கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல் (with Photos)

கேகாலை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை தொடர்பிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெறுகின்றது. சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையிலான இந்த கூட்டம் கேகாலை மாநகர சபையில் இடம்பெறுகின்றது. கேகாலை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று வியாழக்கிழமை...

'ஹிஜாப் அணிய வேண்டாம்" : மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்

மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர்....

ஹலால்” மதகுருமார்களுக்கும் சிறந்தது!!: லேல்வள கொடகந்த (Vendol Lanka உரிமையாளர் )

வெண்டோல் (Vendol) தயாரிப்புக்களை உற்பத்தி செய்யும் “கொடகந்த ஹெர்பல்” நிறுவன உரிமையாளர், ஹலால் சான்றிதழ் தொடர்பில் இன்றைய (27.02.2013) லக்பிம சிங்கள இதழில் வெளியிட்டிருந்த கருத்துக்களின் தமிழ் மொழிபெயர்ப்பை காலத்தின் தேவை கருதி வாசகர்களுக்காக தருகிறோம் தமிழ் மொழிபெயர்ப்பு: ...

மாவனெல்லையில் பொதுபல சேனா நடத்திய பொதுக்கூட்டம்

முஸ்லிம்களுக்கு எதிரான தமது பிராசரங்களின் தொடரில் பொதுபல சேனா அமைப்பு இன்று காலை மாவனெல்லை நகரில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. மாவனெல்லை பெலிகம்மானவிலுள்ள பொத்குல் விகாரையில் இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை இடம்பெற்ற இக் கூட்டத்தில் சுமார் 1500 பேரளவில் கலந்து கொண்டனர். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் இங்கு...

NO HALA At Thihriya

http://www.thihariyanews.com/2013/02/no-halal.html ...

காலி பள்ளிவாசலுக்கு கல்வீச்சுத் தாக்குதல்: விஷமிகள் கைவரிசை

காலி, ஹிரும்புரை முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. வீசப்பட்ட கற்கள் பள்ளியினுள் வீழ்ந்து சிதறிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்தச்...

சொல்லத்துடிக்கும் மனசு…!

ஒகொடபொல றினூ - எரிகிறது மனசு..! இனவாதத் தீமூட்டி மதவாதம் தனைக்கூட்டி தாயக பூமியை துண்டாடத் துடிக்குமிந்த சண்டாளர்களின் ஈனச் செயல் கண்டு எரிகிறது மனசு…!! அன்னை மண்ணே..! என்ன தவறிழைத்தோம் உந்தனுக்கு..? அனுதினமும் இப்படி நிந்தனைப்பட…! யுகம் யுகமாய் சகவாழ்வு வாழுமொரு சமூகம்- சத்திய சோதனையை நித்தமும் அனுபவிக்க வித்திடுவோரே..! விஷக்கருத்துக்களால் வாய்...

தூக்கிற்கு முன் அப்ஸல் குரு தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம்!

“நீங்கள் தைரியமாக இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான்… அல்லாஹ் எனக்கு அளித்த பதவியைக் குறித்து அபிமானம் கொள்ளுங்கள்” – திஹார் சிறையில் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு அப்ஸல் குரு தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை. அப்ஸல் குருவின் கையெழுத்துடன்...

மத உரிமையான ஹலாலில் எவரும் தலையிட முடியாது; கடமை தவறுகிறது அரசு: சம்பந்தன்

ஹலால் விவகாரம் தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப் படுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விடயத்தில் அரசு ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்படி நிலைப்...

பலகைத் தொட்டிலில் வாழ்ந்த மாணவிக்கு தொடர்மாடியில் வீடு

களனி பாலத்திற்கு கீழ் பலகைத் தொட்டிலில் வாழ்ந்த மாணவி சஞ்சீவனி பிரியதர்சினி 3 பாடங்களிலும் ஏ சித்தியடைந்துள்ளார். இம் மாணவியின் குடும்பத்தினையும் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று அவரது பாடசாலையான பொரளை ரத்னாவலி பாலிகாவுக்குச் சென்று 35 இலட்சம் பெறுமதியான...

வானையைச் சேர்ந்த முஜீப் ஆசிரியர் அவர்கள் காலமானார்

புத்தளத்தைச் பிறப்பிடமாகக் கொண்ட  முஹம்மத் முஜீப் (ஆசிரியர்) அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார்  கஹடோவிடாவை சேர்ந்த பரீஹா ஆசிரியை அவர்களின்  அன்புக் கணவரும், மருஹும் அன்ஸார் மஸ்டர் அவர்களின் மருமகனும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (18.02.2013) கஹடோவிட முஹியத்தீன் பள்ளிவாசல் மையவாடியில்...

100 பேர் கடலில் பரிதாபமாக மரணம் - காப்பாற்றபட்ட மியன்மார் நாட்டினர் அதிர்ச்சி தகவல்

http://www.lankadeepa.lk/index.php/articles/98578 இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர்வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கிழக்குக் கரையிலிருந்து சுமார்...

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது!

முஸ்லிம்களுக்கு எதிராக வாரியப்பொலவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாரியபொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பீ நாவின்னவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டுள்ளது. ஹலால் தொடர்பாக வாரியப்பொல நகரில்...

குருணாகலில் முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

குருணாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கடைகளை மூட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் கொலை செய்ய நேரிடும் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல்கள் தொடர்பில் குருணாகல்...

புர்காவை இலங்கையில் தடை செய்ய வேண்டுகோள்

முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை...

எரிகின்ற முஸ்லிம் பிரச்சினைக்குள் பாராளுமன்ற தெரிவுக்குழு எதற்கு?

ஐ.தே.க.வின் உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீம் (நேர்காணல்: ஸிராஜ் எம்.சாஜஹான்) கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி...? பதில்: எனது தந்தை வழியைப் பின்பற்றியே நான் அரசியலில் பிரவேசித்தேன். 1965களில் எனது தந்தை அகில இலங்கை முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளராகப்...

வரகாபொலையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பொதுபல சேனா எனும் பேரினவாத அமைப்பு இன்று 09-02-2013 வரகாபொலையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஹலால் பொருட்களை கொள்வனவு ெய்ய வேண்டாம். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள், முஸ்லிம் உணவகங்களில் சாப்பிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய...

பிடில் வாசிக்கும் ‘நீரோ’க்கள் (எமது சமூகத்தின் நிலை)

ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான். மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஜனக மகாராஜா தன் அரண்மனையில் வேதாந்தம் படித்துக் கொண்டிருந்தார். பிடில் வாசிக்கவில்லை என்றாலும், வேதாந்தம் படிக்கவில்லை என்றாலும் ……….. பேரினவாதம் கொழுந்துவிட்டு எரிகையில் நமது அரசியல் தலைமைகளும் அவர்களைப் போலத்தான் புதினம்...

ஸாவியாவிற்கு முன்னால் பஸ் விபத்து.

கஹடோவிட ஸாவியாவிற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் மேற்பகுதி புதிதாக கொடுக்கப்பட்ட தொலைபேசி வயர்களுடன் சிக்குண்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  அருகே இருந்துள்ள மின்கம்பம் இழுப்ட்டு இந்த பஸ்ஸின் மீதி விழுந்துள்ளதை நீங்கள் படத்தில்  பார்க்கலாம். ...