கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பள்ளிவாசல் சம்மேளனம் மக்களின் எதிர்பார்பை மனக்கோட்டையாக்கிட கூடாது!



ஒழுக்கத்தை புறக்கணித்து விட்டு கல்வி பெற முனைந்ததனாலே உலகம் இன்று சமாதனத்தை தொலைத்துள்ளது. ஒழுக்கமும் கல்வியும் எமது இரு கண்களைப்போன்றது என கலாநிதி நபீஸ் நளீமி தெரிவித்தார்.


கஹடோவிட ஓகடபொல பபள்ளிவாசல் சம்மேளனத்தின் அங்குராப்பணக் கூட்டம் நேற்று அல்பத்ரியா ம.வி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முஸ்லிம் உலகு இன்று கல்வியிலே பின்தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அமேரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை விட மிகவும் குறைந்ததாகவே முழு முஸ்லிம் உலகிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன.

கல்வி இன்று பொருளதாப் பண்டமாக மாறியுள்ளது. சில முஸ்ஸிம் நாடுகளில் தரமான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இருந்தும் முஸ்லிம்கள் தமது உயர்படிப்புக்காக ஐரோப்பிய பல்கலைக் கழகங்களையே நாடுகின்றனர். இதன்மூலம் அந்தநாடுகளில் பெரும்தொகையான பணத்தை முதலீடு செய்கின்றனர். அந்தப்பல்கலைக் கழகங்கள் வழங்கும் கல்வியில் ஒழுக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, இப்பல்கலைக் கழகங்களால் உருவாக்கப்படும் புத்திஜீவிகளால் உலக அமைதிக்கு இன்றும் தீர்வுகான முடியாமல் இருப்பது இதற்கான சிறந்த உதாரணமாகும் எனவும் அவர்மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து சம்மேளன உருப்பினர் அல்ஹாஜ் ஜவுஸி அவர்களினால் சம்மேளனத்தின் உருவாக்கம், அதன் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பவற்றை தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் சிறப்பாக விவரித்தார். பின்னர் இக்கூட்டத்தை சிறப்பிக்க வந்திருந்த நிட்டம்புவ, வீரங்கொல்ல போலிஸ் அதிகாரிகளின் உரை இடப்பெற்றன. இந்த முயற்சியைப் பாரட்டிப்பேசிய அதிகாரி ஓருவர் ஏன் சமூகமளித்த மக்களின் தொகை மிககுறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டத் தவரவில்லை. குறிப்பாக வீரங்கொல்லையில் இருந்து வந்திருந்த பொலிஸ் அதிகாரி அவரது உரையை அவர் மிகவும் இஸ்லாத்துக்கு பரீட்சயமானவரைப் போன்று எமது வரலாரையும் குர்ஆனையும் தொட்டுப் பேசியதை வருகை தந்திருந்த ஊர்மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்ததை அவதானிக்க்கூடியதாக இருந்தது.

அதனைத்தோடர்ந்து எமது ஊரைப்பிரப்பிடமாகவும், ஆரப்பக்கல்வியை எமது பாடசாலையில் பயின்று இப்போது கம்பஹா மாவட்ட தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கின்ற மொஹமட் (நளீமி) அவர்களின் உரை இடப்பெற்றது. அவர் எமது ஊரின் ஆரம்பகால நிலமைகளையும் இப்பொழுது எமது மக்களிடையேயுள்ள மார்க்கரீதியான பிளவுகளையும் சுட்டிக்காட்டிய அதேவேளை மார்க்கரீதியான ஓருசில விடயங்களுக்காக பள்ளிவாசல்களின் பிரிவுகளையும் நியாயப்படித்தியதோடு  இந்தபிரிவுகள் எமது மாணவர்களை ஒழுக்கவீழ்சியில் தடம்புரல வழியமைக்கக் கூடாது. முக்கியமாக இவ்வாறான விடயங்களில் மாத்திரமாவது ஒன்றினைந்து “வேற்றுமையில் ஒற்றுமைகான்போம்” என்றகருத்துப்படபேசினார்.

பள்ளிவாசல் சம்மேளனம் மக்களின் எதிர்பார்பை மனக்கோட்டையாக்கிட கூடாது!
எமது ஊரின் ஒழுக்கமும் கல்விமேம்பாடும் வெரும் பேச்சுப்பொருளாக காணப்படுகின்றன. எமது சமூகத்தின் உறுப்புக்களை ஒன்றுசேர்பது தவளை நிறுக்கும் கதை என்று கூறப்படுகின்றது.

ஆனால், எமது பள்ளிவாசல் சம்மேளனம் அதனைப் பொய்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இருப்பினும் ஒழுக்கம், கல்விமேம்பாடு ஆகிய இரு கருப்பொருள்களை மையாமாகவைத்து உருவாகிய இச்சம்மேளனம் அதனை வெறும் பேச்சிலேயே இன்னும் இழுத்தடித்து வருகின்றது. இத்தனை மாதங்களாகியும் எந்தச் செயற்பாட்டையும் காணவில்லை.

நேற்று அல்பத்ரியாவில் இடம்பெற்ற இச்சம்மேலனத்தின் அங்குரார்பனக் கூட்டத்திலும் பேச்சைத் தவிரவேறு எந்த செயற்பாடுகளும் காணப்படவில்லை. இக்கூட்டத்தில் சம்மேலனத்தின் திட்டங்கள், மற்றும் அதன் செயற்பாடுகள் என்பவற்றை தெழிவுபடுத்தி மக்களிடம் அதற்கான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பார்கள் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், யாப்பு இன்றும் எழுத்தில் இருப்பாதாக கூறப்பட்டது. அப்படியானால் நேற்றைய கூட்டம் எதற்கு என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது?

அனைத்துப் பள்ளிவாசல்களும் ஒன்று சேர்ந்தமையை சகல மக்களும் உள்ளுர வரவேற்கின்றனர். இதில் சந்தேகமில்லை. இந்த வரவேற்பு குறித்தேபசி நேரத்தைக் கழிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நேற்றைய கூட்டத்தில் ஒரு பொதுமகன் பாடசாலைக்கு அருகாமையில் நடக்கின்ற குற்றச்செயலைக் கூறி கவலைப்பட்டார். இச்சம்மேளனம் எதனையாவது செய்யும் என்ற எதிர்பார்ப்புதான் அந்த பொதுமகனின் கருத்துக்கு அர்த்தமாக கானப்பட்டது. தொடர்ந்தும் இச்சம்மேளனம் பேச்சிலேயே காலத்தை இழுத்தடித்தால் இச்சம்மேளனத்தின் மீது வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்பும் மன்கோட்டையாகிவிடும் என்பது ஊர் மக்களின் கருத்தது.

8 comments:

ஊரான் said...

இன்ஷா அல்லாஹ் பொருத்திருந்து பார்ப்போம். வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ளார்கள். தவ்ஹீத் பள்ளியும் அஜஸ்ட் பண்ண பழகிட்டாங்க போல. இத எப்பவோ செய்திருந்தா ஊா் முன்னேறியிருக்கும். காலம் கடந்து ஞானம் என்று இதைத்தான் சொல்வார்கள்....

தேடல் said...

இதே ஆக்கம் kahatowitainfo.tk என்ற தளத்திலும் உள்ளது. நீங்கள் கொப்பி அடிக்கிறீங்களா அல்லது அவா்கள் கொப்பி அடிக்கிறீர்களா?

BlogEditor said...

ஒரு வெப்தளத்தை நடத்தும் போது குறைந்தது ஓரிரு வாங்கியங்களாவது எழுதத்தெரிந்திருக்க வேண்டும் அல்லது மற்றையவர்கள் தகவல்களை எழுதும்வரை காத்திருக்கவேண்டும் கொபி,பேஸ்ட் பன்னுவதற்காக.. எப்படியிருப்பினும் இந்ததகவல்கள் ஊர்மக்களை சென்றடைகின்றன என்பதில் எமக்குத் திருப்தியே.....
சுட்டிக்காட்டிய ”தேடல் சகோதரருக்கு ஜதா.. ஹைரா.

Anonymous said...

ஹெய் ஊரான் இதற்குத்தான் கொமண்டெழுதும் முன்பு நன்றாக வாசிக்கவேண்டும். இந்த வசனத்தை மீண்டும ஒரு முறைகொஞ்சம் வாசிச்சிட்டு கருத்த எழுதுங்கபாப்போம்

””அதேவேளை மார்க்கரீதியான ஓருசில விடயங்களுக்காக பள்ளிவாசல்களின் பிரிவுகளையும் நியாயப்படித்தியதோடு““

அவரே இந்த பிரிவுகளை நியாயப்படுத்தியுள்ளார் ஏனென்றால் அவர் உங்களைவிட மார்க்கத்தை நன்றாக அறிந்தவர், எந்த எந்தவிடயங்கள் மார்க்கமென்றபெயரால் நரகத்திற்கு அழைத்துச்செல்லும் என்று அவருங்கு உங்களைவிட நன்றாக தெரிந்திருக்கவேண்டும் அதனால் தானோ என்னவே அவர் அப்படிக் கூறியிருப்பார். (அல்லாஹ் அறிந்தவன்)

ஊரான் said...

அப்போ இந்தப்பள்ளியத் தவிர மற்ற எல்லாப் பள்ளிகளும் நரகம் என்று சொல்ல வருகிறீர்களா..?

Anonymous said...

ஊரான் யாரிடம் இந்தக்கேள்வியைக் கேட்கிரீர்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. உரைநிகழ்தியவரிடமா? அல்லது இந்த ஆக்கத்தை எழுதியவிரிடமா? அல்லது உண்மையில் இன்னும் இதைவாசிக்கவே இல்லையா?

brother said...

அஸ்ஸலாமு அழைக்கும் ,

இந்த பள்ளிகளுக்கு இடையிலான ஒன்றிணைந்த அமைப்பு ஒஉர் சிறந்த முன்னேற்றத்தை அளிக்கும் என்று நான் நிகைக்கிறேன்,

அதோடு இந்த அமைப்பு வெறுமனே பேச்சுவார்த்தைகளில் மட்டுமே கடந்த காலத்தை களித்தது, இனியாவது நடைமுரய்யிலான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கிறேன் அவ்வாறு நடைபுரய்யிலான நன்மைகளை பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றாய் இருந்து செயற்படுவோம் இன்ஷா அல்லாஹ்.

Anonymous said...

மார்க்கம் என்பத அப்பன் பாட்டன் சொத்தல்ல. இந்ப்பள்ளி சொர்க்கம் இந்தப்பள்ளி நரகம் என்று தீர்ப்புக் கொடுப்பது யாருடைய வேலையுமல்ல. ஆல்லாஹ்வும் அவனது தூதரும் மர்க்கம் என்று சொன்னது எது என்பதைத் தேடிப்படிப்பது ஒவ்வொருவரினதும் கடமை. அதை விட்டு விட்டு எவர்களோ உருவாக்கியவைகழைள தலையில் வைத்தக் கொண்ட கொண்டாடுவதால் எந்தப்பயனும் இல்லை. அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொள்பவனுக்கு இஸ்லாத்தின் போதனைகள் என்ன என்பதைத் தேடி அதன்படி வாழ்வதே சிறந்த வழி. அதை விடுத்து விட்டு ஒவ்வொருவரின் பின்னால் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லலை

Post a Comment