கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடக் கிராமத்தின் சீர்திருத்தக் குழுவின் அங்குரார்ப்பண வைபவம்.

கஹட்டோவிடக் கிராமத்தில் பகிரங்கமாக நடைபெற்றுவரும் ஒழுக்க சீர்கேடுகளைத் தடுத்தல் சம்பந்தமான பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் ஊர் நலன்விரும்பிகளால் மேற்கொள்ளப்பட்டு ஒழுக்க சீர்கேடுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட குழுவாக செயற்படுவதன் மூலமே சாத்;தியமாகும் என்ற  அடிப்படையில் ஒரு சீர்திருத்தக் குழுவை உருவாக்கல் சம்பந்தமான பல தகவல்களை சென்ற காலங்களில் எமது வாசகர்களுக்கு நாம் அறியத்தந்தோம்.
அல்ஹம்துலில்லாஹ், அவ்வாறான ஒரு குழு கஹட்டோவிட ஓகடபொள பள்ளிவாசல்களின் நிர்வாக உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு அதன் அங்குரார்ப்பண வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08.08.2010 அன்று காலை 9.00மணிக்கு கஹட்டோவிட அல்பத்ரியா மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிகழ்வில் நிட்டம்புவ, வீரங்குல பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கமபஹா மாவட்ட நீதிபதி மக்கி அவர்களும் கம்பஹா மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் மொஹமட் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சமூக சீர்கேடுகளைத் தடுப்பதற்கான செயற்திட்டங்களையும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து செயற்படுத்துவது சம்பந்தமான விடயங்களை இந்நிகழ்வில் பேசப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ இக்குழுவின் செயற்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! சிறந்த மாற்றத்தை எமது சமூகத்தில் ஏற்படுத்துவானாக!;

1 comments:

அஸ்ஹா் said...

மாசா அல்லாஹ். சிறந்த முயற்சி. சிறந்த மாற்றங்களை கூட்டாக செயற்படுவதனாலேயே கொண்டு வரலாம். நபியின் சீறாவைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை விளங்கலாம். அல்லாஹ் இக்குழுவைக் கொண்டு எமது ஊரில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவானாக.

Post a Comment