இஜ்லான் மௌலவியின் சீற்றம்
நேற்று நடைபெற்ற மனாகிப் வைபவத்தில் உரையாற்றிய இஜ்லான் மௌலவி, பாதிபிய்ய தக்கியாவில் இயங்கி வரும் மத்ரஸாவிற்கு போதுமான உதவிகள் கிடைக்காததால் அது அதள பாதளத்தை நோக்கிச் செல்வதாகவும், இதனால் தரீக்காக்களைக் கட்டிக்காக்கின்ற ஆலிம்சாஹிபுகள் இல்லாமற்போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், இந்நிலை தொடருமானால் தரீக்காக்களே அழிந்து போகுமெனவும் ஆவேசமாகப் பேசியுள்ளார். ஏற்கனவே அந்த மத்ரஸாவிலிருந்து பல மாணவர்கள் விலகியிருக்கும் நிலையில் இஜ்லான் மௌலவியின் இந்த உரை பல யதார்த்தங்களைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஆக ஊர் மக்கள் இது விடயத்தில் பொறுப்புணர்ச்சியோடு செயல்படவேண்டும்.
9 comments:
செய்தியெல்லாம் போடனும் சரிதான், அதுக்காக இதுமாதிரியெல்லாம போட்டு இந்தக் குழுமத்த அழிச்சிறாதீங்க
In My eYe
AfA
please tell me , where is this , KABUR, ? is it KAHOTOWITA ???
who is said to have been BURIED HERE ?? WHICH AWLIYAA??? PL TELL ME SOME DETAILS OF THIS KABR story and the LEBBAIS around it.........
tnx....
"ஊர் மக்கள் இது விடயத்தில் பொறுப்புணர்ச்சியோடு செயல்படவேண்டும" என்னதான் சொல்லவாரீங்க...
இஜ்லான் மௌலவிதான் வேலவெட்டியில்லாம (உலகம் தெரியாம) என்னமோ உலறுகிறார் என்றால் அதற்கு நீங்களுமா......
நளீமியா, இஸ்லாஹியா, கல்ளெளிய போன்ற மதுரஸாக்களிலே படிக்கின்றமாணவர்களுக்கே போதியலவு தொழில்வள வழிகாட்டளின்மையால் தட்டுத்தடுமாறுகிறார்கள். அப்படியிருக்க கந்திரி,கத்தம், மனாகிபு, சாப்பாடு இவைகளை மட்டுமே நம்பிவாழப்போகின்ற இந்த பச்சிலம் பாலகர்களை உருவாக்க நாம் பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்கவோண்டுமா.
பாவம் பிள்ளைகள், எதிர்காலமே கேள்விக்குறியாக மாறும்…? இந்த மத்ரஸாவிற்கு புது மாணவர் அனுமதியின் போது க.பொ.த சாதாரண, உயர்தரத்திற்குறிய பாடங்கள் போதிக்கப்படுவதாக விளம்பரம் போடுறாங்க. ஆனா அப்படி ஒரு பாடத்திட்டம் அங்கில்லை. ஒரு சிலரின் வயிற்றுப் பிழைப்பிற்கு பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக்குறாங்க. பாவம் பிள்ளைகள்…?
வலிமார்கள்தான் இலங்கையில் பலம்பெறும் மத்ரஸாக்களை நிறுவியதாக இஜ்லான் மௌலவி அந்த உரையில் கூறினார். அப்படீன்னா பாதிப் மௌலானாவின் பாசறையில் உருவான இந்த மத்ரஸாவிலிருந்து இதுவரை எத்தனை ஆலிம் சாஹிப்கள் உருவாகி இருக்க வேண்டும்? ஆனா நிலைமையோ பரிதாபமாகவுள்ளது. முழுமையாகவே அந்த மத்ரஸாவிலிருந்து இறுதி வரை ஒழுங்காகப்படித்துப்பட்டம் பெற்ற ஒருவரையாவது காண ஆசையாகவுள்ளது. பாதிப் மௌலானாவின் கப்ருக்குப்பக்கத்திலுள்ள அந்த மத்ரஸாவுக்கு அவர்கள் சொல்வது போல பேரருளல்லவா பொழிய வேண்டும். ஆனா அப்படி எதையும் காணவில்லையே. இஜ்லான் மௌலவி கெஞ்சும் அளவுக்கு மத்ரஸாவுக்கு பெரும் கோடையல்லவா அடிக்கிறது. அந்த மத்ரஸாவுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபடும் ஒருவர் தனது மகனை அந்த மத்ரஸாவிலிருந்து விலக்கியிருப்பதையும் காண முடிகிறது.இதுவெல்லாம் எதைக்காட்டுது என்றால் பழைய பண்ணாடைகளையெல்லாம் படித்து தமது பிள்ளைகளால் நன்றாக கச்சேரிகளைத்தான் அரங்கேற்ற முடியும் புதத்தி ஜீவிகளாக அவர்களால் ஆகமுடியாது என்பதை அந்த சகோதரர்கள் மெல்ல மெல்ல உணர்கிறார்கள் என்பதையே. ஆக அறிவுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் சிறந்த பாடத்திட்டமும்,தகுதியான ஆசான்களும் அவசியம் என்பதை நலன் விரும்பிகளாவது புரிந்து கொள்ளட்டும்.
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று எமது கஹடோவிட குக்கிராமத்தில், பல கொள்கைகளை சேர்ந்த பல படித்த மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள், மார்க்கத்துடன் சேர்த்து தமது படிப்பை படிக்காமையாலே இன்னமும் அவர்கள் தமது மூதாதையர்கள் பின்பற்றிய வழிகளையே இன்னமும் தொடர்கின்றனர். மௌலவிமார்கள் (அக்கால மௌலவி) ஒன்றுமே தெரியாதவர்கள்,,, தாம் பேசுவது எந்த தலைப்பே என்று தெரியாமல் பேசுவார்கள், உலக அறிவு கொஞ்சம் கூட இல்லாமல்... அல்லாஹ் எமக்கு சிந்திக்கும் திறனை தந்துள்ளான். குர்'ஆண், ஹதீஸ், என்ன சொன்னாலும் அதை நாம் செய்யணும். முதல்ல அவைகளை படிக்கணும். அவைகளில் உள்ளவற்றை ஆராயணும். பின் மற்றவர்களுக்கு சொல்லணும்.... தரீகா வாதிகளின் பயானையும், தௌஹீத் வாதிகளின் பயானையும், இன்னும் உள்ள இயக்க வாதிகளின் பயானையும் ஒப்பிட்டு, நடுநிலையாக மக்களாகிய நாம் சிந்தித்தால், உண்மைபுரியும்.
நன்றி
ஷாதிர்
http://www.onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/pervetippu_sothanai/
தங்களது தளம் தௌஹீத் ஜமாஅத்துடைய பல ஆக்கங்களை பிரசுரிப்பதனால் இதனுடன் தொடர்புடைய ஒரு கேள்வியை முன்வைக்க நினைக்கின்றேன். தொழுகையின் பின்னர் கூட்டு துஆ இல்லை என்றும் நபியவர்கள் தொழுகையின் பின்னர் ஓதிய அவ்றாதுகள் என்று ஒரு பெரிய அவ்றாது அட்டவனை ஒன்றை பல தௌஹீத் பள்ளிகளில் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. இதிலுள்ள துஆக்களே ஸஹீஹானது என்றும் கூறுகின்றனர். இப்போது பிரச்சினை என்ன வென்றால், மிக அண்மைக்காலமாக இந்த அவ்றாதில் ஆயதுல் குர்ஸி ஓத வேண்டும் என்று வந்திருப்பது தவறானது என்றும் இது சம்பந்தமான ஹதீஸ் ளஈபானது என்றும் சில தௌஹீத் வாதிகள் சொல்கின்றனர். ஒரே குழப்பமாக இருக்கு. இவ்வாறு அடிக்கடி ஹதீஸ்கள் ஸஹீஹாவதும். ளஈபாவதும் ஏன்…? இவ்வாறான அட்டவணைகளைத் தயாரிக்கும் பொழுது ஸஹீஹ் , ளஈப் பார்ப்பதில்லையா…?
தவ்ஹீத் பள்ளிகளில் மாத்திரம் அவ்றாதுகள் தொங்கவிடப்படுவதில்லை. அண்மையில் இலங்கை ஜம்மியத்துல் உலமாவினாலும் இதே அட்டவைணை வெளியிடப்பட்டு அது பல பள்ளி வாசல்களில் தொங்கவிடப்பட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாத்தால் வெளியிடப்பட்ட அட்டவணையில் தெளிவாக முகவரியிடப்பட்டுள்ளதால் குறித்த முகவரியோடு தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். என்னைப் பொருத்த மட்டில் இந்த விடயங்களை இங்கே அலாவுவதை விட ஊர் தொடர்பான பொதுவான செய்திகளைப் பற்றிப் போசுவதே இத்தளத்தைப் பொருத்த மட்டில் தகுந்ததாகும்.
Post a Comment