபிகளுக்கும் என்ன தொடர்பு. சரியென்றால் இசையை முற்றாக மறுக்கும் கூட்டம்தான் வஹ்ஹாபிகள். அது சரி தள உரிமையாளர்களே உங்களது ஊரில் ஒரே ஒரு குடும்பம் திங்கள் கிழமை பெருநாள் கொண்டாடிய மாபெரும் சங்கதியை ஏன் எழுதாமவுட்டீங்க. எல்லா ஊா்பலாய்களையும் கிண்டும் உங்களுக்கு இது கிடைக்காமல் போனது அதிசயம்.
சகோதரர் ரிச்மி கான் அவர்களே, யார் அந்த குடும்பம் ?, இன்னும் பத்து அல்லது இருபது வருடங்களில் அவர்களுக்கு என்று ஒரு கூட்டம் உருவாகி ஒரு பள்ளி கூட கட்டுவார்கள்.
hi kahatowita, if you can publish a article regarding facebook because i could see there are so many our people girls and boys miss uning facebook.
kkkk
Post a Comment