உணர்ந்து திருந்திய நான்……?
அறுத்துப் பலியிட வேண்டுமென்று அண்மையில் வஹ்ஹாபிகள் சார்பாக கஹட்டோவிட வஹ்ஹாபிகள் சார்பாக முஜாஹித் மௌலவி பயான் பண்ணினார். தெளிவாகவே அதற்கு அவர் ஆதாரங்களை முன்வைத்தார். எனினும், முன்னோர்கள், மூதாதையர்களின் அரவணைப்பால் வளர்க்கப்பட்ட நான் மௌலவி முஜாஹித் அவர்களை ஒரு மார்க்க விரோதியாகவே பார்த்து வந்தேன். உங்களது இணையத்தளத்தில் நபிகளாரின் பிறந்த தினக் கொண்டாட்டம் பற்றிய நீண்டதொரு கட்டுரையையும் வாசித்தேன். ஆவேசத்துடன் வாசித்து அப்போ ஆத்திரமடைந்த நான் இப்போது பள்ளியில் நடைபெறுகின்ற பாட்டுக்கச்சேரியை நடுநிலையாக நின்று யோசித்தேன். அட……. இந்தப்பாட்டுக் கச்சேரி 12 நாட்கள் நடைபெறனுமா…? என்ன…… இபாதத் என்ற பெயரில் இப்படியொரு அனாச்சாரமா…..? இதன் விளைவு………? மாலை 7 மணியிலிருந்து இரவு 10 மணிவரை இந்தப்பள்ளிவாசலின் பக்கத்திலிருப்போர் நிலையென்ன? வயோதிபர், நோயாளிகள், ஏன் சிறு குழந்தைகள் அது போகடடும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் இவர்களுடன் எப்படிக்கதைப்ப …? அழைப்பு மணிக்கு எப்படிப் பதில் கொடுப்பது..? பெண்கள் வீட்டில் இஷாத் தொழுவது கூட சங்கடமான விடயமாகுமே! தனவந்தர்கள் கொடுக்கும் மனாகிப் என்ற வைபவம் அவரவர் தரத்திற்கேற்ப நடாத்தப்படுகிறது. பாட்டுக்களை நீட்டியும் கூட்டியும் பாடி இரவு 11 மணிவரை பாட்டுக் கச்சேரி நடைபெறும் நாட்களும் உள்ளன. பள்ளியிலிருந்து வெளியே வந்த நான் சிந்திக்கிறேன். ரஸ{ல் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இப்படியொரு அமல் நடந்திருக்குமா? இது இபாதத் ஆகுமா?இதனால் நன்மை கிடைக்குமா? அல்குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்களுக்கு 10 நன்மைகள் கிடைக்கும். குர்ஆன் ஓதுவதை செவி மடுத்தால் ஓதுபவருக்குக் கிடைக்கும் நன்மை கேட்பவருக்கும் கிடைக்கிறது. குர்ஆன் ஓதுவதைக் கேட்கின்ற பொழுது உள்ளத்திற்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. இது நோயாளிகளையோ இன்னுமுள்ளவர்களையோ தொந்தரவும் செய்யாது. குர்ஆனை ஓதுவதால் அது எமக்கு மறுமையில் சிபாரிசும் செய்யும். இவையெல்லாம் விட்டு விட்டு …… என்று பலதையும் சிந்தித்துக் கொண்டு பள்ளியிலிருந்து வீடு வரை வந்தேன். உள்ளே சென்றவுடன் வாப்பா விரட்டினார். போடா தக்கியாவிற்கு. நான் முடியாது என்றேன். இஷாவரைக்கும் குர்ஆன் ஓதப்போகின்றேன். இதனால் நன்மையை சம்பாதிக்கலாம். இனிக் கந்தூரி ஓதப் போகமாட்டேன். பக்கத்திலுள்ளோரைத் தொந்தரவும் செய்ய மாட்டேன். அருள் மறை என் கையில் உள்ளது. அனுதினமும் அதை வாசிக்கப் போகிறேன். முடியுமென்றால் என்னை அடியுங்கள். பதிலுக்கு நான் அடிக்க மாட்டேன். பொருமையாய் இருப்பேன். பெற்றவருக்கு என் துஆ என்ன தெரியுமா..? யாஅல்லாஹ் எனக்குக் கிடைத்த ஹிதாயத்தை என் பெற்றோர்களுக்கும் கிடைக்கச் செய்து நல்லன செய்து நபி வழி நடந்து மறுமையில் வெற்றிபெறனும் என்பது தான்..! உங்களது இணையத் தளத்திற்கு நன்றிகள். அல்லாஹ் உங்களது சேவையை சமூகத்திற்கு பயனுள்ளதாக ஆக்குவானாக…!
இப்படிக்கு,
உண்மையை விளங்கிய ஒரு ஊரான்.
(தகவலுக்கு நன்றி- தங்களது வேண்டுகோளுக்கிணங்க மடலைப் பிரசுரித்துள்ளோம்.)
இப்படிக்கு,
உண்மையை விளங்கிய ஒரு ஊரான்.
(தகவலுக்கு நன்றி- தங்களது வேண்டுகோளுக்கிணங்க மடலைப் பிரசுரித்துள்ளோம்.)
2 comments:
assalamu alikum prother, thats good, alhamdulillah, but i want to tell one thing, mujahid solwati mattum kettu enda mudivum edukka vendam, neengal quran, hadees enpawatri padiyungal. appadi illavittal neengalum sheik mari pinpatravarkalukkum vittiyasam illai. indru kahatowita thowheed parti mujahid sonna udane namburangal atai quran, hadees pondrawatti parpazilla. kahatowita thowheed makkal quran hadees padippadu avarhal solvatai vida kuraivu, etu atiham endral mujahid sonnal sari
thakkaya parti badib moulanawai pinpatranga
kahatowita thowheed parti mujahid moulavi pinpatranga
both are same not researching quran or hadees
thats all
assalamu alikum
ப்ரதர் என்ற பெயரில் எழுதும் சகோதரரே தாங்கள் கூறுவது நூறு வீதம் தவறு.நான் தவறு செய்கின்ற போது தவ்ஹீத் சகோதரர்கள் எனக்குச் சுட்டிக்காட்டித்; திருத்திய சம்பவங்கள் பல உள்ளன.அல்லாஹ் அவர்களுக்கு நல்ல கூலி வழங்குவானாக.ஆனால் சைகுதான் பல கொலைகளுக்குக் காரணம் எனத் தெரிந்தும் தரீக்காச் சகோதரர்கள் சைகுக்கு அதனைச் சுட்டிக்காட்டவில்லை.மாறாக கொலைக்குத் துணைபோனவனை வாழ்த்தினார்கள்.சைகின் அசைவிற்கு இசைவாகவே தரீக்காச் சகோதரர்கள் அனைவரதும் நடவடிக்கைகள் இருக்கின்றன.சைகு கேள்வி பதில் நிகழ்ச்சி வைப்பது கிடையாது.காரணம் சைகை கேள்வி கேட்க்க முடியாது.ஆனால் தௌஹீத் சகோதரர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னாலும் சொல்பவற்றைக் கேள்விகள் எழுப்பித் தெளிவடைவார்கள்.கஹடோவிடவிற்கு பல தௌஹீத் உலமாக்கள் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள்.அவர்களில் நானும் ஒருவர் அன்றி சகோதரர் எழுதியது போன்று எதுவும் இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஓர் உண்மை.எழுத்துக்களை நேர்மையாகவும் சரியானதகவும் அமைத்துக் கொள்வது நல்லவர்களுக்கு நல்லது.
Post a Comment