கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வீட்டில் சிறைப்பட்ட சிறுமி நுஸ்கியா (உடுகொட, கஹடோவிட)

நுஸ்காவின் இருப்பிடம்


தனக்கேற்பட்டுள்ள ஒரு கொடிய நோயினால் தன் வீட்டிலேயே சிறைப்பட்டுக்கிடக்கும் ஒரு சிறுமியின் பரிதாப நிலையை ஆலோசனைக்காகவும், படிப்பினைக்காகவும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம். 
103 A, Thihariya Road, Udugoda, Ruggahawilla, Sri Lanka என்ற முகவரியையுடைய  எம், ஏ, எப், நுஸ்கா (M.A.F. Fathima Nuska) என்ற இந்தச் சிறுமி தனது மூன்றாவது வயதில் பதுளைப் பிரதேசத்துக்கு பெற்றோருடன் பயணம் சென்ற போது திடீரென்று அவளுக்கு மிகக் கடுமையான காய்ச்சலேற்பட்டு, அது வலிப்பு நோயாக மாறி, சுயநினைவிழந்த நிலையில் அச்சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.  சுமார் இரு வாரமாக வைத்தியசாலையிலிருந்த போதிலும் நோயின் தன்மையில் சாதகமான மாற்றங்களேதும் ஏற்படவில்லை. வைத்தியர்களாலும் உறுதியான முடிவொன்றைத் தர இயலவில்லை. பெரும் பெரும் வைத்தியர்களைச் சந்தித்துச் சிகிச்சை பெறுவதற்கோ, ஆலோசனை பெறுவதற்கோ முடியுமான சூழ்நிலையில் சிறுமியின் பெற்றோரும் அப்போது இருக்கவில்லை. ஆனாலும்  தம் குழந்தையின் சுகவாழ்வுக்காக தம்மால் முடியுமான பல்வேறு கோணங்களிலும் சிறுமியின் பெற்றோர் முயற்சித்துள்ளனர்.  இச்சிறுமிக்கேட்பட்டுள்ள நோய் குறித்து மருத்துவர்கள் கூறியவற்றிலிருந்து பின்வரும் விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ENCEPHALITIS 'என்செபலிடிஸ்" மூளையழற்சி என்ற நோயினால் இக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது இலகுவில் இந்த நோயைக் குணமாக்க முடியாது. (மூளையழற்சி என்பது மூளையில் ஏற்படும் ஒரு கடிய அழற்சி நோய் ஆகும். இந்த தொற்றுநோய்கான நோய்க்காரணிகள் தீ நுண்மம், பாக்டீரியா போன்றனவாகும். தலைவலி, காய்ச்சல், குழப்பம், சோர்வு, களைப்பு போன்றன இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர் நோய் தீவிர நிலையை அடையும்போது வலிப்பு,  தசைவலிப்பு,  நடுக்கம், உளமாயம், நினைவாற்றல் பிரச்சனைகள் என்பன தோன்றும் (விக்கிபீடியா)

சில மருத்துவர்களின் கருத்துப்படி இந்நோய் குழந்தையின் 12வது வயதில் அல்லது 21வது வயிதில் குணமாகலாம்……….
சுமார் தற்போது ஒன்பது வயதை எட்டியிருக்கும் இச்சிறுமி தனது உடலில் ஆடை எதனையும் அணிவதில்லை. ஆடைகளை அணிவதற்குரிய மனநிலையில் அவளில்லை. ஆடைகள் அணிவிக்கப்பட்டால் அவற்றை அவள் கிழித்துக் கொள்வதாகவும், தன்னைப் பராமரிக்கச் செல்வோருக்கும் பலவித ஊறுகளை ஏற்படுத்துவதாகவும் சிறுமியின் தாயார் எம்மிடம் கண்ணீர்மல்கக் கூறினார். மருத்துவப் பரிசோதனைக்காக இச்சிறுமியைக் கொண்டு செல்வது மிகச் சிரமம் என்பதையறிந்த சில வைத்தியர்கள் சிறுமியைத் தம்மிடம் வரவழைக்காமலேயே மருந்துகளை வழங்குமளவிற்கு இச்சிறுமியின் நிலை பரிதாபகரமாகவுள்ளது. தான் என்ன செய்கின்றேன்? தனக்கு என்ன நேர்ந்துள்ளது போன்ற எதுவுமே தெரியாத நிலையில் நடைப்பிணம் போலவே இரும்புக்கம்பிகளாலான கதவால் அடைக்கப்பட்ட அறைக்குள் இச்சிறுமியின் நாட்கள் கழிகின்றன. இதில் வேதனை என்னவென்றால்… மாலையானால் இச்சிறுமிக்கு ஊசி போட்டு அவளை மயக்கமடைய வைத்துத்தான் தம் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இச்சிறுமின் பெற்றோர் செய்து வருகின்றனர் என்பதுதான். இந்தச் சிறுமியைப் பரிசோதித்த சில வைத்தியர்கள் அதற்காகக எவ்விதக்க கட்டணங்களையும் பெறாது இலவசமாக மருந்துகளையும் கொடுத்துள்ளனர் என்பதை வைத்து இந்தச் சிறுமியின் நிலை எந்தளவுக்குப் பரிதாபகரமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  இன்று வரைக்கும் இதே நிலையே தொடர்கின்றது.

தமது குழந்தையின் நிலையைப் பார்த்து வெந்து போயுள்ள பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் கூறியுள்ள மாறுபட்ட கருத்துக்களால் நிலையான முடிவெதனையும் எடுக்க முடியாமற்போனமையால் தன் வீடே தனக்கு சிறையாகிப் போனமைதான் சிறுமிக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிiலாயாகும்.

இச்சிறுமியின் பெற்றோரிடம் காணப்படும் ஆதங்கமெல்லாம் எவ்வழியிலாவது யாராவது தம் குழந்தையின் நோயைக் குணப்படுத்த முடியுமான வழிகளைச் செய்ய வேண்டும், தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்பதுதான்.

இதை வாசிக்கும் போது வேதனையாயிருக்கின்றது. ஆனாலும் இதற்கு நாம் என்னதான் செய்யலாம்" என்று இருந்து விடாது உங்களால் முடியுமான ஏதாவதொன்றை இச்சிறுமியின் சுகவாழ்வுக்காகச் செய்ய முயலுங்கள் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக அதனைப் பெறுவீர்கள். குறிப்பாக இந்நோய் பற்றி நன்கு தெரிந்த வைத்தியர்கள், துறைசார் நிபுணர்களின் தயவையே இச்சிறுமியின் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.






தொடர்புகளுக்கு

நுஸ்காவின் தந்தை அஷ்ரப்.
தொ.பே. இல - 072 6899774 அல்லது 0334906041

4 comments:

Anonymous said...

இச்சிறுமியின் நிலை குறித்த உங்கள் தகவல்களுக்கு நன்றி. இவரைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களையும் கொடுக்கவும்

அப்துல்லா said...

யா அல்லாஹ் இந்தகுழந்தையின் எதிர்காலத்தை வளமானதாக ஆக்குவாயாக. பெற்றோர்களுக்கு மன ஆருதலை அளிப்பாயாக. எங்கலால் முடியாவிட்டாலும் வைத்தியத் துரையில் ஈடுபாடுடையவர்களுக்கு முடிந்த அளவு இந்த செய்தியை எத்திவைக்க முடிந்தவர்கள் அதை செய்வது நல்லமென நினைக்கிறென். இந்த செய்தியை பகிர்ந்த கஹடோவிட வெப்ஸைட்டுக்கு எமது நன்றிகள். ஜதாக்குமுல்லாஹ்

ரம்ஸான் said...

அல்லாஹ் ரஹ்மத்செய்யட்டும் இந்தக் குழந்தைக்கும், அவர்களுடைய பெற்றோருக்கம் முடியுமானவர்கள் வைத்தியத்துரையில் பிரபலயமான பலர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள் அவர்களுடன் தொடர்புகொண்டு இந்தவிடயத்தை கூறினால். ஏதாவது பலன் கிடைக்கும் மென்பது எனது கருத்து.

Azeem said...

இதை வாசிக்கும் போது வேதனையாயிருக்கின்றது. ஆனாலும் இதற்கு நாம் என்னதான் செய்யலாம்" என்று இருந்து விடாது உங்களால் முடியுமான ஏதாவதொன்றை இச்சிறுமியின் சுகவாழ்வுக்காகச் செய்ய முயலுங்கள் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக அதனைப் பெறுவீர்கள். குறிப்பாக இந்நோய் பற்றி நன்கு தெரிந்த வைத்தியர்கள், துறைசார் நிபுணர்களின் தயவையே இச்சிறுமியின் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Post a Comment