கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பலஸ்தீன் !!! ஆடு நழையுதேன்னு ஓநாய் அழுகிற இந்நிலையில் நாம் சில வரலாற்று பின்னணிகளை அறிந்து இருக்க வேண்டும்.

"ஹமாஸ் தலைவர் காலித் மஷால், பாலஸ்தினில் இருக்காமல் வெளிநாட்டிலேயே ஒளிந்து வாழ்கிறார்... சரியான கோழை... ஹமாஸ்க்கு கிடைக்கும் நிதிகளை வைத்து தங்கும் நாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட சொத்து வாங்கி சேர்த்து விட்டார்.. இவரும் பாலஸ்தினில் உள்ள இஸ்மாயில் ஹனியா வும் மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றனர்... சுகபோகமாக வாழ்கின்றனர்...பாவம் பாலஸ்தீனியர்கள்... இவர்களை நம்பிக்கொண்டு...." என்றெல்லாம் இஸ்ரேல் இப்போது புலம்ப ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து உலக மீடியா இதை பெரிதாக படம் போட்டு பரப்பி வருகிறது.
ஆடு நழையுதேன்னு ஓநாய் அழுகிற இந்நிலையில் நாம் சில வரலாற்று பின்னணிகளை அறிந்து இருக்க வேண்டும்.
இந்த காலித் மஷால் ஜோர்டானில் ஹமாசின் பிராந்திய தலைவராக அவ்வளவாக உலகுக்கு அறியப்படாமல் இருந்த போது, 'இவர் தான் ஹமாஸ் இயக்கத்துக்கு முக்கியமான கமேண்டிங் தலைவர்களில் ஒருவர்' என்று எப்படியோ யூகித்து... இஸ்ரேலின் மொசாட் ஏஜெண்டுகள் இருவர் கனடா சிட்டிசன்ஸ் என்று கூறி கனடா பாஸ்போர்ட்டுகளுடன் ஜோர்டான் வந்து...நடந்து கொண்டு இருக்கும் பொது... உடலில் ஓட்ட வைக்கப்பட்ட ஒரு கருவியின் மூலம் இவருக்கு விஷம் வைத்து கொலை முயற்சி செய்தார்கள். 25 September 1997 அன்று ஜோர்டானில் நடந்த இந்த கொலை பாதக செயலில், விஷம் தாக்கி உடனடியாக கோமாவுக்கு சென்று, இறப்பின் விளிம்பில் ஜோர்டான் மருத்துவமனையில் இருந்தார் காலித் மிஷால்...
அப்போது... சும்மா சொல்லக்கொடாது.... மாஷாஅல்லாஹ்... ஜோர்டான் அரசு மிகப்பிரம்மாதமாக செயல்பட்டது.
அந்த இரு இஸ்ரேல் ஏஜெண்டுகளையும் ஜோர்டான் போலிஸ் மோப்பம் பிடித்து விட்டது. தப்பிக்கும் முன்னர் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள் இஸ்ரேல் காரர்கள் என்று உலகுக்கு நிரூபித்தது. அவர்கள் மூலம் அந்த விஷத்துக்கு ஆண்டி டோட் (விஷ முறிவு மருந்து) இஸ்ரேலிடம் மட்டுமே உள்ளதாகவும் விசாரணையில் அறிந்தது. அனைத்தையும் இஸ்ரேல் மறுத்தது. பொய் என்று கூறியது.
ஆனால்.....
"உடனே, இஸ்ரேல் அந்த ஆண்டி டோட்டினை தரவில்லை எனில், ஜோர்டான்-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்றும் ஏஜெண்டுகள் தூக்கில் இடப்படுவார்கள் என்றும் தூதரக உறவு முடிவுக்கு வரும்" என்றும் மிரட்டலாக ஜோர்டான் மன்னர் அதிரடியாக அறிவித்தார். அட்டகாசமான சர்ப்ரைஸ் டர்னிங் பாயிண்ட்..!
எனவே, அமெரிக்க அதிபர் கிளிண்டன் இப்பிரச்சினையில் உள்ளே நுழைந்தார். இந்த கொலை முயற்சியை மிக வன்மையாக கண்டித்தார். உடனடியாக ஆண்டி டோட் ஜோர்டான் செல்ல வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உத்தரவு இட்டார்.
மொசாதின் தலைவர் மூலமாகவே... அவர் கையாலேயே... அந்த ஆண்டி டோட் ஜோர்டான் வந்து சேர்ந்தது. பிழைத்தார் காலித் மிஷால். அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிலையில், ஜோர்டான் மன்னர் ஹுசைன், தன் மண்ணில் நடந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த இரு இஸ்ரேல் ஏஜெண்டுகள் இஸ்ரேலுக்கு தண்டனை இன்றி வேண்டும் என்றால்... ஹமாஸ் இயக்கத்தின் தானை தலைவரான ஷேக் அஹ்மத் யாசினை ரிலீஸ் பண்ண வேண்டும் என்று நிபந்தனை போட்டது. (சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் வீல் சேரில் வாழும் அவரை இஸ்ரேல் ஆயுள் தண்டனை தந்து தம் சிறையில் வைத்து இருந்தது)
அந்த மொசாத் ஏஜெண்டுகள் முக்கியம்... அவர்கள் வாய் திறந்தால்... பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறலாம் என்பதால்... வேறு வழி இன்றி... நிபந்தனையை ஏற்று, யாசினை விடுதலை செய்தது இஸ்ரேல். ஆனாலும், 22 மார்ச் 2004 இல் பஜ்ர் வழக்கம் போல பள்ளியில் தொழுது விட்டு வில் சேரில் வெளியே வந்த யாசினை ராக்கெட் வீசி கொன்றது. இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த படு கொலையை கண்டனம் செய்தன.
யாசினின் ஜனாஸா ஊர்வலத்திலும் தொழுகையிலும் சரித்திரம் காணாத சாதனையாக இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த தலைவராக.... ஹமாஸை யாசினுடன் சேர்ந்து தோற்றுவித்தவரான அப்துல் அசீஸ் ராண்டிசியை ஹமாஸ் அறிவித்தது. அடுத்த சில நாட்களில் ஏப்ரல் 17 அன்று அதே போல அடுத்த ராக்கெட் வீச்சில் அப்துல் அசீஸ் ராண்டிசி யும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு பிறகுதான்... ஹமாஸ் தம் தலைவரை காக்கும் பொறுப்பை உணர்ந்தது. தேர்ந்து எடுத்துவிட்டு பல காலம் ரகசியமாக வைத்து இருந்தது.
பிற்பாடு... அறிவித்தது. தம் தலைவர் காலித் மஷால் என..!
2006 பாலஸ்தீன பொது தேர்தலில் ஹமாஸ் கட்சி, பத்தாஹ் கட்சியை தோற்கடித்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய உடன்...
காலித் மஷால் தான் பாலஸ்தீன் பிரதமர் ஆவார் என்று உலகமே எதிர்பார்க்க.... இஸ்மாயில் ஹனியாவை பிரதமர் ஆக்கினார் காலித் மஷால்.
பின்னர் பத்தாஹ் கட்சிக்கும் ஹமாஸ் கட்சிக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக, பத்தாஹ் கட்சியை சேர்ந்த பாலஸ்தீன அதிபரான மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் கட்சியின் ஆட்சியை கலைத்து விட்டார்.
ஆனால், இதை ஹமாஸ் ஏற்க வில்லை. இன்றும் பாலஸ்தீனின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா தான் என்கிறது. இவர் காசாவில் உள்ள்ளார்.
மேற்கு கரையில் உள்ள மஹ்மூத் அப்பாஸ் அங்கே அதிபராக மட்டும் உள்ளார்.
எகிப்து பார்டர் வழியே மட்டும் தான் காசாவில் நுழைய முடியும் என்பதால்... இந்நிலையில், ஒரு முறை... காலித் மிஷால் 7 டிசம்பர் 2012 இல் எகிப்து வழியே காசா வந்து சர்ப்ரைஸ் விசிட் தந்தார். செமை உற்சாக அமோக வரவேற்பு. அப்போது எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் முஹம்மத் மோர்சியின் ஆட்சி..! இல்லாவிட்டால்... இப்போதெல்லாம் எகிப்தை நம்ப முடியாது..!
இப்போது இஸ்ரேலின் ஏவுகணை தாக்க முடியாத தூரத்தில்...
ஏதாவது ஒரு நாட்டில் மறைந்து தான் வாழ்கிறார்.
தொலைபேசியில் தான் ஹமாஸை இயக்குகிறார்.
இருக்கட்டுமே... இதற்கு காரணம்...யார்..? இஸ்ரேலும் அதன் படுகொலைகளும்தானே..?!?
நாலாம் கட்ட தலைவராக இருந்த போதே ஜோர்தானில் வைத்து கட்டம் கட்டிய இஸ்ரேல்... இப்போது... முதலாம் தலைவர் ஆகி ஹமாஸை திறமையுடன் இயக்குவதால்.... எப்படியாவது காலித் மஷாலை காசா வரவழைத்து போட்டுத்தள்ள முயற்சி செய்கிறது இஸ்ரேல்.
காலித் மிஷால் தலைமையில் தான்... இஸ்ரேலிய சிறையில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன சிறை வாசிகள் இஸ்மாயில் ஹனியா மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். இதெல்லாம் இஸ்ரேலுக்கு செமை அடி.
இந்நிலையில் ஹமாஸ் கட்சித் தலைவர் காலித் மிஷாலுக்கும் பாலஸ்தீன் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவுக்கும் காசா மக்களிடம் ஏற்பட்டுள்ள உள்ள செலவாக்கை சரிக்க சதி செய்கிறது இஸ்ரேல். இல்லாவிட்டால் பாலஸ்தீனியரிடம் இஸ்ரேல் தோற்றுவிடும் என்ற அச்சம் அதற்கு வந்து விட்டது. அதன் ஒரு அங்கம் தான் மேற்படி... குற்றச்சாட்டுக்கள் எல்லாம்..!
இஸ்ரேல் சொல்வதை எல்லாம் நம்பி ஏமாந்து விட வேண்டாம் சகோஸ்..!

படம் :
TOP 3 - முதல் தலைவர் ஷேக் அஹ்மத் யாஸின் & படுகொலை
MIDDLE 2 - இரண்டாம் தலைவர் அப்துல் அஸீஸ் ரண்டிசி & படுகொலை
BOTTOM LEFT - மொசாட்டின் முறியடிக்கப்பட்ட காலித் மஷால் கொலை முயற்சிக்கு பிறகு ஹமாஸ் வேகமாக வளர்ந்து இருக்கிறது.
BOTTOM MID - மூன்றாம் தலைவராகி எட்டரை வருஷம் கழித்து முதல் முறை காசா வந்த காலித் மஷாலுக்கு காசாவில் உற்சாக வரவேற்பு.
BOTTOM RIGHT - உம்ராவில் இஸ்மாயில் ஹனியா, காலித் மஷால், மஹ்மூத் அப்பாஸ்

தகவல் - முகம்மத் ஆசிக் (முகநூல்)

0 comments:

Post a Comment