டெங்கு ஒழிப்பில் அசிரத்தையாக நடந்த சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிப் போட்டார் மேர்வின்!
பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த வாரம் முன்னெடுக்கத் தவறிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை இன்று மாமரம் ஒன்றில் கட்டிப் போட்டார்.
அவர் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து ஊடகவியலாளர்களின் முன்னிலையிலேயே இந்த தண்டனையைப் பகிரங்கமாக வழங்கினார்.
களனிப் பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட இடங்களில் பொறுப்பான அதிகாரிகள் எவராவது டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஒழுங்கான முறையில் முன்னெடுக்கத் தவறினால் அவர்களை மரத்தில் கட்டிப் போடுவார் என்று பிரதி அமைச்சர் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.
பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இரு பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த இரு பெண்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டு விடும் என்று பிரதி அமைச்சர் எச்சரித்தார்.
கொஞ்ச நேரம் கழித்து அந்தச் சமுர்த்தி உத்தியோகத்தரை பிரதி அமைச்சர் அவிழ்த்து விட்டார். மகளுக்கு சுகவீனம் ஏற்பட்டிருந்தமையாலேயே கடந்த வாரம் இடம்பெற்றிருந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்குபற்ற முடியாமல் போய் விட்டது என்று அந்த சமுர்த்தி உத்தியோகத்தர் கூறினார்.
1 comments:
இவா் ஒரு முஸ்லிம் அதிகாரி என்பது கவைல தரும் ஒரு விடயம்.
Post a Comment