கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'ஐ.தே.க.வில் போட்டியிட்டால் கொலை செய்யப்படுவாய்..":முஜிபுருக்கு கொலை அச்சுறுத்தல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று வெள்ளிக்கிழமை  இரவு 8.30 மணியளவிலேயே தொலைபேசியூடாக சிங்கள மொழியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் செயற்பட கூடாது என்றும் அவ்வாறு செயற்பட்டால் படுகொலை செய்யப்படுவதாகவும் மறுமுனையிலிருந்து சிங்கள மொழியில் பேசிய இனந்தெரியாத நபர் அச்சுறுத்தலும் மிரட்டலும் விடுக்கப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை கடுமையான கெட்டவார்த்தைகளிலும் திட்டிதீர்த்த மேற்படி நபர் உடனடியாக அழைப்பை துண்டித்ததாகவும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
 
மேல் மாகாண சபை தேர்தலுக்கான பிரசார பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களுடன் மாளிகாவத்தை அலுவலகத்தில் கலந்தாலோசனையொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அநாமதேய தொலைபேசிகளிலிருந்து எனது கையடக்க தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது.
 
அழைப்பையேற்று பேசிய போது மறுமுனையில் இருந்து பேசியவர் சிங்கள மொழியில் பேசினார். மந்திரியாக பேசுகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு ஆம் என்றேன். அப்படியானால் நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலா போட்டியிடுகின்றீர்கள் என்றும் கேட்கப்பட்டது. அதற்கும் ஆம் என பதிலளித்தேன். பின்னர் வேட்பாளர் இலக்கம் கிடைக்கப்பெற்று விட்டதா? உங்களுடைய இலக்கம் என அந்த நபரிடமிருந்து கேள்வி வந்தது. இதற்கு பதிலளித்த நான் இலக்கம் கிடைக்கப்பெறவில்லை எனவும் திங்கட் கிழமை பின்னரே அதுபற்றி தெரியவரும் என்றும் கூறினேன். இதனை கேட்டுக்கொண்ட அவர் உடனடியாகவே சிங்கள மொழியில் கெட்ட வார்த்தைகளை கூறி திட்டியதுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் நீ போட்டியிடக் கூடாது என்றும் அத்துடன் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும் அவ்வாறு ஈடுபட்டால் நீ படுகொலை செய்யப்படுவாய் என்றும் அவர் கூறி தொடர்பையும் துண்டித்துக்கொண்டார்.
 
இதுதொடர்பில் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனது முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் வரும் திங்கட்கிழமை இவ்விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.
 
virakesari

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்.

 

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை த...மிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து, தேவையற்ற கொழுப்பை குறைத்தது, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்று நோய் வராமல் தடுக்கிறது.

9. புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

நன்றி - Tamilcnn

GIMP போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்

 
ஜிம்ப் (GIMP (GNU Image Manipulation Program)) என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும். 

இலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை. 
பல பணி நிலைகளில் பயன்படுத்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு இணையாகவும், சில வேளைகளில், அதனைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாகவும் இது இயங்குகிறது. 
 
இதனை விண்டோஸ் தரும் பெயிண்ட் புரோகிராம் போலப் பயன்படுத்தலாம். அல்லது போட்டோ எடிட்டிங் பிரிவில் இயங்கும் வல்லுநர்களால், போட்டோ எடிட் செய்திடப் பயன்படுத்தலாம்.

இமேஜ்களின் பார்மட்டை மாற்றி அமைத்திடப் பயன்படுத்தலாம். சாதாரண இமேஜ் மற்றும் போட்டோ காட்டும் பணிகளிலிருந்து, படங்களைப் பல வழிகளில் மாற்றுவதற்கான வழிகளைத் தரும் நிலை வரை பல டூல்களை இந்த புரோகிராம் கொண்டுள்ளது. அதிகப் பணம் செலவு செய்து நாம் வாங்கும் இமேஜ் புரோகிராம்கள் கூட இந்த அளவிற்கு வசதிகளைத் தருவதில்லை. 
 
 இந்த GIMP புரோகிராமினை ஓர் திட்டமாக, திறவூற்று மென்பொருள் என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் திட்டமாக சில மென் பொருள் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து, அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து செயலாற்றலாம். 1990 ஆம் ஆண்டில், தொடக்க நிலையில் இது ஒரு சாதாரண இமேஜ் எடிட்டிங் புரோகிராமாக வெளியானது. 

இப்போது, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும், வேறு எந்த இமேஜ் எடிட்டிங் புரோகிராமில் கிடைக்காத வசதிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. தற்போது GIMP 2.8 பதிப்பு கிடைக்கிறது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 

ஒரு விண்டோ மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் இயங்கு வகையில் (single and multiple window mode) உள்ளது. மாறா நிலையில் பல விண்டோக்களில் இயங்குவதாக உள்ளது. 
 
நாம் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். இதில் Help; Context Help; User Manual என ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் உதவிக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

  http://therinjikko.blogspot.com/

சகோதரர் A.R.M. ஹலீம் அவர்கள் கல்கமுவயில் காலமானார்.



கஹடோவிடாவைச் சேர்ந்த  சகோதரர் A.R.M. ஹலீம் அவர்கள் கல்கமுவயில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்.

அன்னார் காலம் சென்ற அப்துர் ரஹ்மான், மஹ்புபா தம்பதிகளின் மகனும், கல்கமுவவைச் சேர்ந்த சித்தி ஸுலைஹா அவர்களின் அன்புக் கணவரும். மர்ஹும் உம்மு ஜஸீமா, ஷாஹுல் ஹமீத்,  மற்றும் நஜுமுன்நிஸா, ராஸீக் ஆசிரியர் ஆகியோரின் சகோதரனும். அல் அக்பர் பாடசாலை அதிபர் சகோதரி அவர்களின் சாச்சாவும், அல் ஹாஜ் இக்பால், ஆசிரியர் இக்பால் நாஸர் ஆகியோரின் மாமாவும், ஆசிரியா் ஹிசாம் ராஸிக், ரப்ஸன் ஜானி, சியாம் ஹமீட், அஷ்ஷபா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அனனாரின் ஜனாஸா இன்று ( 06.02.2014) பிற்பகல் 3.00 மணியளவில் கல்கமுவ ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

முன்னாள் புத்த மதகுருவும், இந்நாள் இஸ்லாமிய அழைப்பாளருமான முஹிப்புல்லாஹ்



(Nidur) தங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது..!

 பணத்துக்காக, பெண்ணுக்காக, புகழுக்காக இஸ்லாத்தை துறக்கும் முஸ்லிம்களுக்கு, இவை எல்லாம் இருந்து இஸ்லாத்துக்காக இவற்றைத் துறந்த முஹிப்புல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது.]
 
அல் முஃமின் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த தஃவா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் புத்த மதகுருவும் இந்நாள் அழைப்பாளருமான முஹிப்புல்லாஹ் அவர்கள் பேசிய போது
 
புத்த மதகுருவாக இருந்த காலத்தில் என்னிடம் ஆசி வாங்க லட்சக்கணக்கில் கொடுத்து காத்திருப்பார்கள்! இதில் மத்திய மந்திரிகள் எல்லாம் அடக்கம்! அவர்களுக்கு எனது காலால் அவர்களது தலையில் மிதித்து ஆசி வழங்குவேன்! அதிலும் புத்த பாரம்பரிய தஙக செருப்பு எனக்கு இருந்தது! அதை அணிந்து செருப்புக் காலால் மிதித்தால் கூடுதல் லட்சங்கள்!
 
ஆனால் இன்றைக்கு கூட்டத்துக்கு வர என்னிடம் சரியான செருப்பு இல்லாமல் அறுந்து போனதால் கீழ் வீட்டில் உள்ளவரின் இரவல் செருப்பில் நின்று பேசிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் இரவல் செருப்பின் மூலம் இஸ்லாம் எனும் தூய பாதையில் நடந்து வந்து இருக்கிறேன்.
 
தங்கத் தாம்பாளத்தில் தான் சாப்பிடுவேன்! ஆனால் இஸ்லாத்தை ஏற்றவுடன் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார்கள் அங்கேயும் ஒரு தாம்பாளம் வைத்தார்கள். அதில் போய் உட்கார்ந்தேன்! என்னோடு அந்த ஊரில் உள்ள ஏழை பணக்காரர் எனும் பாகுபாடின்றி அனைவரும் கை போட்டு கலக்கிய போது குமட்டியது!
 
ஆனால் நாளடைவில் எல்லா நிலையிலும் இஸ்லாம் சமத்துவத்தை பேணும் செயலை எண்ணிய போது தங்கத் தாம்பாளத்தை விட எனக்கு இது உயர்ந்ததாக தெரிந்தது.
 
தீராத வயிற்று வலிக்கு மருந்தாக எனது சிறுநீரை பக்தன் ஒருவனுக்கு வழங்கிய போது நோய் தீர்ந்ததாக ஒரு கோடியை என் காலடியில் வைத்தான்.
 
குழந்தை இல்லாத பெண்ணை பூஜைக்கு வரச்சொல்லி கணவனின் அனுமதியுடன் எனது உறவின் மூலம் குழந்தை கொடுத்த போது 22 ஏக்கரை என் பெயரில் எழுதி வைத்தாள்!

ஆனால் 5 வயதில் மடத்துக்கு சென்ற நான் 50 வயது வரை சூரியனை பார்ததில்லை எனும் அளவுக்கு ஏசி யில் வாழ்ந்தேன் ! கால் படாத நாடு இல்லை எனுமளவுக்கு உலகை 3 முறை வலம் வந்து விட்டேன்! விமானத்தில் பறந்து கொண்டெ இருந்த எனக்கு இஸ்லாம் ஆகாயத்தில் தான் ஒருவரால் அறிமுகம் செய்யப்பட்டது!
 
ஆனால் இன்றைக்கு கூட்டம் வருவதற்கு தாமாதமாகி விட்டது ! காரணம் எனது மொபெட் வரும் வழியில் நின்று விட்டது! பெட்ரோல் போட பங்குக்கு உருட்டி சென்றேன்! 50 ரூபாய் மட்டும் தான் இருந்தது! 30 ருபாய்க்கு போட முடியுமா என்றேன் முடியாது என்றார்கள்! அதனால் என்னை தொடர்பு கொண்ட செங்கிஸ் கானிடம் நான் கடைசியில் பேசுகிறேன் என சொன்னேன்.
 
இன்று எனது பையில் சிறிதும் பணமில்லை ! ஆனால் இதயம் நிறைய இஸ்லாம் இருக்கிறது! அது எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இருக்கிறது! தஙகத் தட்டும், பஞ்சணை மெத்தையும், பணமும், மதுவும், மங்கையும் தர முடியாத இன்பத்தை இஸ்லாம் எனக்களித்தது! அசுத்தமான பணத்தை எல்லாம் அங்கேயே விட்டு விட்டு, நிம்மதியுடன் இஸ்லாத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனப் பேசினார். தனது உரையால் அப்பகுதியில் இருந்த மக்களைக் கட்டிப் போட்டார்!

அல்ஹம்துலில்லாஹ்!

முஸ்லிம் விசமப்பிரசாரங்களால் மீண்டும் களத்துக்கு வந்தேன்: உயிர்வாழும் ஒரே முன்னாள் ஜனாதிபதி



இலங்கையில் முஸ்லிம்களது சனத்தொகை அதிகரிக்கிறது, இலங்கை முஸ்லிம் நாடாக போகிறது  போன்ற கட்டுக் கதைகள் உண்மையிலாத போதும் அதனை எதிரித்து கருத்து தெரிவிப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் நாட்டின் முதன்மை பிரஜை என்ற இது தொடர்பாக உண்மையினை தெரிவிப்பதற்கு தான் முன்வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார் .

உயிர்வாழும் ஒரே முன்னாள் ஜனாதிபதியும் , பிரதமரும் என்ற வகையில் நாட்டில் மதங்களுகிடையில் நிலவும் பதற்றத்தை போக்குவதற்கு தான் முன்வந்தாக அவர் தெரிவித்துள்ளார் .
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நடைபெற்ற. தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்த சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்க நிகழ்வின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார் .
 
எம்.அம்ஹர்:

ஜே.வி.பியின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க, செயலாளராக ரில்வின் சில்வா



ஜே.வி.பியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று 02-02-2014 நடைபெற்ற ஜே.வி.பியின் 7வது தேசிய மாநாட்டில் அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ரோஹன விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்கவுக்கு பின்னர் அந்த கட்சியின் மூன்றாவது தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார்.

அதேவேளை ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக ரில்வின் சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

கட்சியின் தலைமைத்துவ பதவிக்காக அநுரகுமார திஸாநாயக்க விஜித ஹேரத் கே.டி. லால்காந்த மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அடிக்கடி சிஸ்டம் கிராஷ் ஆகிறதா...? இதோ தீர்வு



இன்று என்னதான் விண்டோஸ் 8 வந்தாலும் இன்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள் அதையே பயன்படுத்திக் கொண்டு தான் உள்ளனர்.

இதில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்

விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும்.

இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும். Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும்.

இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்;

சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும்.

இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.

நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.

பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும். பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும்.

எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.

இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும். இதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும்.

எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.

மேலும், விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும்.

இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும்.

இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நேரம் எடுக்காது. சிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும்.

பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். எனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே.