கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது கிராமம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து பேய்திகொண்டிருக்கும் மழையினால் அத்தனகல்ல ஆறு பெருக்கெடுத்துள்ளதனால் கஹடோவிட்ட கிராமத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. சில வீடுகள், கடைகள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருப்பதுடன் இன்னும் பல இடங்கள் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்தும் மழைபெய்துகொண்டிருப்பதால்...

கே.பி.எல் - இறுதிப் போட்டியில் கமத்தை அணி கிண்ணத்தை சுவீகரிப்பு

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட கே.பி.எல் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் 8அணிகள் பங்குபற்றியமை முன்னர் பிரசுரித்திருந்தோம். 3 நாட்களாக நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் கமத்தை அணியும் குரவலான அணியும் இறுதிப் போட்டியில் மோதி  கமத்தை அணி வெற்றி பெற்றது. கடும் மழைக்கு...

கஹடோவிட இளைஞர்கள் சமூக சேவைக் களத்தில்

கடந்த 2009 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவா்களின் வகுப்பினால் கஹட்டோவிடப் பிரதேசத்தில் சமூக சேவைப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. முதல் கட்டமாக இவா்கள் கடந்த பெருநாள் தினத்தன்று வசதியற்ற 22 ஏழைகளிற்கு உணவுப் பொதிகள் வழங்கியதாக அறிய...

கஹட்டோவிட பிரிமிய லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி 2012

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கஹட்டோவிடாவில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எட்டு அணிகள் பங்கு பற்றும் இச்சுற்றுப் போட்டி நிகழ்வு 27.10.2012 ஆம் திகதியாகிய நேற்று கமராகல்லை மைதானத்தில் வெகு விமா்சையாக ஆரம்பிக்கப்பட்டது. கஹட்டோவிட பிரிமிய...

அநுராதபுரம் மஸ்ஜித் தீவைப்பு

அநுராதபுரம் நகரில் மல்வத்து ஒழுங்கையில் அமைந்துள்ள தக்கியா மஸ்ஜித் ஒன்று இன்று அதிகாலை தீமூட்டப்பட்டுள்ளது. ஐம்பது பேர் வரை தொழுகை நிறைவேற்றக் கூடியதாக அமைக்கப்பட்டிருந்த நீண்ட காலமாக இயங்கிவரும் குறித்த -தக்கியா -மஸ்ஜித்தே தீமூட்டப்பட்டுள்ளது. புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான...

கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் ஏற்பாட்டில் ஈத் பெருநாள் திடல் தொழுகை

கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் வழமைபோன்று இம்முறையும் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை அல்பத்ரியா ம.வி மைதானத்தில் நடைபெற்றது. கடந்த நோன்புப் பெருநாளைப் விடவும் அதிகமான மக்கள் தொகையினர் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. பெருநாள் தொழுகையின் பின்னர்...

கஹட்டாவிட கிளினிக்கின் ஏற்பாட்டில் தாய்மார்களுக்கான உளவள ஆலோசனை நிகழ்ச்சி

கா்பினித் தாய்மார்களுக்கும் ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார்களிற்கும் ஓர் உளவள ஆலோசனை வழங்கும் நிகழ்வொன்றை கஹட்டோவிட தாய் சேய் பராமரிப்பு நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சகோதரா் ஹிமாஸ் அவா்களின் பாமஸி அமையப் பெற்றிருக்கும் கட்டிடத்தின்  மேல் மாடி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஒழுங்குகள்...

ஓகொடபொலவில் மினிசூறாவளி

கஹடோவிடா மற்றும் அதற்கு அண்மையிலுள்ள சில கிராமங்களை நெற்று மாலை 4 . 30 மணி முதல் தொடர்ச்சியாக 30 நிமிடங்களுக்கும் மேலாக பெருமழையுடன் கூடிய கடும் கற்று வீசியதனால் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இந்த மினிசூறாவளியினால் ஓகொடபொல கிராமத்தில் முயின்...

சவூதியில் உள்ளத்தை உருக்கிய சம்பவம்..............!!

சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார்.இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம்...

கஹட்டோவிடாவில் இம்முறையும் கூட்டுக் குர்பானி

கடந்த வருடங்களைப் போல் இம்முறையும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் கூட்டாக குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை கஹட்டோவிட பள்ளிவாசல்கள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகையில் முஹியத்தீன் பள்ளிவாசலும் மஸ்ஜிதுன் நுர் பள்ளி வாசலும் இணைந்து கூட்டாகக் குர்பானி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. வழமைபோல் தஃவாப் பள்ளிவாசலிலும்...

கஹடோவிட ஸாவியா வீதி புணரமைப்பு

    கஹட்டோவிட பிரதான சந்தியிலிருந்து ஸாவியா நோக்கி வரும் பாதை  திருத்தற் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் நா ஸர் அவா்களின் வேண்டுகோளிற்கிணங்க அமைச்சா் ஸரன குணவா்தன அவா்களின் நிதி ஒதுக்கீட்டில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

ஊா் முன்னேற்றத்தில் பிரதேச சபை உறுப்பினர் நஜீம் நாநாவின் முயற்சிகள்

கடந்த பிரதேச சபைத் தோ்தலில் ஐ.தே.கட்சி சார்பாகப் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சகோதரர் ஏழைகளின் தோழன் நஜீம் நாநா ஊா்முன்னேற்றத்தில் அக்கரையுடன் ஈடுபடுவதாக அறியக் கிடைக்கின்றது. கடந்த 01.10.2012ஆம் திகதி நஜீம் நாநாவின் வேண்டுகோளுக்கிணங்க அசித்த மானப் பெருமாவின்...

எமது ஊர்பாடசாலைகளில் 12 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

இம்முறை வெளியான ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் கம்பஹா மாவட்டத்தில் கஹடோவிட அல்பத்ரியா ம.வி மாணவன் 187 புள்ளிகளை ஏடுத்து தமிழ் மொழி மூலத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேவேளை கஹடோவிட பாலிகா மகளிர் பாடசாலையில் அதிகூடியபுள்ளியாக 185 புள்ளி  மாணவி ஒருவராலும்...

தம்புள்ளைப் பள்ளிவாசல் தொடர்பாக மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல்– ஜமாஅத்தே இஸ்லாமி

தம்புள்ளைப் பள்ளிவாசல் அரசின் வாக்குறுதிப்படி பாதுகாக்கப்படு மென்றிருந்த நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 65 கட்டிடங்களை அகற்றுமாறு நகர அதிகார சபை அனுப்பிய கடிதம் மீண்டும் முஸ்லிம் சமூகத்தில் கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடகப் பேச்சாளர் எம்.எச்.எம். ஹஸன்...