கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பள்ளிவாசல்கள் சம்மேளனம் கஹடோவிட ஒகடபொள. (துண்டுப் பிரசுரம்)

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது பிரதேசத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற ஒழுக்கவீனங்கள்களாலும் கல்வியின் பின்னடைவாலும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பள்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தி கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே நல்லதோர் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது திண்ணம்.இந்த அடிப்படையில் கஹடோவிட முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் மஸ்ஜிதுன்னூர் ஜும்ஆ மஸ்ஜித் ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் ஓகடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை உருவாக்கியுள்ளோம் என்பதை ஊர் மக்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இன்ஷா அல்லாஹ் எமது பிரதேசத்தின் முன்னேற்றம் கருதி பல்வேறு செயற்திட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ளோம்.

இதன் ஆரம்பகட்டமாக பள்ளிவாசல் சம்மேளன அறிமுகவிழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இடம்     :  அல் பத்ரியா ம.வி

காலம் :  08 08 2010

நேரம்:காலை 9.00 மணி கல்;விமான்கள் பொலிஸ் அதிகாரிகள் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்ற இவ்விழாவில் ஜமாஅத்தர்களாகிய ஆண்கள் பெண்கள் அனைவரும’

கலந்து பயன்பெற்று நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதி;ல் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

ஜஸாகுமுல்லாஹ்_ கைரா.

3 comments:

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ்!
எமது ஊர், எமது பாடாசலை, எமது பள்ளிவாசல்... என்று மட்டும் பாராது அயல் கிராமத்துடனும் சேர்ந்து இத்தகைய ஒரு நல்ல முயற்சிக்கு அடித்தளமிடப்பட்டிருப்பது உண்மையில் காலத்தின் தேவை மட்டுமன்றி மார்க்கக் கடமையுமாகும் என்றே கருதுகின்றேன்.
இவ்வாறான ஒரு சமூக நிறுவனத்தின் தேவையை வலியுறுத்தி இத்தளத்தினுடாக தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட இதன் வாசகர்களுக்கும் இந்த தளத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
நாளை நடைபெறவுள்ள அறிமுக வைபவம் சிறப்பாக நடந்தேறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ்

visit www.islahme.com

Post a Comment