கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ரமழானை வரவேற்போம்/பயன்படுத்துவோம்.

நேற்றைய தினம் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து மௌலவி ஹஸன் பாரிஸ் அவர்களினால் கஹடோவிட தௌஹீத் பள்ளியில் ஆற்றப்பட்ட உரை

நன்றி http://www.abuhafee.blogspot.com/

வருடா வருடம் எம்மைத் தரிசித்துச் செல்லும் விருந்தாளியே ரமழான் ஆகும். அது இவ்வருடமும் எம்மைத் தரிசித்துள்ளது. இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்று சாதாரணமாக எம்மைக் கடந்து செல்ல முடியாது. அதற்கு நாம் அனுமதிக்கவும் கூடாது. இது நன்மைக்குரிய மாதம், அருளுக்குரிய மாதம், இறைத்திருப்திக்கான மாதம், கண்ணியமான மாதம், சங்கைக்குரய மாதம், தௌபாவின் மாதம், அல்லாஹ்வை நெருங்குவதற்கான மாதம், நோன்பின் மாதம், இரவுத் தொழுகையின் மாதம், வணக்கத்தின் மாதம், அல்குர்ஆனின் மாதம், பாவமன்னிப்பின் மாதமுமாகும். இதற்குச் சிறப்பே இதில் அல்குர்ஆன் இறங்கியதனாலே ஆகும். “ரமழான் மாதம் எத்தகையதெனில் மக்களுக்கு நேர்வழிகாட்டியாக சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துத் தெளிவுபடுத்தக்கூடியதுமான அல்குர்ஆன் இதில்தான் இறக்கியருளப்பட்டது. எனவே, உங்களில் யார் அதையடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்”


(அல்பகரா-185)



நபியவர்கள் இம்மாதத்தில் 03 சந்தர்ப்பங்களை எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

1। “யார் ரமழானில் ஈமானோடும் கூலியை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்”

2. “யார் ரமழானில் ஈமானோடும் கூலியை எதிர்பார்த்தும் நின்று வணங்குகின்றாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்”

3. “யார் லைலதுல் கத்ர் இரவில் ஈமானோடும் கூலியை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்”



இம்மாதத்தை அடைந்த ஒருவன் தான் சந்திக்கும் இறுதி ரமழானாக இதை நோக்கி வணக்கங்களை அதிகரிக்க வேண்டும். இம்மாதத்தில் அல்லாஹ் ஒரு செயலுக்குரிய கூலியை பண்மடங்ககாக்கி அதை 700 மடங்காக்கித் தருவதற்குத் தயாராக உள்ளான். தினமும் தன் அடியார்களை நரகவிடுதலை செய்கின்றான். நன்மைகளை அள்ளிக் கொடுக்கின்றான், நன்மை செய்யும் உள்ளத்தை ஊக்கப்படுத்துகின்றான். தீமை செய்யும் உள்ளத்தை கண்டிக்கின்றான். இத்தனை சிறப்புக்களைக் கொண்ட இம்மாதத்தில் நாம் இறை மன்னிப்பைப் பெறாவிட்டால் நரகில் இருந்து விடுதலை பெறாவிட்டால் நிச்சயமாக எம்மை விடவும் பாக்கியம் கெட்டவர்கள் வேறு யாராவும் இருக்க முடியாது. சுவனத்தின் கதவு திறக்கப்பட்டு நரகின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு நன்மைகளை மாத்திரம் செய்வதற்கான சூழல் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கும் போது நாம் இம்மாதத்தை இலகுவாகக் கருதவே முடியாது. ரமழானில் நாம் பெறும் பயிற்சி எமது முழுவாழ்விலும் பயனளிக்க வேண்டும். ரமழானில் வணங்கும் சமூகமாகவன்றி ரப்பை வணங்கும் சமூகமாக மாறவேண்டும். வேலைகளைக் குறைத்து, வணக்கங்களை அதிகரித்து, நோன்பு நோற்று, இரவு வணக்கம் புரிந்து, அல்குர்ஆனோடு நெருங்கி உறவாடி அதனை ஓதி சிந்தித்து நடைமுறைப்படுத்தி பிறருக்கு எடுத்துச் சொல்லி இறைவனைச் சார்ந்த சமூகமாக மாற முயற்சிப்போம். நோன்பும் அல்குர்ஆனும் மறுமையில் சிபாரிசு செய்யும் கூட்டத்தில் அங்கத்துவம் பெறுவோம். அநியாயங்களிலிருந்து ஒதிங்கிக்கொள்வோம். மன்னிக்கும் உணர்வை ஏற்படுத்திக் கொள்வோம். எமக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள உறவை வலுப்படுத்திக் கொள்வோம். உண்மையான இறையச்சவான்களாக மாறுவதற்கும் இம்மாதத்தை முழுமையாகவும் யாதார்த்தமாகவும் ஆன்மீகரீதியாகவும் வணக்கங்களால் அலங்கரிப்பதற்குரிய வாய்ப்பை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ஏற்படுத்தித் தருவானாக!

1 comments:

Anonymous said...

சிறந்த பதிவு. இன்று பலர் அன்னிய மதத்தைப் போல் ஊர்வலம் சென்று றமழானை வரவேற்கும் காட்சிகளையும் நாம் காண்கிறோம்

Post a Comment