கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள் (Part 02)

விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இது வளர்ந்துகொண்டேஇருக்கும்.வளர்ந்து வளர்ந்து விண்ணை முட்டும் போது கியாமத் நாள்-மறுமை நாள்- வந்துவிடும் என்றார்.

அவர் காலமான பிறகு அவரது மகனார் தந்தையின் பதவிக்கு வந்தார். அவரிடம் இது பற்றி விசாரித்தபோது “அப்படி மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறிவிட்டார். இப்போது அவரது பேரரைக் கேட்டால் “இதுவெல்லாம் போலியான செய்திகள்” என விளக்கமளித்தார். ஆதீன கர்த்தாக்களான அவரது குடும்பத்தாரே இந்தப் பொய்ச் செய்திகளை நம்பமுடியவில்லை. இருந்தும் பொய்களைப் பரப்பி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.

வியாபாரி அவ்லியா
அவரே மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ். இவர் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்? என்பது தெரியவில்லை. வியாபாராத்திற்காக வந்தவர் அந்த ஊரிலே இறந்து விட்டார். நல்ல மனிதராகத் தெரிந்ததால் அவரை அடக்கம் செய்து பெரிதாக கப்ரும் கட்டிவிட்டார்கள். பின்னர் அவரை ஒரு மகானாகச் சித்தரித்து “மெய்நிலை கண்ட ஞானி மஹான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்வாக” விளம்பரப்படுத்தி இன்று ஆண்டு தோறும் விமரிசையாக விழா நடத்தி வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.

மோதீனார் அவ்லியா
இவர் தான் மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்! திருவிதாங்கோடு அஞ்சு வன்னம் ஜும்மா பள்ளியில் அடக்கமாயிருக்கும் இவர் அந்தப்பள்ளி வாசலில் மோதீனாராக பணியாற்றி வந்தவர். அங்கே அவ்லியா இல்லாத குறையை போக்க வழி தேடிக்கொண்டிருந்த ஊர் மக்களுக்கு,”இது நமக்குக் கிடைத்த மிகப் பெரும் பேறு” எனக் கருதி சாதாரண நூருத்தீன் மோதீனாராக இருந்த இவரை “மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்” என விளம்பரப்படுத்தி இன்று அவருக்கும் கோலாகலமாக ஆண்டு தோறும் விழா நடைபெற்று வருகிறது.

பாறையை தாங்கி நிற்கும் ராட்சஸ அவ்லியா
சிரியாவிலிருந்து படகேறி வந்த இவரும் இவரது சீடர்களும் திருச்சி வந்து அங்குள்ள மலைமீது தவம் செய்து வந்தனர்.அப்போது சில பூதங்கள் ஒன்று திரண்டு இவர்கள் மீது ஒரு பாறையைத்தள்ள இவர்கள் தம் தவவலிமையால் அது தம்மீது விழாது செய்தனர். அப்பாறை இப்போதும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது. அது தம்மீது விழாது இவர்கள் தம் பாதங்களை ஊன்றி நின்றபோது இவர்களின் பாதங்கள் பதிந்த அடையாளமும், பாறையின் மீது இவர்களின் கை பதிந்த அடையாளமும் இப்பொழுதும் இருக்கின்றன என அவர்களது பக்தர்கள் கூறி வருகின்றனர். திருச்சி நத்ஹர்ஷh வலியைப்பற்றிச் சொல்லப்படும் இந்த கதையை நம்ப முடிகிறதா ? அனுமான் கதை தான் இது!
புலியாக வந்து காப்பாற்றும் நடமாடும் அவ்லியா
நெல்லை மாவட்டம் பொட்டல் புதூருக்கு மேற்கே ஏழு கல் தொலைவில் 1800 அடி உயரத்தில் கோதரிசா மலை உள்ளது. இங்கு கோதரிசா என்ற அவ்லியா வாழ்ந்து மறைந்தார். அவரின் நடமாட்டம் இப்பொழுதும் இருக்கிறதென்றும் புலிமீது இவர் இவர்ந்து வருவதைச் சிலர் பார்த்திருப்பதாகவும், சிலர் அவருடன் உரையாடியிருப்பதாகவும், எவருக்கேனும் வன விலங்குகளால் ஆபத்து நேரும்போது இவர் காட்சி அளித்துக் காப்பாற்றுவதாகவும் கூறப்படுகிறது. கிள்று (அலை)மீது கட்டிவிடப்பட்ட கதை தான் இது.

ஐவேளையிலும் ஆடுபோல் கத்தும் அவ்லியா
துருக்கி நாட்டைச் சேர்ந்த கோயுன் பாபா என்ற அவ்லிய வாய்பேசுவது இல்லை. ஐந்து வேளை தொழுகைகளின் போது ஆடு கத்துவது போன்று கத்துவார். இதன் காரணமாக இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது எனக்கூறும் மக்கள், எப்படித்தான் வாய் பேசாமல் ஆட்டைப்போன்று கத்தும் ஊமையரை ஆன்மீக ஞானம் பெற்ற அவ்லியா என ஏற்க மனம் வந்ததோ ?

காடு மலைகளில் தாவி தவமிருந்த அவ்லியா
கருவிலே ஞானியான மோன குரு மஸ்தான் ஏழு வயதிலேயே வாயை மூடியதால்”ஊமைப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டார்.இளம் வயதிலேயே துறவறத்தை மேற் கொண்ட இவர் நாற்பது நாட்கள் கல்வத்தில் (தனித்திருந்து இறை தியானத்தில)ஈடு பட்டிருந்தனர். பின்னர் சிகக்ந்தர் மலையிலும், பீரான் மலையிலும், மலேயாவிலுள்ள கொடிமலையிலும், இலங்கையிலுள்ள ஆதம் மலையிலும், தஃப்தர் ஜெய்லானியிலும் தவமிருந்தார். பின்னர் சாமி நாதன் செட்டியாரும், சுப்ரமண்யம் செட்டியாரும் இவருக்கு தொண்டியின் கடற்கரை அருகில் கடடிக் கொடுத்த மடத்தில் அமர்ந்து அருளுரை வழங்கினார்.இவர் யாரிடமும் பேசுவதில்லை. எப்போதும் மௌனமாகவே இருப்பார். பின்னர் எப்படித்தான் அருளுரை வழங்கினாரோ? அவரைப்பற்றிய மோனகுரு மஸ்தான் சாகிபு பாடலில் இந்தச்செய்தி இடம் பெற்றிருக்கிறது.

பறக்கும் அவ்லியாக்கள்!
விமானங்களோ விண்கலங்களோ பறக்கும் தட்டுகளோ இல்லாமல் மனிதர்கள் பறக்கும் அதியத்தைப் பார்த்திருக்கிறீர்களா? பல்கு நாடு ஈன்ற மாபெரும் இறை நேசர் எனப்போற்றப்படும் அஹ்மது இப்னு கஸ்ரவிய்யா அவர்களுக்கு 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். இவர்களது வரலாறறில் இவர்கள் அத்தனை பேரும் ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் போது நடந்து செல்வதில்லையாம். பறந்தே செல்வார்களாம!

இதைப்போன்றே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் தண்ணீரிலே தொழுகை விரிப்பை (முஸல்லாவை) விரித்து தொழுது கொண்டிருந்தார்களாம். இதைப்பார்த்துக் கொண்டிருந்த இறை நேசச்செல்வி ராபியா பஸரிய்யா அவர்கள், இதற்குப் போட்டியாக” இவ்வளவு தானா உங்களின் வல்லமை!” நான் விண்ணிலே தொழப்போகிறேன்’ என முஸல்லாவை வானத்தை நோக்கி வீசியெறிந்து விட்டு அதில் தாவிச்சென்று தொழுது கொண்டிருந்தார்களாம். இப்படியெல்லாம் சாகஸங்கள் செய்ய இந்த அவ்லியாக்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? விளம்பரமே இல்லாது இலைமறைகாயாக வாழ்ந்த இந்த இறையடியார்களை மார்க்கத்தின் பெயரால் இப்படித்தான் புகழவேண்டுமா? இவ்வாறு தான் பெருமைப் படுத்த வேண்டுமா? கப்ஸாக்களை அள்ளி வீசவேண்டுமா? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

மிதக்கும் மஹான்கள்!!!
மஹான் அஹ்மது கஸ்ரவிய்யாவின் மாணவர்கள் தண்ணீரிலே நடந்து செல்வார்களாம். இவ்வாறு பல அவ்லியாக்கள் தண்ணீரிலே நடந்ததாகவும் மிதந்ததாகவும் பலரைப்பற்றியும் பொய்க் கதைகளை வாய் கூசாமல் அள்ளி வீசுகிறார்கள்.எழுதுகிறார்கள். இதற்கெல்லாம் மறுமையில் விசாரணைகள் இல்லையா?

இலங்கையில ஒளிவீசும் அவ்லியா
இலங்கையில் தஃப்தர் ஜெய்லானி என்றொரு இடம் மலை முகட்டில் உள்ளது. அங்கே உள்ள துவாரத்தில் பார்த்தால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானின் ஒளி வீசிக்கொண்டு இருப்பதாக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்து வருகின்றனர். இந்த அதிசயத்தை 1978ல் நாமும் பார்த்து வர மாணவர் குழுவுடன் சென்றோம்.அந்த இடத்தை பார்வையிட்டபோது துவாரம் செல்லும் அடிவாரத்தில் சூரியனின் ஒளிபட்டு அங்கே வெளிச்சம் தெரிகிறது.இதை வைத்து அவ்லியாவின் ஒளி வீசுகிறது என கதை கட்டிவிட்டார்கள். இந்த ஒளி பகலில் மட்டும் தான் தெரியும். இரவில் தெரிவதில்லை.இதிலிருந்தே அவ்லியாவின் ஒளி இல்லை எனடபதை எந்த பாமரனும் புரிந்து கொள்ளலாம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி இலங்கைக்கு வந்ததாக வரலாறே கிடையாது. ஏன் இந்தியாவுக்கக் கூட அவர்கள் வந்ததில்லை.

இந்த கதையைப்பார்க்கும் போது கடலூர் வள்ளலாரின நினைவு தான் வருகிறது. கடலூரில் வள்ளலாரின் ஜோதி அதிகாலை 4.30 மணிக்குத் தெரியும் என்று மக்கள் திரளாகச் சென்று பார்த்துவருவார்கள். இதைப்பற்றி தீர விசாரித்தபோது அங்கே ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நமது சகோததரர் சொன்ன செய்தி நம்மை சிரிக்க வைத்தது.

அங்கே ஒவ்வொரு நாளும் சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கிப்போகும் இரயில் அதிகாலையில் கடலூர் வழியாகச் செல்லும்.கடலூரை கடந்து செல்லும் ரயில் அங்கே உள்ள வளைவில் திரும்பும்போது அதன் விளக்கொளி சிலநிமிடங்கள் ஊருக்குள் வீசும். அதைப்பார்த்து வள்ளலாரின் ஒளி வீசுவதாக வள்ளலார் பக்தர்கள் கட்டி விட்ட கதை இது என்று அவர் சொன்னபோது வாய்வெடிக்ச் சிரித்தோம்.

காலடியில் கஃபத்துல்லாஹ்!
பல்லாயிரம் மைல்களைத் தாண்டி கண நேரத்தில் மக்கா வந்து தொழும் அவ்லியாக்களைப் பார்த்திருக்கிறீர்களா ? ஒருமுறை ‘பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள் பள்ளிவாசல் வந்து தொழுவதில்லை’ என மக்கள் ஸதகத்துல்லாஹ் அப்பாவிடம் புகார் கூறினார்கள். அதை நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவர்களின் வீட்டைத்தேடி வந்த அப்பா அவர்கள், பீரப்பாவின் நலன் விசாரித்த பிறகு வந்த விசயத்தை கேட்டேவிட்டார்கள். அப்போது பீரப்பா அவர்கள் ‘நான் மக்கள் நடமாடும் பள்ளிவாசல்களில் தொழுவதில்லை.எப்போதும் மக்கா சென்று கஃபத்துல்லாஹ்வில் தொழுவது தான் வழக்கம் என்று கூறியதும், அது எவ்வாறு சாத்தியப்படும்? என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள் ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள். அதைக் கேட்ட பீரப்பா அவர்கள் ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டுவிட்டு ‘இதோ பாருங்கள்! என்று தாம் நெசவு நெய்துகொண்டிருந்த குழியிலிருந்து தமது காலை அகற்றினார்கள். அங்கே பாதம் இருந்த இடத்தில் கஃபத்துல்லாஹ் தெரிந்ததாம். அதில் பீரப்பா பக்தியோடு தொழுது கொண்டிருந்தார்களாம். இந்தப் பொய்க் கதையை அறிவுலகில் வாழும் உங்களால் நம்ப முடிகிறதா?

கஃபாவுக்குப் பறக்கும் அவ்லியா
காயல்பட்டணம் தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் ஒவ்வொரு வக்துக்கும் கஃபத்துல்லாஹ்வுக்குச் சென்று தொழுது வருவார்களாம். அதற்காக வைத்திருக்கும் ஒருமரப்பெட்டியில் ஏறி அமர்ந்ததும் அது கஃபாவுக்குப் பறந்து சென்று திரும்பி வந்து விடுமாம். அந்த மரப்பெட்டி இன்றும் அவர்கள் நினைவாக அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் வேடிக்கையைப் பார்க்கலாம்.

குடலைக்கழுவும் அவ்லியா!
ஒருமுறை ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள் காட்டுபாவா சாஹிப் மலை முகட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார்களாம். அங்கே ஒரு நீரோடையில் பீரப்பா அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் தமது குடலை காறி உமிழ்ந்து துவைத்துக் கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எனக்கேட்டார்கள் அப்பா அவர்கள். உடனே பீரப்பா அதை மீண்டும் விழுங்கிவிட்டு ‘ துவைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்’. என பதில் சொன்னார்களாம். இவையெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களா?

கயிறில்தொங்கும் அவ்லியா
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1950களில் மக்கட்டி இலப்பை என்று ஒரு மஹான் இருந்தார்.அவர் பல வேடிக்கைகளை செய்வதுண்டாம். ஒரு நாள் ஒரு கடைக்குச் சென்று வாழைப்பழம் கேட்டிருக்கிறார். கடைக்காரர் இல்லையென்று விரட்டிவிட்டார். மறுநாள் காலையில் கடையைத்திறந்தபோது இந்த அவ்லியா பழக்குலை கட்டியிருந்த கயிற்றில் கழுத்தைக்கட்டி தொங்கிக் கிடந்தாராம். திடுக்கிட்ட கடைக்காரர் உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததும் அவர்கள் விரைந்து வந்தனர். பிரேத விசாரணைக்காக உடலை பரிசோதனைக்குக் கொண்டு செல்ல கயிற்றை அறுத்தபோது ‘ இங்கேயும் தூங்க விடமாட்டீர்களா? தொல்லை தருகிறீர்களே! என்று சலித்துக்கொண்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டாராம்.

புறா,வண்டு,ஈ,ஓலையிடம் பேசும் வித்தக அவ்லியா!
கி.பி 1268 ல் வாழ்ந்த கீழக்கரை பல்லாக்கு வலியுல்லாஹ்வைப்பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. இவர் ஒரு மஜ்துர்ப். தன்னிலை மாறும் போது உணர்வற்று வாயில் வந்த படி உளறுவார். அப்போது இவர்களுக்கு தொழுகை கடமையில்லையாம்.

புறா,வண்டு, ஈ, ஓலை ஆகியவை பேசும் பேச்சை அறியும் ஆற்றலை இறைவன் இவர்களுக்கு வழங்கியிருந்தானாம். ஒரு தடவை இவர்கள் ஒரு புறாவைச் சுட்டிக்காட்டி ‘இது என்னை காத்தமுல் வலி (வலிமார்களுக்கெல்லாம் இறுதி வலி) என்று கூறுகின்றது என்றார்;. மற்றொரு தடைவ ஒரு வண்டைச் சுட்டிகாட்டி இது என்னை ‘ ஸையிதுல் ஆலிம்’ ( அறிஞர்களின் தலைவர்’ என்று கூறுகின்றது என்றார்.

வேறொரு தடவை தம் உடல் மீது வீற்றிருந்த இரு ஈக்களை சுட்டிக்காட்டி ‘ இதில் ஒன்று பல்லாக்குத் தம்பி ஒரு முஃமின்’ என்று கூறுகின்றது. முற்றொன்று பல்லாக்குத் தம்பி ஒரு வலியென்று கூறுகின்றது என்றாராம்.

நபி ஸுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமே பறவை இனங்களின் மொழியை அறியும் ஆற்றல் வழங்கப்பட்டிருப்தாக திருக்குர்ஆனின் 27:16 வசனம் கூறுகிறது.ஆனால் இந்த மகானோ தனக்கே எல்லாம் வழங்கப்டிருப்பதாகக் கூறுகிறார்.தன்னிலை மறந்து உளறும் இவரது கூற்றை எப்படி நம்புவது ? அதுவும் தொழுகையே இல்லாத இவர் எப்படி அல்லாஹ்வின் அருளைப்பெற்று பறவை,வண்டு,ஈ போன்றவற்றின் மொழிகளை அறிந்திருக்கும் ஆற்றலைப் பெற்றார். இது சாத்தியம் உண்டுமா என ஆராய்ந்தாலே இவரைப் பற்றிக் கூறப்படும் கதைகள் பொய்யானவை என்பது நமக்குப் புரிய வரும்.

40, 60, 80 அடி நீளத்தில் அவ்லியாக்கள்.
தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டையில் அடங்கப்பெற்றிருக்கும் செய்கு தாவூது வலி யார் , எங்கிருந்து எப்பொழுது இங்கு அடக்கமானார் என்று எவருக்கும் தெரியாது.இவரின் அடக்கவிடம் 40 ழுழம் நீளமுள்ளதாக இருக்கிறது. இவர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து பல சித்து வேலைகள் செய்து அடங்கப்பெற்றார் என்றும் அது கால வெள்ளத்தால அழிந்து விட்டதென்றும் பின்னர் 200 ஆண்டுகளுக்குப்பின் கருப்பையாக் கோனார் தம் தரிசு நிலத்தை உழவே ஏரின் கொழுமுனை இவரின உடலைத் தாக்கி இரத்தம் பீருட்டு வந்ததென்றும், அவரும் கண்ணொளி இழந்தார் என்றும் அன்றிரவு, அவரின் கனவில் இவர் தோன்றி ‘ தம் பெயர் iஷகு தாவூத் என்பதாகவும் தாம் அங்கே அடங்கப் பெற்றிருப்பதாகவும் அண்மையிலுள்ள நாச்சி குளத்துக்குச் சென்று அங்குள்ள பீர்கான், ஹமீது கான் இருவரையும் அவ்விடம் அழைத்துவரின் அவர் கண்ணொளி மீளப்பெறுவார் என்று கூறியதாகவும் அவ்விரு பெரியார்களின் கனவிலும் இம்மகான் தோன்றி தம்மைப்பற்றியும் கோனார் வருவது பற்றியும் எடுத்துரைத்து மறைந்ததாகவும், அவ்வாறே கோனார் செய்யவே கண்ணொளி மீளப்பெற்றார். அந்த நன்றிகடனாகவே ஐந்தரை வேலி நிலத்தை மானியமாக வழங்கி அதன் மீதே 40 அடி தர்கா எழுப்பியதாகவும் கதை போகிறது.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள்,சித்த சுவாதீனமற்றவர்கள்,சூனியம் வைக்கப்பட்டவர்கள், மகப்பேறில்லாதவர்கள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர்.அவர்களின் கனவில் இம்மகான் தோன்றி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும்,கனவில் நோயாளர்களுக்கு அறுவை சிகிட்சை செய்வதாகவும் , அவர்களுக்குத்துணையாக ஒரு பர்லாங் தொலைவில காஷ்மீரிலிருந்து வந்து அடங்கப் பெற்றுள்ள ‘பாத்திமா நாச்சியார்’ நர்ஸாக நின்று உதவுவதாகவும் கதை கூறப்படுகிறது.

அவ்லியாவின் சித்து வித்தைகளும் அந்நிய மங்கையான ‘காஷ்மீர் கன்னி’ இரவிலே வந்து இவருக்கு உதவும் கற்பனைக் கதைகளையும் இன்னும் நம்பிக் கொண்டு ஈமானை அடகு வைக்கும் மக்களின் அறியாமையை என்னென்பது ?

இவருக்கு போட்டியாக கொடிக்கால் பாளையத்தில் ஜஹான்ஷா அவ்லியாவின் அடக்கவிடம் 60 அடி நீளமுள்ளது என்றும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

இன்னும் ஒரு படி மேல் சென்று ஓமான் நாட்டில் ஸலாலாவில் ஸாலிஹ் என்ற பெரியாரின் கப்றை 80 அடி நீளத்தில் கட்டி இவர் 80 அடி உயரமுள்ளவர் எனக்கூறி வருவது இதை விட வேடிக்கையாக இல்லையா ?

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த (மகாமு இப்றாஹீம்) கல்லைப்பற்றி திருமறை திருக்குர்ஆன், ‘அல்லாஹ்வின அத்தாட்சியாக’ வர்ணிக்கும் தடயத்தை புனித ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஆண்டுதோறும் தம் கண்களாலேயே கண்டு வருகின்றனர். அந்தக் கல் அடையாளத்தைப் பார்க்கும் போது இப்றாஹீம் நபி சுமார் ஏழு அடி உயரமுடையோராகவே இருந்திருப்பார்கள் என நம்மால் கணிக்க முடிகிறது. இவ்வாறிருக்க 700 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த மனிதர்கள் 40,60,80 அடி உயரமுடையவர்களாக இருந்திருக்க முடியும் என்பதை நம்ப முடிகிறதா? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? இன்றைய அறிவுலகம் இதை ஏற்றுக் கொள்ளுமா ? இவ்வாறு பிதற்றுவோரைப் பைத்தியக்காரர்கள் என உலகம் நகைக்காதா ?

காற்றாடி அவ்லியா
1975 ஆம் ஆண்டுகளில் கன்னியா குமரி மாவட்டம் ஆளுரில் ஒரு அதிசயம் நடைபெற்றது. அங்கிருந்த கப்ரு ஒன்றில் கப்ரைப் போர்த்தியிருக்கும் துணி காற்றில் வேகமாக ஆடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட சுற்று வட்டார மக்களும், பள்ளிவாசல் இமாம்களும், ஹஸ்ரத் மார்களும் கப்ரு ஆடிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக்காண படையெடுத்துச் சென்றனர்.
பின்னர் தான் வேடிக்கை காட்ட அந்த ஊரிலுள்ள விஷமம் நிறைந்த சில இளைஞர்கள் ‘ இதை வியாபாரமாக்க துணிக்குள்ளே சிறிய மின் விசிறி ஒன்றை பொருத்தி மூடிவிட்டனர். சற்றுத் தொலைவில் யாரும் பார்க்காத வண்ணம் மின்விசிறிக்கு மின்சார இணைப்பைக் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

மின்விசிறியினால் துணி ஆடிக்கொண்டிருந்ததால் ‘அவ்லியாவே ஆடிக்கொண்டிருப்பதாக’ வதந்திகள் பரவின. காற்றாடி அவ்லியாவைப் பார்க்க பக்தர்களும், பக்தைகளும் திரள ஆரம்பித்தனர். இந்த ஒரு மாத காலத்தில் நேர்ச்சைகளும், உண்டியல் பணங்களும் குவியத்தொடங்கின. திட்டமிட்ட வசூலைப் பெற்றதும் அந்தப் போலிகள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டனர். மக்களை ஏமாற்ற எத்தனையோ வழிகள் ! வியாபார வித்தைகள் !! மக்கள் ஏமாற ஏமாற புதுப்புது அவ்லியாக்கள் திடீர் பிள்ளையாரைப் போல் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹயாத் அவ்லியாக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், திட்டுவிளையில் இரு கப்றுகளை ‘ஹயாத் அவ்லியா’ என்று கூறுகின்றனர். இவர்களை மண் தோண்டிப் புதைத்தபிறகு மீண்டும் வேறு வழியாக வெளியேறிவிடுவதால் இவர்கள் ‘ஹயாத் அவ்லியா’ உயிருள்ள அவ்லியா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மட்டும் உயிரோடிருந்து மற்றவர்களெல்லாம் செத்த அவ்லியாக்கள் என சொல்ல வருகிறார்களா? இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்பதைக்கூட சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

படகிலே மையித்தாக மிதந்து வந்த குளச்சல் அவ்லியா
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் முன்பொரு காலம் ஒரு படகு மிதந்து வந்ததாம். அதை கிறித்தவர்கள் பிடிப்பதற்காக சென்றபோது அது ஓடிவிட்டதாம். பின்னர் இந்துக்கள் பிடிப்பதற்காக ஓடினார்களாம். படகு பிடிதரவில்லை. இறுதியாக முஸ்லிம்கள் பிடிப்பதற்குச் சென்ற போது அது அருகே வந்ததாம். பின்னர் அந்த படகைத் திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு கடிதம் இருப்பது தெரியவந்தது. அதை படித்த போது ‘ நான் இன்னார்! என்னை குளச்சலில் இந்த கடற்கரை அருகில் அடக்கம் செய்யவேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது.

இதை 1974 ல் குளச்சல் வந்த பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்களிடம் ஊர் தலைவர் சொன்ன தகவலை எழுதிக்கொடுத்தேன். பின்னர் சென்னை வந்தபோது கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம்,அதிராம்பட்டணம் போன்ற நான்கு ஊர்களிலிருந்தும் இதைப்போன்ற செய்திகள் வந்திருந்தன. அப்போது தான் புரிந்தது இதில் எந்த உண்மையும் இல்லை.யாரோ கடற்கரை பகுதிகளில் பயானில் கப்ஸா விட்டிருக்கிறார்கள். நம்பவே முடியவில்லை.

‘மையித் படகு’ மக்களைத்தேடி ஓடி வருமா ? அதை நம்பவேண்டுமாம்! அவரது பெயர், முகவரி. எந்த ஊர்? எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார்? ஊருக்கு என்ன செய்தார்? என்ற எந்த விதமான நம்பகரமான தகவலுமில்லை. ஊர் மக்கள் முதலில் ‘வப்பூசன்’ எனப் பெயர் சொன்னார்கள்.பின்னர் ‘வாப்பு ஹுஸைன்’ என்று சொல்லத்தொடங்கினார்கள். அவ்லியாவுக்கு கூட்டம் சேரச் சேர இப்போது செய்கு பாபுல் ஹுஸைன் அவ்லியா (ரலி)’ என கிரேடு உயர்த்தி பெயர் பலகையும் தொங்க விட்டிருக்கிறார்கள். மக்கள் சாரை சாரையாக இப்போது படையெடுத்து வரத் தொடங்கிவிட்டார்கள்.

இவ்வளவு காலமாக இல்லாதிருந்த இந்த ஊரில் இப்போது மவ்லிது,கந்தூரி, நேர்ச்சை, விழா என திடீரென்று எப்படி முளைத்தது? இப்போது ஆண்டுதோறும் இங்கு பெரிய விழாவே நடத்தப்படுகிறது.மக்கள் மூட்டை மூட்டையாக அரிசி,மசாலா,பழவகைகளைக் கொண்டு கொட்டுகிறார்கள். ஆடு, கோழிகள் என இன்னொரு பக்கம் குவிகிறது. சில்லரையாக சிறிது விளம்பிவிட்டு மொத்தமாக வேறு பக்கம் பதுக்கப்படுகிறது.

இந்தப் போலித்தனங்கள் ஊர் மக்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் தெரிந்தும் அவ்லியாவின் மீது கொண்ட பக்தி இவர்களின் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.

சுனாமி வந்தபோது இன்னொரு புரளியையும் கிளப்பிவிட்டார்கள் இந்த கப்ரு ஆராதனைக்காரர்கள். சுனாமி வந்த போது கப்றைச் சுற்றிலும் வெள்ளம் புரண்டு வந்து அனைத்தையும் அழித்துவிட்டதாம். ஆனால் கப்றின் மீது விரிக்கப்பட்டிருந்த பட்டுத்துணி மட்டும் நனையவில்லையாம். எல்லாம் அழிந்த பின்னர் கப்ரின் மீது ஒரு புதிய பட்டுத்துணியை விரித்துவிட்டு அவ்லியாவின் பட்டுத்துணி மட்டும் நனையவில்லை. அது அப்படியே தான் இருந்தது என கிளப்பிவிட்டார்கள் புதிய புரளியை! பாருங்கள் அவ்லியாவின் கராமத்தை!

மறுபிறவி எடுத்த கமுதி அவ்லியா!
இப்போது ஆங்காங்கே சில கம்பங்களைக்கட்டி நாகூர் தர்ஹா கொடி, அஜ்மீர் நாதா கொடி! கவ்துல் அஃலம் கொடி என எழுதி சற்று உயரமான கொடிகளில் கம்பங்களை நாட்டி சென்னை மண்ணடி , புதுப்பேட்டை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் காணிக்கை உண்டியல்களைக் காணலாம். அது போல சில ஊர்களில் நாகூர் தர்ஹா போன்ற ஒரு கப்ரைக்கட்டி இங்கும் நாகூர் அவ்லியா அடக்கமாயிருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.

இவ்வாறு போலியாக எழுப்பப்பட்ட ஒரு கட்டடம் கமுதியில் காணப்படுகிறது. நாகூர் நாயகம் எங்கள் ஊரிலும் வந்து மீண்டும் அடக்கமாகி இருக்கிறார்கள் என்று அந்த ஊர் மக்களே சொல்லும் போது தலையை முட்டிக்கொள்ளலாம் போலிறிருக்கிறது. இது போல் பொட்டல் புதூரிலும் முஹ்த்தீன அப்துல் காதிர் (ரஹ்) பெயரில் ஒரு கப்றை கட்டிவைத்திருக்கிறார்கள்.அவர்கள் இந்தியாவுக்கு வந்ததாகவே எந்த ஆதாரமுமில்லை. போலி சமாதிகள் எப்படி உருவாகிறது? மக்களின் கற்பனை வளத்தைப் பாருங்கள்.

இன்றும் நடமாடும் அவ்லியா
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காயல் ஜலீல் மைதீன் என்னும் நடமாடும் அவ்லியா தம் சீடப்பெண்ணுக்கு ஆண்மகவு தான் பிறக்கும் என்று தமது ஞானக் கண்களால் அறிந்து ஆரூடம் கூறியிருக்கிறார். அதை நம்பியிருந்த அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை ஏமாற்றத்தோடு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார். உடனே அந்த அவ்லியா அது பெண் குழந்தை இல்லை.ஆண்குழந்தை தான்! நான் வந்து நிரூபித்துக்காட்டுவதாகக் கூறி அந்த ஊருக்குப் பயணம் போயிருக்கிறார் நடமாடும் அந்த அவ்லியா. அங்கு சென்ற அவ்லியா சில மந்திரங்களை ஓதிவிட்டு ‘இப்போது பாருங்கள்! இது பெண்குழந்தையல்ல. ஆண்குழந்தை தான். உங்கள் கண்களுக்கு பெண் குழந்தையாகத் தெரிந்திருக்கிறது என்று கூறியதும் அந்தக் குடும்பமே வியந்து போனதாம். அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லையாம்’ என்று அந்த அவ்லியாவே ஒரு மேடையில் பேசியிருக்கிறார். இதை நம்புவதற்கும் ஒரு கூட்டமிருக்கிறது. பாருங்கள் இந்த அறியாமையை.
தொடரும்...

3 comments:

Anonymous said...

asslamu alikum, editor avarhalukku, ungal web side comments pahutiyil naan etkanave anuppiya(27/3/2010) kazalarhalukku adaikalamaha mari varum kahatowita thowheed palli trustee marhal patri neengal pirasurikkavillai eaan?

neengal kahatowita thowheed jamathukku sharfaha iyangum oru amaipa?

thelivu padutividungal

Brother said...

brother mujahid avarhale, nan enna solla varuhiren endral, thowheed vatihal endral ella makkalukkum munmazirihalahavum, quran , hadees enpawatrodu aziham thodarpudaiyawarhalahavum irukka vendu, but

engal uril thowheed endru sollikondu iruppawarhal 100% quran, hadees pinpatrupawarhala?

vangina kadanai koduppatu ettanai per?

thahajjath tholupawarhala?

subahukku imam jamathukku palliwasal waruhirarhala?

seetanam edukkamal kalyanam pidippatu unda?

karandai kalukku mel adai anivadu ettanai per?

smoking pannuwatu ettanai per?

alcohol pavippazu ettani per?

aduttawan veetu kaniai sappidupavan ettanai per?

kazal pannum thowheed ilaigarhal ettanai per?

cenima CD parkum naparkal ettanai per?

nan mela kurippittatu eto kongam. nan itai kurippda karanam ennawandral, thowheed wazihal anaitu vidayatilum munmaziriyaha irukka vendum, but

ematu uril ulla thowheed watihalin panpu(thowheed wazihal endral yaar)

1. attaihattil viral attupawarhala?

2. talail thoppi indri tholupawarhala?

3. nengil thakbeer kattupawarhala?

4. thamazu angathawarhalin tawarai moodi maraipatum, pira amaipukkalin thawari road neduha solli thiriparhala?

*- ithu pondru niraiya vidayam undu brother mujahid awarhale, neengal ivaihal patri(pozuwana vidayam) bayan pannamal, daily thareeka kararhalukku esikkondu mattu me irundal enna nadakkum.

*- brother PJ kooda ungalin gold aniwatu patriyana hadees karuttai awaratu onlinepj.com moolam ezirtullar itu patri neengal solwadu enna?

***-**- namazu uril ulla thowheed wazihal mulukka mulukka mujahid, pj solwazai udane nambividuhinrarhal, atu quran hadeesil ullaza endru parpazillai, en silarukku quran ozakkuda theriyatu. enedral kahatowita thowheed wazihal pachil mattum thowheed, quran, hadees enpawatri poruludan ozupawarhal mihavum kuraivu


******-: naan etum pilaiyana wasanam pavittu irundal ALLAHvukkaha mannitu vidungal.

CNC Job Offers said...

சகோதரர் அனோனிமஸ்..... எமது இணையத்தளம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பானது என நீங்கள் கூறியுள்ளீர்கள். நாம் யாருக்கும் பக்கச்சார்பானவர்கள் அல்ல என்பதை வினயமாகக் கூறிக்கொள்கிறோம். மேலும் உண்மைகளைத் திரித்து பொய்களை சமூகத்தில் பரப்பவும் மாட்டோம். மேலும் இச்சகோதரர் ஒரு தனிப்பட்ட நபரின் காதல் விவகாரத்தை முழு தவ்ஹீத் சகோதரர்களுடனும் சம்பந்தப்படுத்தி ஒட்டுமொத்த தவ்ஹீத் வாதிகளும் மோசமானவர்கள் போல் சித்தரிக்க முற்பட்டுள்ளார். தனிப்பட்ட நபர்களின் விவகாரங்களை எமது இணையத்தளம் பிரசுரிப்பதில்லை என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ளவும். மேலும் ஒரு நபரை எந்தவித ஆதாரங்களுமின்றி குற்றம் சுமத்த மார்க்கத்தில் அனுமதியும் இல்லை. மேலும் ஒருவரின் குறையை மறைக்குமாறு இஸ்லாம் எமக்கு அழகான ஒரு பாடத்தை கற்றுத் தருவது மட்டுமின்றி இவ்வுலகில் ஒருவரின் குறையை நாம் மறைத்தால் அல்லாஹ் மறுமையில் எமது பத்துக் குறைகளை மறைப்பான் எனபது ஹதீஸ்களின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனிப்பட்ட நபர்களின் குறைகளை அலசி ஆராய்ந்து அதை அம்பலப்படுத்த மாட்டோம் என்பதை குறித்த சகோதரருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

Post a Comment