கேள்வியே கேட்கக் கூடாதென்று கூறி வாயைக் கட்டிப்போட்டு விட்டு மார்க்கத்தின் பெயரால் கண்டதையெல்லாம் பிரசாரம் செய்யும் மதப் போதகர்கள்- மௌலவி முஜாஹித் உரை
கப்றில் முன்கர் நகீர் ஒருவரிடம் உனது ரப்பு யார் என்று கேட்டதும் அவர் அச்சமிகுதியால் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பெயரைக் கூறினாராம். குழம்பிப்போன இந்த மலக்குகள் அல்லாஹ்விடம் இதை முறையிட, அல்லாஹ்வோ முஹம்மத் எனது ஹபீப், முஹையத்தீன் அப்துல் காதர் எனது மஹ்பு{ப். ஆகவே அவர் எனது மஹ்பூபின் பெயரைக் கூறியுள்ளார், எனவே அவரை சுவர்க்கத்திற்கு அனுப்புங்கள் என்று கட்டளையிட்டானாம். ஆகவே கப்றில் உனது ரப்பு யார் என்று கேள்வி கேட்டால் முஹிதீன் அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்லலாம் என்று ஒரு மதபோதகர் பள்ளத் தக்கியாவில் உரையாற்றியுள்ளதாக நேற்று தஃவாப் பள்ளிவாசலில் நடைபெற்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் மௌலவி முஜாஹித் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் இத்தகைய கருத்தானது தெளிவான இறைநிராகரிப்பாகும் என்பதைத் தெளிவு படுத்தி இத்தகைய கூற்று படுபயங்கரமான பிழை என்பதை உணர்த்தி பகிரங்கமாகவோ அல்லது தக்கியாவிற்குள்ளோ இக்கருத்தை வாபஸ் பெறவைக்க வேண்டும் என்றும் கூறினார். இவ்வாறு அந்த மார்க்கப் போதகர் சொல்லியிருப்பது மிகப் பெறும் தவறு என்பதை உணர்ந்த சில தரீக்காச் சகோதரர்கள் இதனால் குழம்பிப் போயிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆகவே இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற இவ்வாறான விசக் கருத்துக்களை நாக்கூசாமல் எப்படியப்பா சொலகிறார்கள் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியமாகவிருக்கின்றது.
தொடர்ந்து பேசிய அவர் இத்தகைய கருத்தானது தெளிவான இறைநிராகரிப்பாகும் என்பதைத் தெளிவு படுத்தி இத்தகைய கூற்று படுபயங்கரமான பிழை என்பதை உணர்த்தி பகிரங்கமாகவோ அல்லது தக்கியாவிற்குள்ளோ இக்கருத்தை வாபஸ் பெறவைக்க வேண்டும் என்றும் கூறினார். இவ்வாறு அந்த மார்க்கப் போதகர் சொல்லியிருப்பது மிகப் பெறும் தவறு என்பதை உணர்ந்த சில தரீக்காச் சகோதரர்கள் இதனால் குழம்பிப் போயிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆகவே இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற இவ்வாறான விசக் கருத்துக்களை நாக்கூசாமல் எப்படியப்பா சொலகிறார்கள் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியமாகவிருக்கின்றது.
34 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு அதிர்ச்சியடைந்தேன். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் வார்த்தைகளை அந்த மதப் பிரசாரகர் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. ஊரிலுள்ள மற்றப் பள்ளிவாசல்களின் இது சம்பந்தமான நிலைப்பாடு என்னவோ தெரியாது. பெரிய பள்ளி ஆரம்பத்தில் தஃவாக் காரர்கள் விரலாட்டினார்கள் நெஞ்சில் தக்பீர்கட்டினர்கள் என்று சொல்லி அவா்களை வெளியேற்றி விட்டார்கள். இவை ஒன்றும் மார்க்கத்தின் அடிப்படைகளைத் தகர்க்கவில்லை. இப்போது இஸ்லாத்திலிருந்தே வெளியேறும் கருத்துக்களைக் கூறும் இவர்களை இப்பள்ளி வாசல் தனது அங்கத்துவா்களாக வைத்துக்கொள்வாரா அல்லது இது விடயத்தில் விசாரனை செய்து நீதியாக நடப்பார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்...
அஸ்ஸலாமு அலைக்கும்
நஊதுபில்லாஹ் அல்லாஹ்தான் இவர்களைக் காப்பாற்றவேண்டும். இஸ்லாத்துக்கு வரைவிளக்கனம் தெரியாத இவர்கள் எப்படி முஸ்லிம் சமூகத்துடன் இணைக்கப்பட்ள்ளார்கள் என்பது எமக்கு விளங்கவில்லை. இவர்களின் நிலைகுறித்து ஜமியத்துல் உலமாவிற்கு எத்திவைப்பது எமது கடமையாகும்.
போராக்கள், காதியானிகள், 3 வகுத்து, ஷியாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர்கள் எவ்வாறு அஹ்லுல்சுன்னாஹ் வல் ஜமாஅத்தினருடன் முறண்படுகின்றார்களோ அவ்வாறு இவர்களையும் பிரித்தரிந்து தெளிவு படுத்துவது ஆலிம்களின் பாரிய போறுப்பாகும்.
Oh what a foolish and Shaitan group. Do not be silence . take action soon against these peopole
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இந்தகட்டுரையிலே முஜஹிட் மௌலவியுடன் நான் 100 % ஒன்று படுகிறேன்.
நான் சற்று 1 வருடங்களுக்கு முன் பாடஷாளைய்யில் நடந்த ஒரு விடயத்தை முஜஹிட் மௌலவியின் என்னத்துக்கு கொண்டு வருகிறேன் , இதுவும் இஸ்லாத்தின் அடிப்படையினை போக போக மற்றும் ஒண்டு.
ஆசிரியர்களுக்கு எழும்பி மரியாதையை செய்யக் கூடாது என்று சொன்னது உண்மைதானா?
கஹடோவிட தௌஹீத் இயக்கத்தை சேர்ந்த ஒரு மாணவன் அவ்வாறு செய்ததால் அது ஊர்ஜிதமனதும் உண்மை. ஆசிரியர் அந்த மாணவனிடம் நீ ஏன் எழும்பவில்லை என்று கேட்டதற்கு, அவன் நான் இறைவனுக்கு மட்டும்தான் மரியாதைஷைவேன்வேறு யாருக்கும் அவ்வாறு செய்யமாட்டேன் என்று பதில் கூறினான்.
பின் அசிரியர் அந்த மானவனைப்பர்த்து நீ இறைவனுக்கு உண்மையிலேயே மரியாதையை செய்பவனாக இருந்தால் அதான் சொல்லும்போது நீ உன்னுடையா புத்தகம்களை தூக்கி எறிந்துவிட்டு பள்ளிக்கு ஓடவேண்டும் தானே ஏன் நீ அவ்வருசைய்யவில்லை என்றுகேட்டதும் அந்தமானவன் திக்குதடுமாரிஉள்ளான் .
நாம் குரான், ஹதீஸ் அடிப்படையிலேயே வாழ வேண்டும், அந்த இந்த பெரியான் எழுதிய புத்தகம்களை மார்க்க ஆதரமாக எடுக்க கூடாது என்பதில் நானும் உறுதியாக உள்ளேன் , நீங்களும் (முஜஹிட் அவர்களும்) அதைத்தான் சொல்கின்றீர்கள். அனால் ,
முஜஹிட் அவர்களுக்கு தெரியாமலேயே, குரான் , ஹதீஸை பார்க்காமல், அதில் இருப்பதை அறையாமல் வெறுமனே முஜஹிட் , pj போன்ற மௌலவிகள் சொன்னார்கள் என்பதற்காக பின்பற்றுபவர்களாக மாறிவருவதும் அபாயகரமான ஒன்றே. அதற்கு பாடசாலையில் நடந்த விடயம் உதாரணம்.
அந்த மாணவன் உண்மையிலேயே முஜஹிட் மௌலவி, அவர்களது தௌஹீது பள்ளியின் சொல்லுக்கே மரியாதையை கொடுத்ததே ஒழிய வேறு இல்லை.
அந்த மாணவன் உண்மையிலேயே இறைவனுக்கு மரியாதையை கொடுப்பவனாக இருந்தால் அதான் சொல்லும்போது பள்ளிக்கு போகவேண்டும், போகமுடியும் இது ஒரு முஸ்லிம் பாடசாலை என்பதனால் அனால் அந்த மாணவன் அவ்வாறு நடக்கல்ல .
இவ்வாறு தொடர்ந்தால் அல்லாஹுக்காக என்று சொல்லிக்கொண்டு, பள்ளிக்ககவும், மௌலவிக்ககவும் மார்க்கத்தை செய்யக்கூடியவர்கள்தான் உருவாகும் என்பதும் ஒரு பயங்கரமான விடயமே.
How do you say He has done it for Mujahid Moulavi's order.
நஊதுபில்லாஹி மின்ஹாஃ மிகவும் மேசமான வழிகெட்ட ஒரு கூட்டமல்லவா இவர்கள். முஜாஹித் மௌலவியின் பகிரங்க உரைக்கு பகிரங்கமாக பதில் தருவார்களா அல்லது வழமைபோல் இதவும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆகிவிடுமோ தெரியாது. அந்த தரீக்காவாதிகள் உண்மையில் தங்களது கொள்கை சரியாயின பகிரங்கமாக ஆதாரங்களை எடுத்து வைக்க வேண்டும். முந்தய காலங்கள் போல் கேள்வி கேட்கக் கூடாதென்று தடைபோட்டு வைக்க முடியாது. முன்பு படிக்காத மக்குகள் இருந்திருக்கலாம். எனினும் தற்போது சமூகம் மாறிவிட்டது. சிந்திக்காது எதையும் செய்ய மாட்டார்க்ள். சோத்துச் சமூகமாக இருந்த காலம் மலையேறிவிட்டது என்பதை அவந்த மதப்போதகர் புரிந்து கொள்ளல் அவசியமே
அஸ்ஸலாமு அழைக்கும்.
மார்க்கத்தை சொல்வது மௌலவிமார்களின் கடமை. அதைப் ஆராய்ந்து அதன் உண்மையை அறிந்து பின்பற்றவேண்டியது எமது கையில்தான் உள்ளது. பாவம் அந்த மௌலவிமார்களும், பள்ளிவாயில்களும், அவர்களுக்கு என்ன தெரியும்? மக்கள் பின்பற்றுவது அல்லாஹ்வின் வாக்கிய, அல்லது நம்மையா என்று? மரணித்த அவ்லியாக்களும் உண்மையை சொன்னவர்களே! ஆனால், அவர்களின் பெயரால் பொய்சொன்னவர்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிந்தியுங்கள், அல்லாஹ்வை வழிபடுங்கள். அவன் நேர்வழியை காட்டுவான். அநாச்சாரங்களில் ஈடுபட்ட சமூகத்தாருக்கு இறைவன் வழங்கிய தண்டனைகளை குர்'ஆண் ஹதீஸ் மூலம் தெரிந்த நாம், எமதூரில் நடக்கும் அனைத்து அனாச்சாரங்களையும் தடுப்பதன் மூலம், அல்லாஹ்வின் அருளை சம்பாதிப்போம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
ஷாதிர்
அஸ்ஸலாமு அழைக்கும்,
சகோதரரே உங்கள் commence பிளைய்யானதகும், மார்க்கத்தை சொல்லவேண்டிய கடமை மௌலவிமார்களின் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தினது கடமை,
கபுருவனங்கிஹல், இணைவைப்பவர்கள், பௌத்தர்கள் , இந்துக்கள் போன்ற அனைவருக்கும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுப்பது ஒவ்வொரு முஸ்லிம்களதும் கட்டாயக்கடமை .
அவ்வாறு இருக்க இன்று விவாதம் என்று பட்டம் அடிக்கும் கூட்டம் அந்நிய அயலூரில் உள்ள பௌத்த பிக்குகளை பஹிரங்க விவாதத்துக்கு அழைக்கலாமே , எமது ஊரில் உள்ள நீங்கள் குறிப்பிடுகின்ற கபுருவனங்கிகள் இஸ்லாத்தை புரியாவிட்டாலும், அந்நிய பௌத்தர்கள் புரிந்து கொள்வார்களே .
ஊரில் உள்ளவனின் பலம் பற்றி எங்களுக்கு நல்லகத்தெரியும் என்பதனால் தானே, அவர்களோடு பகிரங்கமாக நடக்கின்றீர்கள் ?
அல்லது அந்நிய சிங்களவர்கள் நம்மீது படை எடுத்திடும் பயத்தினால்தானோ?
கண்மணி நாயகம் அன்று குறைஷிக்கபிர்கள் மத்தியில் ஷிருபன்மைய்யக இருந்துகொண்டும் பகிரங்கமாக காபிர்களை இஸ்லாத்துக்கு அழைத்தும், அவர்களது நாட்டு மன்னர்களுக்கு பகிரங்கமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் கடிதம்களை அனுப்பிய வரலாறுகள் இன்று எமது ஊரில் உள்ள குரான் , ஹதீஸை மட்டும் பின்பற்றுகின்றவர்களுக்கு தெரியாதோ அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறார்களோ என்ன?
அவ்வாறு இல்லை என்றால் அந்த பௌத்த பிக்குகளையும் விவாதத்துக்கு அழைத்திருக்கலாமேஎன்ன ?
ஊரில் உள்ளவர்கள் திருந்தாவிட்டாலும் அவர்கல்சரி திருந்துவர்கல்தனே என்ன?
Brother என்ற பெயரில் கொமென் அடித்திருக்கும் சகோதரருக்கு.... தங்களது ஆவேசத்தை சற்று குறைத்துவிட்டு புத்திசாலித்தனமாக சிந்திக்கவும். கட்டாயம் எமதூருக்குப் பக்கத்தில் இருக்கும் சிங்கள சகோதரர்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இஸ்லாத்தைச் சொல்லல் அவசியம். அதில இரு கருத்தக்கு இடமில்லை. எனினும் இவா்கள் பகிரங்கமாகவே தாங்கள் முஸ்லிம்களல்ல என்பதை சொல்கிறார்கள். ஆனால் இந்த அறிவிலிகளான தரீக்காக்காரர்களோ தாம் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்திற்கு முரணான கொள்கையில் வாழ்பவர்கள். எனவே இவா்களின் இப்போலி முகம் பகிரங்கமாகக் கிழிக்கப்படல் வேண்டும். இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிளகாலவர்.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் முஹிபுல் ஹக் அவர்களே,
நான் ஆவேசமாக எதோ சொன்னதாக நீங்கள் கண்ணால் கண்டமாதிரி சொல்வது கூட பொய் என்று அமைகிறது , ஏனென்றால் கண்ணால் காணாமல் ஒருவரது நடத்தையை விவரிப்பதுகூட சரியா முறையில் தவறு,
அதோடு குரான் , ஹதீஸை 100 % சரியாக பின்பற்றுகின்றவர்கள் நாம்தான் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற உங்களைப்போன்றவர்களின் சிந்தனையோடு ஒப்பிடும் பொது எனது சிந்தனை சிலநேரங்களில் உங்களைவிட குறைவாகத்தான் இருக்கும் .
இருப்பினும் ஊரில் உள்ள நீங்கள் சொல்கின்ற இணைவப்பவர்கலோடும் உங்களது விவாதம் அமைவதோடு, அன்னியமதங்கலோடும் பகிரங்க விவாதங்களை புரிய வேண்டும் என்பதே என்னுடையா கருத்தாகும் .
அவ்வாறு இதுவரையில் இந்த விவாதம் என்று பட்டம் அடிக்கும் நபர்கள் அந்நியர்களோடு ஒருமுரைசரி விவாதத்துக்கு போகவில்லை என்பது ஏன் என்றுதான் தெரியவில்லை?
உயிர்மீது உள்ள ஆசையா அல்லது மார்கத்தின்மீது உள்ள பற்றா?
எமது ஊரில் முஸ்லிம்கள் நாம் என்று கூறிக்கொண்டு இனைவைத்துக்கொண்டு இருக்கும் மக்களை பார்த்தால் அவர்கள் இஸ்லாத்தை விளங்கிக்கொண்டே தவருசைகின்றவர்கலாகத்தான் இருக்கின்றார்களே ஒழிய வேறு இல்லை , அதோடு இவ்வாறு முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு இனைவைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறைவன் நரகவாசி என முத்திரையிட்டு இருந்தால் நாம் எத்தனை விவாதம் செய்தாலும் அவனுக்கு அது எந்தபலனையும் கொடுக்காது . அனால்
அந்நிய, அயலவர்களான சிங்களவர்கள் நாளை மறுமைநாளில், " இறைவா நான் இஸ்லாமிய ஊருக்கு அருகாமையில் வாழ்த்தும் ஒருவர்கூட எமக்கு இஸ்லாத்தின்பால் இஸ்லாத்த்தைவிலக்கி அழைப்பு விடுக்கவில்லையே , எத்தனையோ மார்க்க அறிவாளிகள், முஸ்லிம்கள், பள்ளிவாயில்கள், விவாதங்கள் நடந்தும் இருந்தும் எமக்கு இஸ்லாத்தை கற்றுதருவதட்கு முன்வரவில்லையே "
என்று என்னை உங்களை, விவாதம் புரியும், புரியாத மௌலவிமார்கள், பள்ளி அங்கத்தவர்கள் , ஒட்டுமொத்த எமது ஊர் முச்ளிம்சமூகத்தை மறுமைநாளில் காட்டிகொடுப்பான் என்கின்ற அச்சத்திலேயே நான் எனது கருத்தை கூறினேனே ஒழிய வேறு ஒன்றும் இல்லை .
Brother அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.அதுபோல் உங்கள் எழுத்தில் உங்கள் உணர்ச்சிகளைத் தெரிந்துகொள்ளலாம். எமதூரிலுள்ள அந்த சகோதரர்கள் மார்க்கத்தை விளங்கிக் கொண்டே தவறு செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். அவா்கள் தவறை செய்துவிட்டு அது சரியென்று வாதாடுகிறார்கள். அதற்கு கட்டாயம் மறுப்புக் கொடுக்கப்படல் வேண்டும். அந்நியருடன் விவாதிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ள நீங்கள், ஏன் அந்த முயற்சியில் நீங்கள் இறங்கி முன்மாதிரியாக இருக்கக் கூடாது. குர்ஆன் ஹதீஸ் பேசும் அவா்கள்தான் தவறுசெய்தால் நீங்களுமா தவறு செய்ய வேண்டும். ”நீங்கள் செய்யாததை அடுத்தவர்களுக்குச் செய்யுமாறு தூண்டுவதும் அல்லாஹ்விடத்தில் பெரிய பாவம்” (அல்-கஸஸ்)
Brother அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.அதுபோல் உங்கள் எழுத்தில் உங்கள் உணர்ச்சிகளைத் தெரிந்துகொள்ளலாம். எமதூரிலுள்ள அந்த சகோதரர்கள் மார்க்கத்தை விளங்கிக் கொண்டே தவறு செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். அவா்கள் தவறை செய்துவிட்டு அது சரியென்று வாதாடுகிறார்கள். அதற்கு கட்டாயம் மறுப்புக் கொடுக்கப்படல் வேண்டும். அந்நியருடன் விவாதிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ள நீங்கள், ஏன் அந்த முயற்சியில் நீங்கள் இறங்கி முன்மாதிரியாக இருக்கக் கூடாது. குர்ஆன் ஹதீஸ் பேசும் அவா்கள்தான் தவறுசெய்தால் நீங்களுமா தவறு செய்ய வேண்டும். ”நீங்கள் செய்யாததை அடுத்தவர்களுக்குச் செய்யுமாறு தூண்டுவதும் அல்லாஹ்விடத்தில் பெரிய பாவம்”
(சூறா - அஸ்ஸப்)
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே!
நீங்கள் அனைவரும் இந்த comments அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள், brother என்ற பெயரில் எழுதும் சகோதரரின் கருத்துக்கள் உண்மையாக செயற்படுத்த வேண்டியவை, ஆனால் அவரின் இளரத்தத்தின் சூடு மிக மிக அதிகமாக உள்ளது. எமது மார்க்கத்தினுள் பல பிளவுகள், ஆகவே, இயக்கங்கள், தரீகாக்கள் போன்றனவுடன் விவாதம் செய்யலாம். ஆனால் அந்நியர்களுடன் நாம் விவாதம் செய்வதல்ல முறை, முன்மாதிரியாக இருப்பதுதான் எமது மார்க்கம் எமக்கு சொல்லித்தந்தது. நாம் முன்மாதிரியாய் இருந்தால், அவர்களே வந்து கேட்பார்கள், எமது மார்க்கத்தைப்பற்றி.....
அடுத்து சொன்னீர்கள், மார்க்கத்தை சொல்வது எல்லோரதும் கடமை என்று. 100% உண்மைதான். உங்களால் மிம்பரில் ஏறி ஒரு மார்க்க சொட்பொளிவு நடத்த முடியுமா? அல்லது, 40 ஹதீஸ்களை அரபியில் சொல்லி அதற்கு முழு விளக்கம் சொல்ல முடியுமா? அல்லது, குர்'ஆண் வசனங்களை தமிழில் மொழி பெயர்க்க முடியுமா? அல்லது, இஸ்லாமிய வரலாறுகளைத்தான் சொல்ல முடியுமா? இவைகளை தெரியாமல் 95% முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களுக்கு, யார் சொல்லிக்கொடுப்பது?
ஷாதிர்
அஸ்ஸலாமு அழைக்கும்,
Br Said
"சகோதரரே உங்கள் commence பிளைய்யானதகும், மார்க்கத்தை சொல்லவேண்டிய கடமை மௌலவிமார்களின் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தினது கடமை,"
Then He said
"அயலூரில் உள்ள பௌத்த பிக்குகளை பஹிரங்க விவாதத்துக்கு அழைக்கலாமே" ,
My request from him
நீங்களே அதைச் செய்யலாமே எமது ஊரில் உள்ள நீங்கள் குறிப்பிடுகின்ற கபுருவனங்கிகள் இஸ்லாத்தை புரியாவிட்டாலும், அந்நிய பௌத்தர்கள் புரிந்து கொள்வார்களே" .
கொஞ்சம் வேதனையாகத்தான் இந்த பதில் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள் உங்கள் புண் ஆர வேண்டும் என்பதனாலேதான் அவ்வாறு செய்தேன். நான் வைத்தியம் செய்துள்ளதால் இதற்குப் பின்னர் நீங்கள் போடும் சத்தங்களை கண்டுகொள்ளமாட்டேன்
அஸ்ஸலாமு அழைக்கும்,
முஜாஹித் மௌலவி அவர்களே , நீங்கள் கண்டு கொள்வதற்காக நான் எதுவும் சய்யவில்லை, நீங்கள் கண்டு கொண்டாலும் , கண்டு கொள்ளாவிட்டாலும் அதில் எனக்கு ஒன்றும் இல்லை அது உங்களது தனிப்பட்ட உரிமை. ( நான் இங்கு உங்களை இகழவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை கண்டு கொள்வது, கண்டுகொள்ளாதது அது உங்களது தனிப்பட்ட உரிமை )
உண்மையிலேயே பி, ஜே , zakirnaaik , போன்றவர்கள் நிறைய்ய அந்நிய மத முக்கிய பிரமுகர்களுடன் பகிரங்க விவாதம் புரிந்து உள்ளதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் . உண்மையிலேயே அவர்களை, அவர்களின் உண்மையான தைரியத்தை நான் , நாம் பாராட்டத்தான் வேண்டும் , அவர்களைப்போன்றுஎமது நாட்டில் ஒருவர்கூட இல்லையே என்பதுதான் கவலை. உண்மையிலேயே அவர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது.
( zakirnaik , பி ஜே போன்றவர்களை நான் பின்பற்றசொள்ளவில்லை நாம் பின்பற்றவேண்டியது குரான், ஹதீஸ் என்பவற்றையே என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.)
Brother கூலாயிட்டார் போல விளங்குது. முஜாஹித சறீலாங்கியின வைத்தியம் மிகவும சக்தியானது...
சகோ........BROTHER , ......... சொல்வது மிக மிக சரி...அதுவே இஸ்லாத்தின் கட்டளையும் ஆகும்.....
இங்கு ஒரு கடமையை சகோ..BROTHER நமக்கு நினைவு படுத்துகிறார்..... அதற்க்கு அழகிய பதில் அளிப்பதை விட்டுவிட்டு.... நீங்கள் செய்யுங்கள் என கூறுவது பொருத்துமல்ல.. முஸ்லிம்களில் சிலர் முஸ்லிம் என கூறிக்கொண்டு , தவறான கொள்கைகளை பின்பற்ற்ற்றுவதும் உண்மை.. அதற்காகஅவர்களை ஏசுவது,வெறுப்பது தூற்றுவது எல்லாம இஸ்லாம் வெறுக்கும் செயல்..
...மாறாக அவர்களின் தவறான கொள்கைகளை கண்ணியமாக அவர்களுக்கு தெரியப்படுத்த
வேண்டும் .அத்துடன் மற்ற முஸ்லிம் அனைவருக் கும் தெரியப்படுத்த வேண்டும்.அவர்களுட விவாதம் செய்யும்போது , மற்ற முஸ்லிம் அல்லாதவர்கள் பார்த்து பாருடா..முஸ்லிம்களே நமக்கும் பல கொள்கைகளை வைத்துக்கொண்டு சண்டை பிடிக்கானுகள் என கூறுகின்றனர்......இதுதான் இப்ப நடக்கின்றது.இப்படி தவறான கொள்கையில் உள்ள முஸ்லிம்களை எதிர்த்து நோட்டீஸ் ஒட்டி திரியாது , அங்கும் இங்கும் கதைத்து திரியாது , நிதானமாக அவர்களை அழைத்து சந்தித்து உண்மையை சொல்ல வேண்டும்..
ஆனால்புத்த மத்தத்தவரலோ அவர்கள் பொதுவாக அனைவரும் நாஸ்திகர்கள்..ஏனெனில் அவர்கள் தேரவாடமத்தத்தின்படி புத்தர் கடவுள் நம்பிக்கையை பற்றி போதிக்கவில்லை . இவர்களோ இஸ்லாத்தை பற்றி ஏதும் தெரியாதவர்கள்....... இவர்களில் எத்தனையோ லட்சம் பேர் இஸ்லாத்தை தெரியாது மரணித்து விட்டனர்... இனி இருப்பவர்களாவது இஸ்லாத்தை அறிய நாம் தான் உதவ வேண்டும..
அவர்களுக்கு இஸ்லாத்தை சொல்வது முஸ்லிம் அனைவரினதும் கடமை.... இதை எந்த வழியில் செய்வது என நாம் ஆலோசித்து ஒரு முடிவெடுத்து செய்ய வேண்டும்இல்லை எனில் நாம் அனைவரும் பயங்கர குற்ற்ற்றவாளிகள் என்பதை மனதில் ஒவ்வொருவரும் பதிய வைக்கவும். .......ஏனெனில்,,,,,,தூதர் அவர்கள் தனது இறுதி உபதேசித்டின்போது........... ....."என்னை பற்றி இங்கு உள்ளவர்கள் இங்கு வராதவர்களுக்கு சொல்லுங்கள்"..என பொதுவாக கட்டளை இட்டார்கள்..அதன் விளைவே உலகை ஒரு போது இஸ்லாம் ஆண்டது..நாம் எல்லாம் முஸ்லிம்களாக இருப்பதும் அந்த கட்டளையை சஹாபாக்கள் நிறைவேற்றியதாலதான்....... முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மிக முக்கிய கட்டளையை நிறை வேட்ராது விட்டதன் விளைவே இன்றைய நம் நிலை........
எனவே வீணாக நாம் ஆளுக்கு ஆள குறை சொல்வதை விட்டு விட்டு , இறைவனின் கட்டளைகளை செயல் படுத்த முயலுவோம்.. ........ MODERATEMUSLIM....
அஸ்ஸலாமு அழைக்கும், டாக்டர் மௌலவி முஜஹிட் அவர்களே,
புண்ணுக்கு மருந்து போட்டதற்கு ரொம்ப நன்றி,
ஏஹத்துவவதிகள் , தௌஹீட்வாதிகள் நாமே என்று கூறிக்கொண்டு உங்களுடன் அமர்ந்து , உங்களது கூவலுக்கு கைதட்டும் சிலரது நோய்களை உங்களுக்கு புலப்படவில்லையா? அல்லது நோயாளியோடு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு புதுவித டாக்டரா நீங்கள்?
இதோ உங்களோடு உள்ள சில நோயாளர்களின் நோய்ஷிலவற்றை கீழே குறிப்பிடுகிறேன் , முடியுமானால் குணப்படுத்துங்கள்
எது எவ்வாறாயினும், எமது ஊரிலே நாம் குரான், ஹதீஸை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மக்களில் நிறையப்பேர் அவ்வாறு இல்லை அவர்கள் அவர்களது பள்ளியையும், மௌலவிமார்களையுமே பின்பற்றுகின்றனர்,
மௌலவி என்ன சொல்றாரு அதை உடனடியாக பின்பற்று கின்றனர் அது குரானிலோ , ஹதீஸிலோ இருக்கிறதா என்று ஆராய்ந்து பின்பற்றுபவர்களாக இல்லை என்பத உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . ஏனென்றால்
1 . நான் மேலே என்னுடையா முதல் commence இல் குறிப்பிட்ட பாடசாலை சம்பவம் அதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
2. இன்னும் சில உங்களது ஏஹத்துவவாதிகள் எப்படி என்றால் , கத்தம், சிலரது கல்யாண சாப்பாடு கூட சாப்பிடுவதிள்ளயாம், ஆனால் மதுபானம், லொத்தர் ஷீட்டிளுப்பு, புகைத்தல் போன்றவற்றில் கில்லாடிகலாஹா இருக்கிறார்களே இது உங்களுக்கு தெரியாதா ? அவ்வாறு செய்பவர்கள் யார் என்று கூட உங்கள் பள்ளி நிர்வாகிகள் அறிந்தும் மௌனமாக இருப்பது வேதனைக்குரியதல்லவா?
3 . சென்ற ரமலான் காலத்தில் உங்களது பள்ளியில் ஒரு மௌலவி எந்தவித குரான், ஹதீஸ் அதரமும் இன்றி 20 ரக்காத் tharaaveeh தொழுவது விபச்சாரம் சைவதட்கு சமன் என்று குறிப்பிட்டார் . அவ்வாறு சொன்னதை அப்படியே தௌஹீது சகோதரர்கள், அவ்வாறு 20 ரக்காத் தொளுபர்களுக்கு விபச்சாரம் சைய்யப்போகிரார்கள் என்று நய்யாண்டி பண்ணி பாதையிலே கதைத்தார்கள் . இது அந்த மௌலவி அவ்வாறு சொல்லவில்லை என்று நீங்கள் சொல்ல முடியமா? அல்லது குரானிலோ, ஹதீஸிலோ 20 ரக்காத் தொழுவது விபச்சாரத்துக்கு சமன் என்று சொல்லியிருக்குதோ ? இது என்ன எஹத்துவவாதியின் சொல்லா ?
4 . இவ்வாறே வாங்கின கடனை திருப்பிக்கொடுக்காது, நாம் குரான் , ஹதீஸை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.
ஒரு ஏஹத்துவவாதியிடம், ஒரு ஏஹத்துவவாதி கடன் கேட்டுச்சென்றான், அதற்கு பணக்கார ஏஹத்துவவாதி பணம் இருக்கிறது தரமுடியாது என்று சொல்லிவிட்டார் , காரணம் என்ன என்று பணம் கேட்டுச்சென்ற ஏஹத்துவவாதி கேட்க அவர் உங்களைப்போன்றுதான் பெயரிய எடுத்ததட்கேல்லாம் குர்ஆனில் , ஹதீஸில் அதாரம் கேட்கும் ஒரு ஏஹத்துவவாதி என்னிடம் பணம் கொஞ்சம் கடனுக்கு வாங்கிச்சென்றார் தவணை முடிந்தும் இன்னும்தரவில்லைய்யே என்றார்.
ஆனால் கொல்ஹை என்றால் எவரோடும் சண்டைபோடுவதட்கு தயாராம் என்று அந்த கடனை திருப்பிக்கொடுக்காத ஏகத்துவவாதி சொன்னாரம் .
என்று அந்த பணக்காரர் சொல்லியானுப்பியுள்ளார்.
5 . சில தௌஹீட்வாதிகள் பெருநாள் கொண்டாடுவதில் பிளவு பட்டுள்ளனர், என்ன ஹதீஸ் வல்லுனர்கள் போதாததநாலா ?
நோன்பு நாளில் பெருநாள் எடுப்பது கூடாது தானே அவர்களுக்கு அதைப்பற்றி ஹதீஸ் அராய்வதட்கு விருப்பம் இல்லையா அல்லது முஜஹிட் மௌலவியின் அறிவுரை பயான் வரும்வரை கார்த்திருக்கிரார்களா?
இவைகளை விரைவாக தீர்த்துக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் ஒரு குழு வேறு பள்ளி கட்டிக்கொண்டு பிரிந்து செல்வார்கள் என்ற பயத்தின் காரணமாக சும்மா கண்டும் காணாததுபோல் இருக்கின்றீர்களா?
இதன் தொடர் அடுத்த commence இல் தொடரும்.
6 . முஜாஹித் மௌலவியின் பயான் என்றால் சரியான நேரத்துக்கு வுளுசைதுகொண்டு வந்து உட்கார்ந்து பயான் கேட்கவரும் கூட்டம் அப்பப்பா பள்ளிவாயில் நிறைந்து இருக்கும்,
ஆனால் சுபாஹ் தொழுகைக்காக வாங்கு சொல்லியும் , அதில் தொழுகைக்காக விரைண்டுவாருங்கள் என்றும், உங்கள் இறைவன் அழைக்கிறான் என்றும் சொல்லியும்கூட பள்ளியில் போய் பார்த்தால் முதல் இரண்டு வரிகளுமே பூர்த்தியாக இருக்கும் அதுவும் சில நாட்களில் இல்லை, ஆனால் பயான் என்றால் நிறைந்து வடியும் பள்ளி.
ஒருநேரம் அவ்வளவு பேர்தான் பள்ளிக்கு உள்ளதோ தெரியாது.
முஜாஹித் மௌலவியின் மீதுள்ள பற்றின் காரணமாகவும் நமது பள்ளி நாம் நல்லசனம் ஒன்றை காட்டவேண்டும் என்பதற்காகவே.
அவ்வாறு இல்லை என்றால் உண்மையாக இறைவனுக்கு பயப்படுபவர்களாக இருந்தால் சுபக்குப்பல்லிக்கு வருவார்கள் , அவ்வாறு வருவதுதான் குரான் ஹதீஸை பின்பற்றுபவர்களுக்கு உதாரணம்.
சிலர் சுபஹு தொழுவதும் இல்லை ஆனால் சுபஹுத்தொளுகையில் குனூத் ஓத முடியுமா கூடாதா என்று விவாதம் பண்ணி வீணாக சண்டைசையும் ஏஹத்துவவாதிஹல் நிறைய உண்டு ? ஒருவேளை முஜஹிட் மௌலவியின் டாக்டர் கண்ணுக்கு அது புலப்படுவதில்லையோ தெரியா.
இங்கு மௌலவி சொல்வதை பின்பற்றுபவர்களே கூட உள்ளது என்பதும் கவலைதரக்கூடிய ஒன்றாகும்.
7 . தங்கம் அணிவது கூடாது , அல்லது ஆபத்தானது என்று நீங்கள் சொன்னதாக சில குரான் ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு உங்கள் சொல்லை பின்பற்றுகின்ற சில பெண்கள் ஹதீஸ் என்ன சொல்கிறது என்று ஆராயாமல் களத்தில் கையில் இருந்த எல்லாவற்றையும் கலட்டி எரிந்தத வரலாறு உங்களுக்கு தெரியுமா ? அல்லது சிலவேளை அவர்கள் உங்கள் கருத்தை தவறாக புரிந்து இருப்பார்கள்.
உங்களைப்போன்று சிலர் ஹதீஸை தவறா விளங்கியுள்ளனர் என்று சகோதரர் பீ . ஜே அவரது onlinepj .com இல் விவரமாக ஹதீஸ்களை எடுத்துப்போட்டு உள்ளதை நீங்கள் பார்க்கவில்லையா ?
எமது ஊரில் உள்ள சில ஏஹத்துவவாதிகள் இப்படித்தான் ஒருநாளைக்கு ஒரு அய்ன் குரானை பொருள் விளங்க ஓதமாட்டர்கள் , அல்லது சிலருக்கு குரானே ஓதத்தேரியாது , அல்லது குரானை கையினால் பிடித்தகாலமே தெரியாது, but , டாக்டர் முஜாஹித் மௌலவி என்னசொன்னாலும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு .........சமூகமே உருவகிக்கொண்டுவருவது கவலைதரக்கூடிய விடயமே ?
குரானை முழுவதும் ஒருமுரைசரி பொருள்விளங்க ஓதாத நிறையப்பேர் எப்படி குரானை பின்பற்றுவது என்று சொல்லமுடியும்?
எனவே எமது ஊரிலே குரான் ஹதீஸை பின்பட்ட்ருகின்றேன் என்று சொல்லிக்கொண்டு மௌலவிமார்களை பின்பற்றுபவர்களே அதிகம் உள்ளனர்.
சிலர் அவர்களது நடவடிக்கை அதை ஊர்ஜிதமாக்கும் அளவுக்கு உள்ளது என்பதும் புலப்படுகிறது .
****. இவற்றுக்கெல்லாம் காரணம் நேரடியாக மௌலவிமார்களையும் அவர்களது வசனம்களையும் உண்மைநிளைமைகளை குரான் ஹதீஸில் உள்ளதா என்று ஆராயாமல் பின்பற்றுவதே.
அன்று நபிகள் நாயகம் சள்ளல்லாஹு அலைகிவசல்லாம் ஏதாவது செய்தால் அதற்கான காரணத்தை சகாபாக்கள் உடனே கேட்டு " இது உங்களின் கூற்ற அல்லது இறைவனின் கட்டளையா " என்று விளங்கிக்கொள்வார்கள் .
""" கீழ்த்திசையில் இருந்து இருவர் வந்து கொத்துப பேருரை நிகழ்த்தினர் அப்பொழுது மக்கள் அவர்களின் அழகிய பேச்சைக்கண்டு வியப்பில் மூழ்கிவிட்டனர் , அப்பொழுது அண்ணல் நபி (ஸல் ) அவர்கள், " நிச்சயமாக சில பேச்சுக்களில் சூனிய (மயக்க) ம இருக்கிறது " என்று கூறினார்.
ஆதாரம் : புஹாரி , முஅத்தா , அபூதாவூத், திர்மிதி.
டிய பிரதர், மக்கள் செய்யும் தவறை ஏன் முஜாஹித் மௌலவியின் மேல் சுமத்துகிறீர்கள். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு சுன்னத் ஜமாஅத்வாதிகளிலும ்அதிகம் உள்ளதுதானே. ஏன் முஜாஹித் மௌலவியை மட்டும் குற்றம் சொல்கிறீர்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும் , சகோதரர் முஹிபுல் ஹக் அவர்களே
நீங்கள் சொல்வது சரி, சுன்னத் ஜமாஅத் மக்களிடமும் அந்த தவறுகள் இடம்பெறுகிறது , அதற்கு அவர்களை ஏகத்துவவாதிகளிடம் கேட்பதுபோல் தட்டிக்கேட்பது கொஞ்சம் கடினம் ,
ஏனென்றால் அவர்கள் இமாம்கள், பெரியவர்கள், சில மதுஹபுகள், மார்க்க அறிவாளிகளின் நூல்கள், சொற்கள் போன்றவைகளையும் பின்பற்றுவதனால்.
ஆனால் எமது ஊரிலே நாம்தான் குரானையும், ஹதீசையும் மட்டும் பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக்கொண்டும், நாம்தான் ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக்கொண்டும் இந்த தவறுகளை அவர்கள் செய்துகொண்டு இருப்பதைத்தான் நான் சொன்னேன்.
ஏனென்றால் தொஹீட்வதிகள் குரானையும், ஹதீசையும் மாத்திரம் பின்பற்றுபவர்கள் அவர்களுக்கு எந்த அட்ஜஸ்ட்மேண்டும் மார்க்கத்தில் பண்ணமுடியாது , அதோடு குரானை விளங்கியவர்கள் , குரானை சொல்வதற்கு அடுத்தவர்களோடு போட்டிபோட்டு விவாதம் பண்ணும் சிங்கம்கள் , மௌலவிமார்களைபின்பற்றுபவர்கள் அல்ல .
அனால் சுன்னத் ஜமாஅத் மக்கள் அவ்வாறு அல்ல அவர்கள் மார்க்கத்தில் பெரியவர்களின் கித்தாபுகளை படித்து அட்ஜஸ்ட்பன்னுபவர்கள் so சுன்னத் ஜமாஅத் மக்களிடம் கேட்பதில் எந்த பயனும் இல்லை ?
என்பதனாலே நான் சில தொஹீட்வாதிகளின் நோய்களை இங்கு டாக்டர் முஜஹிட் அவர்களுக்கு குறிப்பிட்டேன், முதலில் அவர்களுக்குள் உள்ள தவறுகளை திருத்திவிட்டு ஏனைய்யவர்களின் தவறுகளை திருத்துவது நல்லம், அதைவிட்டுவிட்டு முஜாஹித் போன்ற பிரபல மௌலவிமார்கள் அவற்றை கண்டும் கானதுபோல் இருப்பது தான் புரியாமல் உள்ளது.
brother! we are waiting for mujahid moulavi's comment, but one thing, u said that sunnath jam'ath following stuffs, better correct them in to qur'aan hadhees, it's your duty too. as a thareequawathee, i'm trying my best for my people.
யார் இந்த சகோதரா் (brother), மேலெ அக்கத்தில் கூறப்பட்ட விடயம் எவ்வளவு பாரதுாரமானது என்று தெரிந்திருந்தும் உங்களது கருத்துக்கள் அதைத் திசைதிருப்பியிருக்கின்றன. உன்மையில் முஜாஹிதையோ அல்லது தௌகீத் வாதிகளையோ சாடுவதற்கு வேறோரு சந்தருப்பத்தை நிங்கள் பயன்படுத்தியிருக்களாம் என்பதது எனது தாழ்மையான கருத்து.
”கப்றில் உனது ரப்பு யார் என்று கேள்வி கேட்டால் முஹிதீன் அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்லலாம் என்று ஒரு மதபோதகர் பள்ளத் தக்கியாவில் உரையாற்றியுள்ளதாக ”
இந்த இடத்தில் அல்லாஹ்வுடைய ரஸுல் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் அதைப்பற்றி இந்த ”சசோதரா் ” சிந்தித்திருந்தால் இப்படியான தவ்ஹீத், தபிலீஹ், முஜாஹீத், டொக்டா் போன்ற சொற்பிரயோகங்களை பிரயோகித்திருக்க மாட்டார்.
இந்த வலைபின்னலின் சேவைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வஸ்ஸலாம்.
என்னைப் பொறுத்தவரை
இவ்வளவு தஃவாச் செய்ய வேண்டும்
அந்நியர்கள் இஸ்லாத்திற்கு வரவேண்டும்
தவ்ஹீத்வாதிகளிடம் அந்த முயற்சி இல்லை
உலமாக்களை தக்லீத் பண்ணுகிறார்கள்
என்றெல்லாம் சமூக விமரிசனம் செய்யும் ஒருவர் பயந்தாங் கொல்லியாகவோ முகவரியற்றவராகவோ இருக்கக் கூடாது.இது போன்றவர்கள் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. சிலவேலைகளில் பிரச்சனைகளின் பின் பதுங்கி நிற்கும் சூத்திர தாரிகளாகவும் இவர்கள் இருப்பார்கள். ஆகையினால் சமூகத்திற்கு நலவு விரும்புவராயின் எம்மைப் போன்று பெயரைத் தெளிவாகவே அறிவித்து விட்டு களமிறங்குக்கள் மதில் பூனைகளுக்கு இங்கு இடமில்லை.மறுபடியும் ஏதாவது பெரிய தத்துவங்களை முகவரியின்றிக் கிறுக்கினால் அவர் ஒரு மன நோயாளி என்பதில் சந்தேகமில்லை அறிவித்து விட்டு யுத்தஞ் செய்வாராயின் அறியாமையாயினும் மன்னிப்பு உண்டு.வஸ்ஸலாம்
That is correct Mujahith Moulavi. We will wait and see who is this BROTHER the crazy..?
பிரதா் மற்றும் முஜாகித் மௌலவி அகிய இருவரும் தாங்களது கருத்துக்களை அவரவா் தனிப்பட்ட ஈமெயிலினுாடாக பரிமாரிக்கொள்ளவேண்டு என்பது எமது பல வாசகர்களின் அவாவாகும் ஏனெனில் நமது ஆக்கத்தின் கருப்பொருளை இவ்விருவரினது கருத்துப் பாரிமாற்றம் திசைதிருப்பியிருக்கன்றன என்பது அவா்களின் கருத்து. எனவே இருதியாக எம்மையடைந்த இருவரினது பதில்களையும் பிரசுரிக்கவில்லை என்பதை வாசகா்களாகிய உங்களது கவனத்திற்குகொண்டிவருகிறோம்.
தயவு செய்து இவர் தன்னை யார் என்று அறிவித்து விட்டு வருவாராயின் அவற்றை பிசுரியங்கள்.இல்லையெனில் இவரின் எந்த விமரிசனங்களையும் பிரசுரிக்க வேண்டாம். காரணம் மற்றவர்கள் முகவரியின்றி எழுதினாலும் தம்மைப் பெறுமைப் படுத்திக் கொள்ளும் தோரணையில் விமரிசிக்கவில்லை.ஆனால் இவர் தன்னை ஒரு தைரிசாலி என்று காட்டிக்கொள்ள முனையம் ஒரு கோழை
அஸ்ஸலாமு அழைக்கும், தளத்தயாரிப்பலர்களே,
நீங்கள் உண்மையிலேயே நடுநிளைமைய்யிலேயே , இயங்கிநீர்கள் அதற்கு ரொம்ப நன்றி,
இருப்பினும் சகோதரர் முஜஹிட் மௌலவி அவர்கள் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் தரவில்லை ,அதற்கு பதில் தருவதை விட்டுவிட்டு கேள்வி கேட்பவர் ஒரு பயந்தான்கொள்ளி, மனநோயளிஎன்று சொல்லி எப்படியோ பதில்தராமல் தப்பிவிட்டார்.
அவரைப்போல் எனக்கும் அவ்வாறான வர்த்தைகளைகொண்டு அவரைதிட்டமுடியுமாகஇருந்தும் நான் அவரைப்போன்று வசனங்களை பாவிக்கவில்லை ஏன் என்றால் இது உண்மையிலேயே நல்ல வேப் தளம் அனைவரும்பார்கின்ற ஒன்று என்பதனால்.
நான் கேட்ட கேள்விகள் 1 to 7 வரியிலான எந்த கேள்விக்கும் பதில் தரவில்லை , தர முடியாது என்பதனால் அவ்வாருசைதுல்லாறு ,
தொடர்ந்து நான் எனதுகருத்துக்களை சொல்லுவேன் but பிரசுரிப்பது பிரசுரிக்கதது உங்கள் விருப்பம்.
நீங்கள் (வெப்தள உரிமையாளர்கள்) உங்களை பகிரங்கமாக அறிமுகம் செய்யாது இருப்பது போலவே நானும், சில விடயங்களை (உண்மைசம்பவன்களை) தனித்து பிரசுரிக்கும்போது அவ்வாறு சிலநாட்களுக்கு செய்வதைவிட வேறு வலிகள் இல்லை என்று நான்நினைக்கிறேன்.
SALAAM TO all..
Mujahid malavi ........... You must answer any questions posted to you by ANYONE regardless his identity .... First do reply ....
Identification of a memeber in a blog is not necessary......
Maybe he has some reasons when UNEARTH important truth to the soceity..... so jst forget WHO HE IS.
Reply for questions in a HUMBLE , MODERATE WAY.
Moderatemuslim.....
why you not publish my COMMENTS ?????
MODERATEMUSLIM
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே,
சிலநாட்களுக்கு முன் எமது ஊரில் உள்ள தொஹீத் பள்ளிக்கு வெளிநாட்டில் இருந்துவந்த ஒரு செல்வந்தர் பள்ளியின் கட்டிடவேலை, மதரசா மாணவர்களின் நலனுக்கு, என போன்ற பல விடயங்களுக்காக பண உதவிகளை அல்லாகுவின் பேரில் வழங்கிவிட்டு சென்றமை எல்லோருக்கும் தெரியும். அவரின் நல்ல எண்ணங்களை அல்லாஹ் நிறைவேற்றிவைக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.
அதோடு நான் இங்கு ஒன்றை சொல்லவேண்டியுள்ளது , என்னவென்றால் கஹட்டோவிட்டவில் உள்ள D .A என்ற அமைப்புக்கு இவ்வாறான பண உதவிகள் வரும்போது அவர்களை ஏளனமாக, கொச்சையாக , வெளிநாட்டுசல்லிக்காக பாடுபடுபவன் என்றெல்லாம் பேசிய எமதூரை சேர்ந்த தொவ்ஹீட்வாதிகள் இப்பொழுது என்னவென்றால் அவர்களுக்கு வெளிநாட்டு செல்வந்தர்களின் பண உதவி வரும்போது மட்டும் வாயினை பொத்திக்கொண்டு இருப்பதுதான் புரியாமல் உள்ளது?
எமது பாடசாலைகளிலும் அலட்சியப்படுத்தப்படும் பாவம் :
மரியாதைக்காக எழுந்து நிற்றல் அல்லாஹ்வுக்கு மாத்திரமே!!!
01.ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தவண்ணம் தொழுதார்கள் நபித்தோழர்களோ நிண்றவண்ணம் தொழுகையை நிறைவேற்றினார்கள். ஸலாம் கொடுத்ததன் பிறகு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : சிறிது முன்னர் நீங்கள் ரோம, பாரசீகர்களின் செயலைச் செய்ய முற்பட்டீ...ர்கள். அவர்களுடைய அரசர்கள் உட்கார்ந்திருக்கும் போது அவர்கள் எழுந்து நிற்பார்கள். இனிமேல் நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள் (ஸஹீஹூல் முஸ்லிம்)
02.அல்லாஹ் கூறுகிறான் : (அல்லாஹ்வுக்கு முன்னால்) அல்லாஹ்வுக்காக கண்ணியத்துடன் எழுந்து நில்லுங்கள் (2:238)
03.நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மனிதர்கள் தனக்காக நின்றவண்ணம் காட்சிதருவது யாருக்கு மகிழ்ச்சியூட்டுகின்றதோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் (திர்மிதி, அபூதாவூத் - ஸஹீஹ் ஸி.அ.ஸ பா.01)
04.அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
'(நபித்தோழர்களிடத்தில்) அவர்களுக்கு ரஸூலல்லாஹி (ஸல்) அவர்களை விட விருப்புக்குரியவராக எந்தவொருவரும் இருக்கவில்லை. அவர்கள் (ரஸூலல்லாஹி (ஸல்)) அவர்களைக்கண்டால் அவர்கள் (அதை) வெறுப்பதை அறிந்து அவர்களுக்காக எழுந்து நிற்கமாட்டார்கள் (திர்மிதி - ஸஹீஹ் ஸஹீஹ் ஸி.அ.ஸ பா.01)
அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய ஒரு விடயத்தை அவனல்லாத ஒருவருக்கு செய்தல் என்னவென்று அல்லாஹ்வுடைய வஹியைப் பின்பற்றுபவர்களுக்கு கூறவேண்டியதில்லை. அல்லாஹ் நம்மையும் நம்முடைய சகோதரர்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பானாக!!
அழைக்கும், அன்ய்மௌசே அவர்களே
நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களை நானும் பார்ப்பேன் , அது உண்மை என்றால் , நாம் அவ்வாறு யாருக்காகவும் எழுந்து நிற்கக்கூடாது , குரான் ஹதீஸ் முன்னாள் எதற்கும் இடம் இல்லை.
அதில் நீங்கள் பாடசாலயில் மாத்திரம் என்று குறிப்பிடாமல்
அரசியல்வாதி, ஆசிரியர், செல்வந்தர் , ஜனாதிபதி , லெப்பை , இன்னும் யாராக இருந்தாலும், எந்த இடத்தில் என்றாலும் சரியே என்று தான் அந்த விடயம் அமைய்யவேண்டும்.
dear brother! mostly this sin is happening at schools.... basement of the life, starting from schools. i think, now you understand. if learn this from school, they will obey politician, rich men, president, or lebbai or etc... in other ways. standing for them is not good.
Post a Comment