கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தர்ஹாநகர், பேருவளையில் இனவெறியாட்டம் நடந்து ஒரு மாதம் - சூத்திரதாரி சுதந்திரமாக நடமாடுகிறான்.

சுதந்திரம் பெற்ற ஜனநாயகத் தேசமொன்றில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம். எந்தவொரு நபரினாலோ அல்லது ஒரு குழுவினாலோ ஒரு தனிநபரது அல்லது ஓர் இனத்தினது உரிமைகள் பறிக்கப்படுகின்ற, மிதிக்கப்படுகின்றபோது, அவ்வுரிமைகளுக்கு பங்கம் ஏற்படுகின்றபோது குறிப்பிட்ட தனிநபருக்கெதிராக அல்லது அந்தக் குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்ட ஆட்சி இடம்பெறும் ஜனநாயகத் தேசத்தினை ஆளும் ஆட்சியாளர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

அவ்வாறு குற்றம் புரிவோர், குற்றம்; செயல் இடம்பெறுவதற்கு தூண்டுவோருக்கு எதிராகச் சட்டம் அதன் கடமையை சரியாக நிலைநிறுத்தும்போதுதான் அத்தேசத்தில் ஜனநாயகம் மலரும்.

ஆக, மனித உரிமைகளை மதிக்கின்ற, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கின்ற பல்லின சமூகம் வாழும் ஒரு சுதந்திரத் தேசத்தில் ஓர் இனம் மற்றுமொரு இனத்தினால் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டியது அந்த தேசத்தின் அரசையே சாரும் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளாகும்.

இலங்கையும் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு சுதந்திரத் தேசமாகும். இத்தேசத்தில் வாழும் சகல இனங்களும் தங்களுக்கான சுதந்திரத்துடன் ஏனைய சமூகங்களின் சுதந்திரங்களை மீறாது தமக்குரிய உரிமைகளோடு வாழ்வதற்கு உரித்துடையவை.

தேசிய இனத்துவமும் உரிமையும்.
உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தனித்துவத்துடன்தான் பிறக்கின்றன. ஒரு குழுமத்தில், ஒரு சமூகத்தில் அல்லது ஓர் இனம் அல்லது ஒரு சமூகம் அவரவருக்குரிய தனித்துவப் பண்புகளுடன் காணப்படுவது இயற்கை. ஒருவரின் தனித்துவத்தை மற்றுமொருவர் கைவிடக்கோரவோ அல்லது அவற்றை இல்லாதொழிக்கவோ முடியாது. இது ஜனநாயக மரபுமல்ல.

இலங்கை என்பது ஒரு தேசம். அதில் வாழும் எல்லோரும் இலங்கையர் என்பதும் அவர்களுக்கு சம உரிமை உண்டென்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதர்சனங்களாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என இத்தேசத்தில் வாழும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அந்தந்த இனத்தை அடையாளப்படுத்தக்கூடிய கலை, கலாசார, பண்பாட்டு மத விவகாரம் என பல விடயங்களில் தனித்துவம் பேணப்படுகிறது. முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காகவோ அல்லது சிங்கள மொழி பேசுகிறார்கள் என்பதற்காகவோ ஒரு தேசிய இனம் என்ற தனித்துவத்தை இழந்து வாழ முடியாது. அவ்வாறுதான், தமிழர்கள் சிங்கள மொழி அல்லது ஆங்கில மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தேசிய தமிழ் இனம் என்ற இனத்திற்கான இனத்துவ பண்புகளை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறே சிங்களவர்கள் எந்தமொழி பேசினாலும் அவர்களுக்குரிய தனித்துவத்துடன்தான் வாழ முடியும். இதுதான் யதார்த்தமாகும்.

ஒரு குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு மக்கள் பிரிவின் அகம்சார்ந்த உணர்வுகளை முற்றாக நிராகரித்து, நீங்கள் இவ்வாறுதான் உங்களை அடையாளப்படுத்த முடியும் என்று விதிமுறைகளை யாரும் திணிக்க முடியாது

ஆனால், தற்பொது இந்நாட்டில் தோண்டியுள்ள கடும்போக்களார்களின் கருத்துக்களும் அவர்களின் செயற்பாடுகளும் ஒரு இனத்தின் தனித்துவப் பண்புகளை நிராகரிப்பதாக அல்லது மட்டுப்படுத்துவதாகவே புலப்படுகிறது.
ஓர் இனத்தினர் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான் இனங்களின் தனித்துவத்தை, அம்மக்களின் அபிலாசைகளை மதிப்பவர்களின் கடமையாகும். ஆனால் கடும்போக்கு மதவாதிகள் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் தனித்துவ உணவு, தனித்துவ ஆடை எனப் பல தனித்துவ அடையாளங்களை சிதைப்பதை இலக்காகக்கொண்டு செயற்படுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

நாட்டில் சமாதானம் நிலைக்க வேண்டும். அமைதி நிலைபெற வேண்டும் சமூ ஒருமைப்பாடும், இனவுறவுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். என்றாலெல்லாம்  பேசப்படுகின்றது. அதற்காக மகாநாடுகளும் நடத்தப்படுகின்றன. அவற்றை வெற்றிகொள்வதற்காக செயற்திட்டங்களும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆனால், அவற்றுக்கெல்லாம் கொல்லி வைப்பது போன்று இனவாதம் அதன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, அதன் கொடூரத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. உள்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பான அகமுரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் சமூகத்திற்கெதிரான கட்டமைக்கப்பட்ட கருத்துவாதத்தை பொதுபலசேனா போன்ற கடும்போக்காளர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளது மாத்திரமல்லாது, வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்கள் மத்தியிலும் இந்த எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். பல சமூக இணையத்தளங்களில் பகிரப்படுகின்ற தகவல்கள் அவற்றைப் புடம்போடுகிறது

இவற்றின் காரணமாக வடக்குக் கிழக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தின் தாக்குதல்கள் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. மத அடையாளங்கள், வர்த்;தக நிலைங்யகள்;, குடியிருப்புக்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தொடர்கின்றன. இந்நடவடிக்கைகள் முஸ்லிம் சமூதாயத்தின்; சுயாதீனத்தையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அவைமாத்திரமின்றி, புனித பிரதேசங்களின் பெயரால் பள்ளிவாசல்களை அகற்றுதல், சுவீகரித்தல், பாங்கு ஒலிப்பதை தடைசெய்தல், கலாசார ஆடை அணியும் முஸ்லிம் பெண்களை, ஆண்களை அச்சுறுத்துதல் அல்லது தடைசெய்ய முனைதல், முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப்  புறக்கணித்தல், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளல், சூறையாடுதல், தீ வைத்தல், முஸ்லிம்களுக்குள் மதவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம் உள்ளது எனப் பிரச்சாரம் செய்தல், முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சியையும் விரோதத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் மகாநாடுகளையும் நடத்துதல் இத்தகையை பிரச்சாரங்களுக்காக ஊடகங்களைப் பயன்படுத்துதல், போஸ்டாக்ள ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுதல் என்ற நிலைமை மிக மோசமடைந்து இவற்றின் மொத்தவடிவமாக  தெற்கில் அளுத்தக, தர்ஹாநகர், பேருவளையில் இனவெறியாட்டம் நடந்தேறி ஜூ 15ஆம் திகதியுடன் ஒரு மாதமாகிறது.

இருப்பினும் இந்த அழிவு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தார் என்று இந்த உலகமே பேலும் அந்தத் துறவி இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை ஏன் என்றுதான் எல்லோரும் கேட்கிறார்கள்?

அளுத்கம அழிவென்பது பேரினவாதம் மேற்கொள்ள கொடூரத்தின் ஆரம்பம் மட்டும்தான். பேரினவாதத்தின் இறுதி இலக்கானது அழிவுகள் பல கண்ட 1915 அல்லது 1983 நிலைமைகளை உருவாக்குவதாகவே  இருக்கலாம்.  இந்த நிலைமை உருவாகும் வரையிலும் சட்டம் அதன்பாட்டில் இருக்கப்போகிறதா? அல்லது அதன் கடமையைப் புரியப்போகிறதா? என்பதே நிகழ்காலத்தின் கேள்வியாகும். சட்டம் நிகழ்காலத்தில் அதன் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுமாயின் எதிர்காலம் நிம்மதியானதாகவும் சுபிட்சமானதாகவும் அமையும்.

இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழுக்கின்ற எந்தவொரு இனமும் அந்த இனத்துக்குரித்தான உரிமைகளுடன்; வாழவும் கல்வி கற்கவும் தொழில் புரியவும் கலை, கலாசார பண்பாட்டு மத விடயங்களைப் பின்பற்றவும் இந்நாட்டின் அரசியல் சானம் இடம்வகுத்துள்ளது.

அது மாத்திரமின்றி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தின் உறுப்புரை 2ஆனது இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லது சமூகத் தோற்றம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும்; சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவாரவர் எனக் குறிப்பிடுகிறது.

அத்துடன,; ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் எவரினதும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது எனவும் ஐ.நா மனித உரிமைகள் உலகபொதுப்பிரகடனத்தின் 15வது உறுப்புரை சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறான நிலையில், ஒரு தேசிய இனத்தின் இனத்துவ அடையாளங்களை அழிப்பதற்கு, அல்லது அந்த இனம் தமது தனித்துவ அவ்வடையாளங்களை வெளிக்காட்டக் கூடாது என அச்சுறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லாத போது, பொதுபலசேனா போன்ற கடும்போக்காளர்கள் ஒரு தேசிய இனத்தின் இனத்துவத்துக்கெதிராக தொடர்ச்சியான நெருக்குவாரங்களையும் அடாவடித்தனங்களையும் புரிந்துகொண்டு வருவதை சட்டம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

சட்டமும் கடமையும்
ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுமை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும.; ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல் தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் தனித்தன்மை கொண்டதுதான் சட்டம்.

மனிதனை மனிதனாய் வாழ வைக்கவும் மற்றும் நிறுவனங்களின் முறைப்படுத்தப்பட்ட இயக்கத்திற்கும் சட்டம் தேவை. அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் நீதியுடனும், சமமாகவும், உரிமைகளோடும், அமைதியாகவும் வாழ்ந்திட சட்;டம் வழிவகை செய்கிறது.

குற்றம் விளைவித்தால்  அந்தக் குற்றத்திற்கு தண்டனை வழங்க இந்நாட்டில் சட்டம் இருக்கிறது. ஏனெனில் சட்டத்தின்முன் எல்லோரும் சமமானவர்கள். ஆனால் குற்றம்; செய்தார்கள், குற்றம் செய்யத் தூண்டினார்கள் என்று நீதியையும் நியாத்தையும் சட்டவரம்புகளையும் மதிக்கின்றவர்களால் சுட்டிக்காட்டப்படுபவர்கள் சட்டத்தினால் இதுவரை ஏன் தண்டிக்கப்படவில்லை என்பதே மர்மமாகவுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தி, குற்றமிழைத்தவர்களை அல்லது குற்றம் புரியத் தூண்டியவர்களை கைது செய்து தண்டனை வழங்க, சட்டத்தை நிறைவேற்றுக்கின்ற மன்றங்கள் இருந்தும் கூட, இத்தகையவர்கள் சுதந்தரிமாக உலாவுவது மனித உரிமைகளையும் சட்டத்தையும் மதிக்கின்றவர்களின் உள்ளங்களில் வேதனையை உருவாக்கியுள்ளது.

அது மாத்திரமின்றி, எவ்வித அதிகாரமுமில்லாத அல்லது நிழல் அதிகாரத்துடன் செயற்படுவதாக் கூறப்படுகின்ற இனவாத அமைப்புக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு குற்றமிழைவித்தவர்களைத் தண்டிப்பதற்கு முற்படும் நிலை இந்த நாட்டில் ஏற்பட்டிருப்பதானது,  சட்டமும் நீதியும் சாகாது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்ந ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்தை நேசிகின்ற, சட்;டத்தையும் நீதியையும் மதிக்கின்றவர்களை இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது.

பர்மாவில் எவ்வாறு அந்நாட்டு இனவாதிகளினால் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்களோ அதேநிலைமைதான் 2012 ஆண்டு தோற்றம் பெற்ற பொதுபலசேனாவினாலும் கடும்போக்கு பேரினவாத அமைப்புக்களினாலும் இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்கள் தொடாச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள.; உள ரீதியாக வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்நடவடிக்கைகளை நோக்குகின்றபோது, சர்வதேச முஸ்லிம் எதிர்பாலர்களின் திட்டத்திற்கேற்ப பொதுபலசேனாவும் கடும்போக்கு பேரினவாத அமைப்புக்களும் செயற்படுகிறதா என எண்ணத் தோன்றுகிறது.

சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது. அவ்வாறு சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறிவருகிறார். இவ்வாறான நிலையில் சட்டம் அதற்கான பொறுப்பை புரிய வேண்டும். குற்றம் இழைத்தவர்களுக்கெதிராக நிறைவேற்றப்படும் இலங்கைச் சட்டங்கள் நாட்டின் இன ஒற்றுமைக்கும், அமைதிக்கும் எதிராகச் செயற்படும் இத்தகையவர்களுக்கெதிராகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல்  உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டத்தின் 3ஆம் பிரிவானது ஆளெவரும் போரைப் பரப்புவதோ அல்லது பாரபட்சத்தை, எதிர்ப்பு உணர்ச்சியை அல்லது வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய, இன அல்லது மத ரீதியிலான பகைமைய ஆதரித்தலோ ஆகாது எனக் குறிப்பிடுகிறது.

அத்துடன், குற்றம் புரிவதற்கு எத்தனிக்கும், அதனைப் புரிவதில் உதவி புரியும் அல்லது உடந்தையாயிருக்கும் அல்லது புரியப்போவதாக அச்சுறுத்துகின்ற ஒவ்வொருவரும் இச்சட்;டத்தின் கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென இச்சட்டம் சுட்டிக்காட்டுகிறது

இவ்வாறு சட்டம் உள்ள நிலையில், அச்சட்டமானது அதன் பொறுப்பை நிறைவேற்றுமாயின் இன ஒற்றுமைக்கும் சமூக சகவாழ்வுக்கும் நாட்டின் அமைதிக்கும் பங்கம் ஏற்படாது பல்லாண்டு காலங்கள் இந்த நாட்டில் இனவுறவுடன் வாழும் சகல இனங்களும் தங்களுக்குரிய இனத்துவ உரிமையுடன் நிம்தியாக வாழ முடியும்.

கடும்போக்காளர்களினால் இனத்துவ உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்ற சூழலில்  குற்றமிழைத்தவர்கள் அல்லது குற்றமிழைக்கத் தூண்டியவர்களுக்கு எதிராகச் சட்டம்;  அதன் பொறுப்பi நிகழ்காலத்தில் சரியாக நிறைவேற்றுமாயின்  இனமுரண்பாடற்ற இலங்கையை எதிர்காலத்தில் காணமுடியும். அந்தக் கனவு நிறைவேற வேண்டுமென்பதே சட்டத்தையும் இனத்துவ உரிமைகளையும் மதிக்கும் எல்லோரினதும் பிரார்த்தனையுமாகும்.

jaffnamuslim

0 comments:

Post a Comment