கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட முஸ்லிம் பாலிகாவிற்கான காணி கொள்வனவுக்கான நிதி சேகரிப்புப் பணிகள் ஆரம்பம்! ஆரம்ப நிகழ்வில் தன் தங்க மாலையை வழங்கி ஒரு தாய் முன்மாதிரி.

24.08.2010அன்று கஹட்டோவிட முஸ்லிம் பாலிகாவின் விசேட கூட்டம் வித்தியாலய அதிபர் உடையார் தலைமையில் நடைபெற்றது. தற்போது பாடசாலை குறிப்பிடத்தக்க சில வசதிகளை பெற்றிருந்தாலும் தொடர்ந்து வருகின்ற மாணவிகளின் வசதிக்காகவும் கேட்போர் கூடம், நூல்நிலையம், கணிணி அறை மற்றும் ஆய்வு கூடம் என்பனவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் ஏற்ற வகையில் மூன்று மாடிக் கட்டிடமொன்றை கட்டுவதற்கான முயற்சியில் பாடசாலை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான நிதியை மேல்மாகாண முதலமைச்சர் இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு முன்வந்துள்ள நிலையில் மேற்படி கட்டிடத்ததை நிர்மாணிப்பதற்கான காணியின் அவசியம் தீவிரமாக உணரப்பட்டதாலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. விடுமுறை நாள் என்பதாலும் றமழான் காலம் என்பதாலும் இக்கூட்டத்திற்கு பெற்றோர் திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் வருகை தந்தோரின் தொகை மிகவும் குறைவாகவே இருந்தது. இருப்பினும் இக்கூட்டம் நம்பிக்கையூட்டும் வகையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் தேவை குறித்து பல கோணங்களில் உணர்வு பூர்வமாக மௌலவி முஜீப் உரையாற்றியதைத் தொடர்ந்து ஒரு தாய் தனது தங்க மாலையை வழங்கி நிதி சேகரிப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை ஏற்படுத்தினார். அத்துடன் பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது ஒரு மாதத்துக்குரிய சம்பளப் பணத்தை இப்பணிக்காக வழங்கியமையும் மற்றொரு முன்மாதிரியாகும். மொத்தமாக 30பேரளவில் கலந்து கொண்ட இந்த ஆரம்பக் கூட்டத்தில் சுமார் 50,000 ரூபா சேகரிக்கப்பட்டமை விசேடமாக குறிப்பிடல் வேண்டும்.
மேற்படி காணிக் கொள்வனவிற்காக சுமார் பத்து இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. இதில் அயலவரான செய்க் றிஸ்வானுர் ரஹீம் அவர்கள் பாடசாலையின் சில நிலப்பகுதிகள் தனது வீட்டு வளவுக்குள் வந்திருப்பதற்குப் பதிலாக வழங்கும் ரூபா மூன்று இலட்சம் கையிருப்பில் இருப்பதாகவும் மீதி ஏழு இலட்சத்தையும் பெற்றோர் மற்றும் பரோபகாரிகளின் உதவியால் திரட்டுவதாகவும் இதற்கான நிதி சேகரிப்புக்குழு தீர்மாணித்துள்ளது.
நன்மைகள் அள்ளி வழங்கப்படுகின்ற இந்த றமழானில் எமது பெண்களின் கல்விக்காக வாரி வழங்க வேண்டும் என்பது எமதும் எதிர்பார்ப்பாகும்.



   

7 comments:

அப்துல் said...

நல்ல முன்மாதிரி அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக அந்த தாய்க்கும், ஆசிரியரக்கும்.

Anonymous said...

if her husband knows,,,,,?

என்னைக் கவர்ந்தவை said...

allhamthullah

Anonymous said...

மாசா அல்லாஹ். எமது ஊரில் கல்விக் கண் திறந்துள்ளது என்பதனை இது காட்டுகிறது. எல்லாத் தாய்மார்களும் இவ்வாறு தங்களால் முடிந்த உதிவகளைச் செய்தால் பாடசாலை நிச்சயம் முன்னேறும்.மட்டுமின்றி பெண்கள் தமக்குறிய ஒழுக்கங்களோடு கல்வியை கற்கவேண்டும். அது மட்டுமின்றி இந்நிகழ்விலி் ஒரு பெண் தங்க மாலையை அன்பளிப்புச் செய்ததுபோல், இன்னுமொரு பெண் தனது காதணியைக் கழட்டிக் கொடுத்தார். இதனையும் தங்களது கட்டுரையில் சோ்திருக்கலாம். மேலும் பாடசாலையில் கலப்பின்றிக் கற்றாலும் டியுசன் வகுப்புக்களில் கலப்புக் கல்வி இருப்பது பாரிய அச்சுறுத்தலாகும். இதற்கும் ஒரு உரிய தீர்வை எமது ஊரின் படித்த சமூகம் சிந்தித்து மாற்றீடுகளை செய்தால் சிறந்ததாக இருக்கும். அல்லாஹ் நம்மைப் பொருந்திக் கொள்வானாக......!

Anonymous said...

அழைக்கும்,
உண்மையில் நல்ல ஒரு திருப்பம். ஆண் பெண் கலப்பின்றி பாடசாலைகள் அமைவது 75 % மான ஒழுக்க சீர்கேட்டை குறைக்கும். அதோடு எமது முஸ்லிம் மாணவர்கள் படிக்கின்ற கல்வித்திட்டம் (ஆங்கில கலாச்சார மயமாக்கல் )அதிலும் குறிப்பாக தமிழ் பாடத்தில் வரக்கூடிய காதல் கதைகள், அவற்றை மனனமிடுதல், ஆண் பெண் ஆகியோரை வர்ணித்தல் போன்ற கல்வித்திட்டங்களில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்திசய்யமுடியுமாக இருந்ததால் 100 % மான கல்வியிநூடன மாணவர்கள் மத்தியிலான் ஒழுக்க முன்னேற்றத்தை காணமுடியும் என்று நான் நினைக்கிறேன் அதோடு இவ்வாறான காதல் கதைகளை படிப்பது , மனனமிடுவது போன்றவற்றுக்கான மார்க்கரீதியான தீர்ப்பும் சந்தேகமாகவே உள்ளது.

ஏனென்றால் தட்போதையா காலத்தில் பாடசாலைக்கு சென்றுதான் ஆண், பெண் மாணவர்களுக்கு இடையிலான தொடர்பு ஏற்படுகின்றது என்று சொல்லமுடியாது, மொபைல் போன் போன்ற தொடர்புஷாதனங்களின் மூலமாகவும் தொடர்புகள் ஏற்படுகின்றது எமக்கு தெரியும்.

எது எவ்வாறோ ஆண், பெண் கலப்பின்றி படிக்கின்ற பாடசாலைகளின் உருவாக்கம் குறிப்பாக எமது ஊருக்கு நன்மையினை கொன்று வந்து சேர்க்கும். அதோடு முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான ஒரு கல்வித்திட்டத்தின் அவசியம் உருவாகியுள்ளது.

Anonymous said...

Tawheed palleil nikalchi nadkakkuzu. azuvum manwar nikalchi. azaum podavum

Anonymous said...

எதிர்வினைகள்:
பாகிஸ்தான் வெள்ள நிவாரண குழுவில் எமது மண்ணின் மைந்தன்
இருபது மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை அகதிகளாக்கிய பகிஸ்தான் வெள்ளத்தை மறந்திருக்க மாட்டீர்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று 03.09.2010 இல் பாகிஸ்தான் பயணமாகவுள்ளது. அரச அங்கீகாரத்துடன் செல்லவுள்ள இக்குழுவில், எமது ஊரைச் சேர்ந்த யூனானி வைத்தியரான M.S.M. பாயிக் (BUMS) அவர்களும் அங்கம் வகிக்கிறார்.

அல்லலுறும் எமது சகோதரர்களின் துயர் துடைப்பதில் எமது ஊரை பிரதிநிதிப்படுத்தும் அவருக்கு எமது வாழ்த்துக்கள்!

Post a Comment