தொழச்சென்ற இளைஞன் பள்ளியிலிருந்து விரட்டப்பட்டார்.
நேற்றைய முன்தினம் மாலை அஸர்; தொழுகைக்காக கஹடோவிட நூர் பள்ளிக்கு வழமைபோன்று இளைஞர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது பள்ளியிலிருந்த ஒரு நபர் குறித்த இளைஞரை தொப்பியணிந்து தொழுமாறு பலவந்தப்படுத்தியிருக்கிறார். அத்தோடு மிக முறைகேடாகவும் நடந்துள்ளார். ஆத்திரமடைந்த அவ்விளைஞரும் தன்னால் முடிந்தளவு போராடியிருக்கிறார் இருந்தாலும் அந்த நபர் விட்டபாடில்லை. ஈற்றில் குறித்த அவ்விளைஞர் தொழமுடியாமல் பள்ளியிலிருந்து திருப்பியிருக்கிறார். செல்வந்தர்கள், சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் அப்பள்ளியில் தொப்பி அணியாமல் தொழும்போது பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நபர் திடீர்ரென்று ஏன் அவ்விளைஞனுடன் மாத்திரம் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. தடுக்கவேண்டும் பள்ளிவாசல்கள் பொது இடங்களாகும் அவை அல்லஹ்வுக்குரியவையாகும். அவற்றில் யாருக்கும் உரிமைகொண்டாட முடியாது. எத்தனையோ இளைஞர்கள் தொழுகையே இல்லாமல் வீதியளந்து திரியும் போது இந்த இளைஞர் பள்ளிக்கு தொழ வந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய செயற்பாடுகள் இளைஞர்கள் மனதி;ல் பலபாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அவை காலப்போக்கில் அவர்களை விரக்தி நிலைக்குக் கூட கொண்டு செல்லலாம். ஆகவே பள்ளிவாசல் நிருவாகங்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருசில நபர்களின் அறிவீனமான செயல்கள் பள்ளிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. ஆகவே மக்களுடன் அன்பாக பன்பாக நடந்துகொள்ளும் பக்குவம் வளர்ந்தோரிடம் கட்டாயம் இருக்கவேண்டும்.
இந்த தகவலை உங்களது தளத்தில் பிரசுரிப்பீர்கள் என்று எதிர்பார்கின்றோம்.
ஊர்வாசி
5 comments:
கவலையான விடயம். மேலும் அப்பள்ளி வாசலில் நகைப்புக்குறிய ஒரு அறிவித்தலும் போடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதுதான் ” தலையைத் திறந்துகொண்டு தொழுவது வெறுக்கத்தக்கது ஆகையால் இப்பள்ளிவாசலில் தலை திறந்து தொழுவது தடைசெய்யப்பட்டுள்ளது” இந்த அறிவித்தலைப் போட்டவா்கள் சிந்திக்க வேண்டிய விடயம், தலை திறந்து கொண்டு தொழுவது வெறுக்கத்தக்கது எனின் இந்த வெறுப்பான செயலை அல்லாஹ் ஹஜ்ஜில் கட்டாயமாக்கியிருக் மாட்டான். தலையை மூடிக்கொண்டு ஹஜ் செய்தால் ஹஜ் பாதிலாகிவிடும். தலையை திறப்பது வெறுக்கத்தக்கது எனின், வெறுப்பான ஒரு விடயத்தை அல்லாஹ் கட்டாயமாக்க மாட்டான். எனவே இப்பள்ளி வாலி நிர்வாகிகள் பகுத்தறிவுள்ளவா்களாக மாறல் வேண்டும். மடைமைத்தனத்தைக் கைவிட்டுவிடல் அவசியம்
” தலையைத் திறந்துகொண்டு தொழுவது வெறுக்கத்தக்கது ஆகையால் இப்பள்ளிவாசலில் தலை திறந்து தொழுவது தடைசெய்யப்பட்டுள்ளது”
நஊதுபில்லாஹ், அந்த நிருவாகத்தைவிட இந்தவாசகத்தை தெரிவித்தவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆகவேண்டும்.
தந்தையின் அட்டகாசமும் மடத்தனமும் தனயனிடமும் வந்திருக்கின்றதோ. அப்பாவிகளிடம் தான் இவர்கள் கைவரிசை காட்டுவார்கள். பள்ளிவாசல்என்ன இவனுகளின் அப்பன் வீட்டுச் சொத்தா? இஸ்லாத்தைப் பற்றியோ உலகத்தைப் பற்றியொ எந்த வித அறிவும் இல்லாத இந்த கிணற்றுத் தவளைகளுக்கு அல்லாஹ் தான் நேர்வழி காட்ட வேண்டும்.
பள்ளியை தமது கட்டுப்பாட்டக்குள் கொண்டு வர கனவ கண்ட கொண்டிருக்கும் சீர்திருத்த?வாதிகளும் இதற்கு ஒத்து ஊதுகிறார்களாமே. கனவு கானல் நீராகுமோ என்ற பயம் போல
சீர்திருத்தவாதிகளும் இதற்கு ஒத்தூதுகிறார்களா? யார் இந்த சீர்திருத்த வாதிகள். இவர்கள் சமூகத்தில் சீர்திருத்தம் செய்கிறவர்களா அல்லது இஸ்லாத்தை சீர்குலைக்கின்றார்களா?
PLEASE VISIT THIS LINK .... the video shows as MATALAI VIVAATHAM....
இந்த லின்கில் உள்ள விடயத்திற்கும் மேலுள்ள கட்டுரைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதனால் அந்த லின்க் பப்ளிஷ் பண்ணப்படவில்லை.
Post a Comment