Home » All posts
எகிப்தில் இஸ்லாமிய கூட்டணி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

எகிப்து நாட்டில் பதவியிறக்கம் செய்யப்பட்ட முகமது மோர்சியின் ஆதரவாளர்களான இஸ்லாமியக் கூட்டணி ஒன்று வரும் வெள்ளிக்கிழமை முதல் 18 நாட்கள் நடைபெறும் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
1981 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை எகிப்தில் ஆட்சி புரிந்த ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து இறக்க அந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் துவங்கியது. அப்போது 18 நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்குப்பின் முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்கி முகமது மோர்சி ஆட்சியைப் பிடித்தார்.
இந்தப் போராட்டம் துவங்கிய மூன்றாவது ஆண்டைக் குறிக்கும்விதமாகவே இஸ்லாமியக் கூட்டணி புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் புதிய போராட்டம் முபாரக் பதவி இறங்கிய பிப்ரவரி 11 ஆம் தேதி வரை தொடரும் என்று இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. எகிப்தில் தற்போது நடைபெற்றுவரும் இடைக்கால அரசின் உள்துறை அமைச்சர் முகமது இப்ராஹிமும் 25 ஆம் தேதியன்று ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்ட காவல்துறை தலைமை அதிகாரியாகவும் விளங்கும் உள்துறை அமைச்சர் இஸ்லாமியக் கூட்டணி ஏற்படுத்தவுள்ள குழப்பத்தை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி இந்த அசாதாரண முறையீட்டை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்டபின் அவரின் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தவேண்டி தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இவர்கள் மீது அரசாங்கம் எடுத்த கொடூர நடவடிக்கைகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஹோஸ்னி முபாரக் பதவி இறக்கம் செய்யப்பட்டபின் நடைபெற்ற குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ராணுவத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இஸ்லாமியக் கூட்டணி தெரிவித்துள்ளது.
அமைதியான முறையிலேயே தங்களின் போராட்டம் நடைபெறும் என்று இந்தக் கூட்டணி தெரிவித்துள்ள போதிலும் இவர்களின் பேரணிகள் அனைத்தும் மோர்சி எதிர்ப்பாளர்களுடனும், பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நடைபெற்ற தெரு மோதல்களாகவே முடிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Jaffna Muslim
அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் பற்றிய அதிர்ச்சித் தகவல் இப்பொழுது ஊடகங்களில்
இஸ்லாத்தின் ஜென்ம விரோதி நாடான இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்து, அங்கு முக்கிய உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் பற்றிய அதிர்ச்சித் தகவல் இப்பொழுது ஊடகங்களில் கசிந்துள்ளது.
கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுத்தீன் இஸ்ரேலுக்கு சென்ற வாரம் சென்றதோடு, அங்கு இரு நாடுகளுக்கும் இடையில் சிறைக்கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வகை செய்யும் உடன்படிக்கையொன்றிலும் அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திட்டதாக இலங்கையின் பிரபல ஆங்கில தினசரியொன்று திங்கள் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது சிறைச்சாலைகள் ஆணையாளர் திரு. சந்திரரத்ன பல்லேகமவும் அதில் ஒப்பமிட்டதாகவும் அப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=96221
அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் இந்த இஸ்ரேல் விஜயத்தை தொடர்ந்து முஸ்லிம் வட்டாரங்களில் இப்பொழுது அது பற்றி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த விவகாரமானது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முஸ்லிம்கள் மத்தியில் அபகீர்த்தியையும், களங்கத்தையும் ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தினால், இச் செய்தி தமிழ் மொழி மூல ஊடகங்களுக்கு தெரியவராதவாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை சந்திரசிரி கஜதீர வகித்து வருகிறார். பொதுவாக இவ்வாறு இரு நாடுகளுக்கிடையில் சிறைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறும் உடன்படிக்கைகளில் இலங்கையின் சார்பில் நீதியமைச்சரே கைச்சாத்திடுவது வழக்கமாகும்.
எஸ்.எம்.றிஸ்வான்
http://www.kalmunaihot.blogspot.com/2014/01/blog-post_8189.html
ஹெம்மாதகம பெரிய பள்ளிக்கு சென்ற பெளத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் !

இது தொடர்பாக ஹெம்மாதகம பெரிய பள்ளி நிர்வாக உறுப்பினர் ஹில்மி ஹாஜியார் தெரிவிக்கும்போது மூன்று நாட்களுக்கு முன்னர் ஐந்து பெளத்த தேரர்கள் மற்றும் சிங்கள வாலிபர்கள் அடங்கிய குழுவினர் மூன்று முச்சக்கர வண்டிகளில் இரவு 9:30 மணியளவில் ஹெம்மாதகம பெரிய ஜும்ஆ பள்ளி வாசலுக்கு வந்தனர் .
அங்கு ஜமாத்தில் வந்து மஸ்ஜித்தில் தங்கியருந்த மாணவர்களிடம் பள்ளி நிர்வாகத்துடன் பேசவேண்டும் என்று கூறியுள்ளனர் அங்கிருந்த மாணவர்களும் வந்த பெளத்த தேரர்களை கதிரைகளை போட்டு அமரச்செய்துள்ளனர் . இதற்கு இடையில் குறித்த குழுவினர் பள்ளிக்கு வந்திருக்கும் தகவல் பொலிசாருக்கும் , பிரதேச அரசியல்வாதிகளுக்கும் அறிவிக்கப்பட்டது , பள்ளி நிர்வாகமும் அங்கு செல்ல எஸ் .பி தலைமயிலான பொலிசாரும் அங்கு வந்து விட்டனர். பிரதேசத்தின் முஸ்லிம் வாலிபர்களும் கூடிவிட்டனர் .
வந்தவர்களுடன் நாம் பேசினோம் , அவர்களை மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருக்கும் மண்டபம் ஒன்றுக்கு அழைத்தோம் அவர்கள் வந்தன் நோக்கம் இந்த பகுதியில் தமது மேலாதிக்கத்தை காட்டும் நோக்கத்தில் இருந்திருக்கலாம் ஆனாலும் அவர்களை நாம் கண்ணியமாக நடாத்தினோம் , அதிகாமான முஸ்லிம் வாலிபர்களும் மஸ்ஜிதில் கூடிவிட்டனர் .
வந்தவர்கள் எமது மஸ்ஜித்தில் சிங்கள பௌத்தர்களை பொருட்களை கொடுத்து இஸ்லாத்துக்கு எடுப்பதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்கள் பின்னர் அவர்களின் உறவினர்களிடம் சென்று உறவினர்களையும் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் பொலிசார் தலையிட்டு அவர்களை நாளை காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறும் அங்கு இது தொடர்பாக் பேசலாம் என்றும் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர் .
அடுத்த நாள் காலை அவர்கள் பொலிஸ் நிலையம் சென்று பேசியுள்ளனர் . அவர்களின் குற்றச்சாட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றை பின்னணியாக கொண்டது.என்பது தெரியவருகிறது . இந்த பள்ளியில் எவரையும் நாங்கள் ( பலவந்தமாக ,பொருட்கள் மீது ஆசை காட்டி ) இஸ்லாத்துக்கு எடுக்க வில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளோம் .
வந்த பெளத்த பிக்குவில் ஒருவர் தெவனகல சம்பவத்துடன் தொடர்பான பிக்கு , இருந்தும் நாம் கண்ணியமாக நடந்து கொண்டோம் . பொலிசார் உடனடியாக இடத்துக்கு வந்தனர் நியாயமாக நடந்து கொண்டனர்.
பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்க சென்ற சிங்கள பெண் !
பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்க சென்ற சிங்கள பெண் !
அதேவேளை நேற்று குருநாகல் மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து வருவதாக தெரிவித்து இரு சிங்கள பெண்கள் எமது பள்ளிக்கு வந்தனர் அவர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார் . இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தோம் அவர்கள் அவர்களை விசாரித்தார்கள் . அதன் பின்னர் அது பற்றிய அறிய முடியவில்லை . நேற்றைய இந்த சம்பவத்தையும் மற்றைய சம்பவ பின்னணியுடன் பார்த்தோம் அதன்காரணமாக பொலிசாருக்கு அறிவித்தோம் .
இது தொடர்பாக விமர்சங்கள் எழுத்துள்ளது , இஸ்லாத்தை ஏற்றுகொள்ள போவதாக வந்தவர்களின் உள்ளங்களை நாம் திறந்து பார்க்க முடியாது அவர்கள் உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளும் நோக்கில் வந்திருக்கலாம் என்றும் இல்லை அவர்கள் எம்மை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கில் அனுப்பப் பட்டிருக்கலாம் என்றும் இரு கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளது .இது வரை மேற்படி சம்பவங்கள் நடந்து முடித்துள்ளது .
இஸ்லாத்தை ஏற்றக வருவோரை எப்படி அணுகுவது ACJU வழிகாட்ட வேண்டும் !
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா இஸ்லாத்தை விரும்பி ஏற்க வருபவர்களை நாட்டில் உள்ள மஸ்ஜிதுக்கல் இப்படிதான் செயல்படவேண்டும் என்ற பொதுவான வழிகாட்டி ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும் என்றும் ஹில்மி ஹாஜியார் வேண்டுகோள் முன்வைத்தார் .
M.ரிஸ்னி முஹம்மட்:
இஸ்லாத்தை ஏற்றக வருவோரை எப்படி அணுகுவது ACJU வழிகாட்ட வேண்டும் !
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா இஸ்லாத்தை விரும்பி ஏற்க வருபவர்களை நாட்டில் உள்ள மஸ்ஜிதுக்கல் இப்படிதான் செயல்படவேண்டும் என்ற பொதுவான வழிகாட்டி ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும் என்றும் ஹில்மி ஹாஜியார் வேண்டுகோள் முன்வைத்தார் .
M.ரிஸ்னி முஹம்மட்:
விண்டோஸ் 7 நிறுவ USB பிளாஷ் டிரைவ்வை வடிவமைத்தல்

குறிப்பு : விண்டோஸ் 7 யை சேமிக்க குறைந்த பட்சம் 4 GB கொள்ளளவு கொண்ட USB டிரைவ் தேவை
உங்களிடம் விண்டோஸ் 7 உடைய ISO இமேஜ் (Image) கோப்பு இருந்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச வசதியினை பயன்படுத்தி இலகுவாகவும் விரைவாகவும் உங்களுடைய USB பிளாஷ் டிரைவ்வினுள் இமேஜ் யை பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்தினால் .NET Framework 2.0மற்றும் Microsoft Image Mastering API v2 என்ற இரு மென்பொருட்களும் தேவைப்படும். இவற்றை கிழே உள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Download Windows 7 USB/DVD Download Tool
Download WinToFlash
முதலில் உங்களது USB பிளாஷ் டிரைவ்வை NTFS ஆக Format செய்து கொள்ளுங்கள்.
Download Windows 7 USB/DVD Download Tool
Download WinToFlash
முதலில் உங்களது USB பிளாஷ் டிரைவ்வை NTFS ஆக Format செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நேரடியாகவே செய்முறைக்கு செல்வோம், விண்டோஸ் 7 ISO கோப்பு உள்ள இடத்தை கொடுங்கள் அதோடு கிழே உள்ள "Next" யை கிளிக் செய்து தொடருங்கள்.
பின்னர் USB டிரைவ்வை தெரிவு செய்யுங்கள், இங்கே உள்ள மேலதிக தெரிவை உபயோகித்து உங்களுக்கு தேவை என்றால் ISO கோப்பை DVD யாகவும் burnசெய்துகொள்ளலாம்.
அதை தொடர்ந்து குறித்த USB டிரைவ்வை தெரிவு செய்து, "Begin Copying" என்பதை அழுத்துங்கள்
இப்போது டிரைவ் Format செய்யப்பட்டு கோப்புக்கள் அனைத்தும் USB டிரைவ்வினுள் சேமிக்கும் செயன்முறைகள் முடியும் வரைக்கும் காத்திருக்கவும்.
அதை தொடர்ந்து செயற்பாடுகள் முடிந்த பிற்பாடு USB டிரைவ்வினுள் விண்டோஸ் நிறுவதற்கு தேவையான அனைத்து கோப்புக்களும் அங்கே காணப்படும். இனி நீங்கள் USB டிரைவ்வில் இருந்து பூட் செய்து விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுதல் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம்.
WinToFlash
விண்டோஸ் 7 நிறுவதல் இறுவட்டில் உள்ள கோப்புக்களை USB டிரைவ்வுக்கு பரிமாற்றிக்கொள்ள இது இன்னுமொரு சிறந்த வசதி. இப்பொழுது நேரடியாகவேWizard செய்முறைக்கு செல்வோம் , விண்டோஸ் 7 யை USB இருந்து நிறுவதற்கு தயாராகுங்கள்.
இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் வித்தியாசமமான அட்வான்ஸ் அம்சங்களையும்,வேறு பட்ட விண்டோஸ் பதிப்புக்களையும் இது வழங்குகின்றது.
அடுத்து விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டின் இடத்தையும் பரிமாற்ற போகும் USB டிரைவ் இடத்தையும் கொடுக்க வேண்டும். இங்கே DVD டிரைவ் E: யாகவும் USB டிரைவ்F: ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் செய்முறை வேகத்தை அதிகரிக்க உங்களது Anti வைரஸ்யை மூட சொல்லி வேண்டுகோள் இடப்படும் அனால் கணணியில் MSE வேலை செய்வதால் வேகத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படாது.
அடுத்து, நீங்கள் 7 விண்டோஸ் EULA வுக்கு இணங்க வேண்டும், அதோடு "Continue" யை அழுத்துங்கள்.
இப்போது டிரைவ் Format செய்யப்பட்டு கோப்புக்கள் அனைத்தும் USB டிரைவ்வினுள் சேமிக்கும் செயன்முறைகள் முடியும் வரைக்கும் காத்திருக்கவும்.
முடிந்தது, இனி இனி நீங்கள் USB டிரைவ்வில் இருந்து பூட் செய்து எந்த கணணியிலும் விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுதல் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம்.
இறுதியாக இந்த இரு மென்பொருட்களில் எது உங்களுக்கு சிறந்தது என தெரிவு செய்து விண்டோஸ் 7 நிறுத்தல் கோப்புக்களை USB பிளாஷ் டிரைவ்வுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
'சியோனிச' உறவில் சிங்கள தேசியம் !
இயல்பாகவும் ,திட்டமிட்டும் மனிதப் பலவீனங்களை கொண்டு உருவாகும் சிக்கல்களுக்கு தனது தேவைப்பாட்டையும் ,பங்களிப்பையும் வழங்குவதன் ஊடாக தனது நிர்ணயங்களை திணித்து இஸ்ரேல் எனும் தேசத்தை அங்கீகரிக்க வைப்பதே யூதப் பொறிமுறை ஆகும் .
இஸ்ரேல் உருவாக்கம் ,மற்றும் பாலஸ்தீன் விவகாரம் தொடர்பில் காணப்படும் எதிர் நிலைப்பாடுகளை தமக்கு சாதகமாக பணிய வைப்பதன் அரசியலில் இருந்தே 'சியோனிசம் ' கொஞ்சம் கொஞ்சமாக தனது அநியாய முதுகெலும்பை நிமிர்த்திக் கொண்டது . 'இஸ்லாமிய கிலாபத் ' எனும் அதிகார சாம்ராஜ்யத்தை திட்டமிட்டு வீழ்த்தியது தொடங்கி ,இஸ்லாமிய பூமியை வெறும் முஸ்லீம் தேசிய நிலங்களாக பிரித்தது வரை இந்த சியோநிசத்தின் தீய கரங்கள் பங்களிப்பு செலுத்தியுள்ளன . இதன் மூலமாக இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு தேசத்தின் எல்லைகள் இலகுவாக பலப்படுத்தப் பட்டன .
ஆனால் சர்வதேச உறவு தொடர்பாகவும் , இஸ்ரேலின் அங்கீகாரத்தை விரிவு படுத்தல் ஊடாகவும் தனது அரசியல் பொருளாதார ஸ்திரத் தன்மையை தக்கவைப்பதட்கும் ,வெளி நாடுகளின் உள்வீட்டு விவகாரங்களில் உதவும் கரங்களாக தம்மை புகுத்தி அதிலிருந்து தமது அங்கீகாரத்தையும் ,சாதகத் தன்மையையும் பேணிக் கொள்வதே இஸ்ரேலிய சர்வதேச அரசியலாகும் . நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யப்படும் இத்தகு பொறி முறைக்கு தப்பாத அதிகாரங்களே இல்லை என்று சொல்லலாம் .
இன்னும் அண்மைய காலத்தில் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பில் தீவிர எதிர்ப்பு நிலையை காட்டி நிற்கும் பௌத்த பேரினவாத அமைப்பான 'பொது பல சேனாவின் ' தென் பகுதி பயிற்சி மன்றத்தில் யூதர்களின் நடமாட்டம் அவதானிக்கப் பட்டதாக 'விக்டர் ஐவன் ' (ராவய ) எனும் மூத்த பத்திரிகையாளர் குறிப்பிட்டதும் ,குறித்த பயிற்சி மன்றத்தை திறந்து வைத்தது இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் என்பதும் இந்த இடத்தில நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய அரசியலாகும் .
முன்னாள் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கூட இஸ்ரேலோடு கொள்கை கோட்பாட்டு ரீதியில் முரண்பாட்டு அரசியலையே கொண்டியங்கினார் . ஆனால் 1968 ஆம் ஆண்டு இந்திய உளவு அமைப்பான 'ரா' உருவாக்கப்பட்டபோது அதன் முதல் தலைவரான ராமேஸ்வர் நாத் காவ்விடம் இந்திரா காந்தி இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட் ' உடன் மிக நெருக்கமான உறவை பேணுமாறு கேட்டுக் கொண்டார் .எல்லையோரத்தில் சவாலாக இருந்த பாகிஸ்தான் ,சீனா என்பன இத்தகு மனப்பாங்கை அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம் . ஆனால் இதன் மூலம் வெளிப்படையாக எதிர்ப்புக் காட்டி ,மறைமுகமாக இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தை இந்தியா வழங்கியது . அதன் விளைவு நேரடி அங்கீகாரமாக வெளிப்படையாக 1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பதவி ஏற்ற போது நிகழ்ந்தது .
1975 ஆம் ஆண்டு சியோனிசம் இனவெறி என கூறும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டிருந்தது அதை எதிர்த்து 1991 இல் இஸ்ரேல் ஒரு தீமானத்தை கொண்டுவந்தபோது இந்தியா அதற்கு சார்பாக வாக்களித்தது .இந்த இடத்தில குறிப்பிடக் கூடிய முக்கிய விடயம் 1980 முதல் 1984 வரை நரசிம்மராவ் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் வெளி விவகார அமைச்சராக இருந்தார் .
இன்னும் இஸ்ரேலைப் பொறுத்தவரை அதற்கு பலத்த சவாலாக விளங்கிய PLO ,மற்றும் ஹமாஸ் போன்ற இராணுவ அமைப்புகளையும் பாலஸ்தீன் ,இஸ்ரேல் எனும் இரு தேசக் கோட்பாட்டு மாயை காட்டி
பலத்த சதி நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக தனக்கு பாதகமற்ற நிலைக்குள் கொண்டுவந்துள்ளது .இந்த உதாரண அரசியல் காலத்தால் இலங்கைக்கும் அவசியமாகியது . (இராணுவ தொழில் நுட்ப ரீதியான இஸ்ரேலிய உறவு 1980 களின் பிற்பகுதியில் இருந்து இலங்கையுடன் இருந்து வந்துள்ளது .இலங்கையின் STF எனப்படும் விசேட அதிரடிப்படை இஸ்ரேலிய பயிற்சியின் பின்னரே களமிறக்கப்பட்டது .)
இப்படி மிக நுணுக்கமான அரசியல் கடிவாளத்தை பெரிய ,சிறிய தேசங்கள் என்ற பாகுபாடின்றி யூத அரசியல் திணித்துள்ளது . தன்னை அனுசரித்தல் ,அங்கீகரித்தல் ,ஆதரவளித்தல் என்ற நிலையை அந்த அரசு எடுப்பதில் இருந்தே அதற்கு மாற்றீடாக குறித்த அரசுடைய விடயங்களுக்கான இராஜதந்திர உதவிகள் இஸ்ரேலால் மேட்கொள்ளப்படும் . இந்தவகையில் முஸ்லீம் எதிர்ப்பு என்ற பொது நிலை யூத ஆதரவு என்ற அங்கீகாரத்தின் வடிவமாகவே கொள்ளப்பட முடியும் . ஆனால் அரசியலில் இரட்டைத் தன்மை சதித் தனங்களை பேணுவது யூதப் பொது இயல்பு .விடுதலைப் புலிகள் விவகாரத்தில் இந்த அனுபவத்தை இலங்கை பெற்றும் உள்ளது . இருந்தும் இன்று இஸ்ரேலிய தயவு நோக்கி கைநீட்டியுள்ளது ஆச்சரியமே !!
யாரெல்லாம் இஸ்ரேலை அங்கீகரிக்கிரார்களோ அவர்களுக்கு பின்னால் தூய்மை அற்ற நிலையும் .தெளிவான சுயநலமும் ,ஒரு கொடூரமான அடக்குமுறை அரசியலும் காணப்படும் .ஆனால் அது உறுதி அற்றதும் அழியக் கூடியதுமாகும் . இந்திரா காந்தி ,இராஜீவ் காந்தி ,போன்றவர்களின் அயல் நாட்டு அரசியலில் இருந்தும் ,பிரேமதாசா , அதுலத் முதலி , காமினி திஸ்ஸநாயகா போன்ற உள்நாட்டு உதாரணங்கள் மூலமும் இதை உணராதவிடத்து ,ஒரு சுய அழிவு அரசியலில் பலிக்கடா எனும் தலைப்பில் தமது வரலாற்றை எழுதத் தொடங்கட்டும் . அது பல அப்பாவிகளின் இரத்தத்தை அத்தியாயமாக கொண்டு தொடர்ந்து இறுதியாக தனது இரத்தத்தால் முற்றுப்புள்ளி இடுவதாகவும் ஆகிவிடக்கூடும் .
-கைபர்தளம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஏ.வி.சுரவீரவின் இறுதிக் கிரியைகள் மினுவங்கொட பொது மயானத்தில் நடைபெற்ற போது, அங்கு சென்றிருந்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியிடம் சந்திரிக்கா இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் இந்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அமைச்சர் பௌசி, சந்திரிக்காவிடம் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் இருந்து அழைப்பு கிடைத்துள்ளதாகவும் தான் அதனை நிராகரிக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 10 அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தால் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளளார்.
தேர்தலில் போட்டியிட தனக்கு ஆதரவு வழங்கும் அந்த அமைச்சர்கள் அப்போது தன்னுடன் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் சந்திரிக்கா கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, சரத் பொன்சேகா, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தான் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிர்ப்புகளை கொண்டிருக்கவில்லை என்பதும் உறுதியாகி இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.-TC
குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 4 பேரை கொன்று போலீஸ்காரர் தற்கொலை
![]() |
Investigators outside the house in Utah where the five bodies were found. Photograph: Mark Johnston/AP |
![]() |
The bodies of Joshua Boren, 34, Kelly Boren, 32, Joshua Boren, 7, five-year-old Haley Boren and Marie King, 55 (not pictured) were found dead in a murder suicide in Utah on Thursday |
மறுநாள் எதிர்பார்த்த போது அப்போதும் வரவில்லை. எந்த தகவலும் அவரிடம் இருந்து மேல் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. சந்தேகம் அடைந்த சக அதிகாரிகள் விரைந்து சென்று அவரது வீட்டை பார்வையிட்டனர். வீட்டின் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் அனைவரும் இறந்து கிடந்தது தெரிந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் மனைவி, குழந்தைகள், மாமியார் மற்றும் ஜோசுவா அனைவரும் இறந்து கிடந்தனர்.விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக அனைவரையும் சுட்டு கொன்றுவிட்டு ஜோசுவா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்தது.இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.