கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கிளின் கருத்துக் கணிப்பீடு

எமதூரிலுள்ள பெண்களின் கல்வி, மற்றும் திறன் விருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கில் என்ற அமைப்பு தனது ஐந்தாவது வயதில் பல முன்னேற்ற ப்படிகளைக் கடந்து கொண்டுள்ளது. தான் கடந்த வந்த பாதையை திரும்பிப் பார்த்து மீளாய்வு செய்து தனது எதிர்கால பயணத்தைத் திட்டமிடும் நோக்கில் ஒரு கலந்துரையாடலை நடாத்தப் போவதாகத்...

பிரீமியர் லீக் இறுதிப்போட்டிக்கு திஹாரிய யூத் தகுதி.

திஹாரிய யூத் கலந்துகொண்ட பிரீமியர் லீக் உதைபந்தாட்ட அரையிறுதிப் போட்டி இன்று மன்னார் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மன்னார் St.Luicios விளையட்டுக்கழகத்தை வெற்றிகொண்டது. இன்றைய போட்டி ஆரம்பித்ததிலிருந்து மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. குறித்த கால எல்லை முடிவடையும் தருவாயில்...

இஸ்லாத்தை தழுவிய ஒரு பெண் வைத்தியரின் வாக்குமூலம்.

ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக – பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும்...

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரர் அப்துல் பாரி அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் கொச்சிவத்தையைச் சேர்ந்த பாதிமா நிலூபா அவர்களின் கணவரும் மற்றும் முஹம்மட் இன்ஸாப், பாதிமா நாதியா, பாதிமா இல்மா ஆகியோரின் தந்தையும் ஆவார்.  அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 09-12- 2011 மாலை 05.30 மணியளவில் முஹியத்தீன்...

சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயர் மாற்றப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹூஸைன் கிராமத்தை ஈராக் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து சதாம் ஹூஸைன் கிராம மக்கள் வீதியிலிறங்கி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சதாம் ஹூஸைன் கிராமத்திலுள்ள அல் மஜ்ஜிதுல்...

தூய இஸ்லாத்தை சுமக்கவந்த எமது மௌலவிமார்களின் நிலை?

சாயிபாபாவின் ஜனன தினம் சாயி பக்தர்களால் வெகு சிறப்பாகக் கொழும்பு சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை நமது இஸ்லாமிய அறிஞர் மௌலவி மொஹமட் அரபாத் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை நி்ங்களும் பார்க்கலாமே!!!!!!!!!!! தூய இஸ்லாத்தை படித்த இந்த மௌலவிமார்களின்...

2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் சாரம்சம்

* நடமாடும் மொழி ஆய்வுக்கூடங்களை உருவாக்க 100 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு * பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் 750 ரூபா கொடுப்பனவு * 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவு 700 ரூபாவால் அதிகரிப்பு * சமுர்தி கொடுப்பனவு 210 ரூபா முதல் 615 ரூபா வரை பெறுவோருக்கு 750 ஆக அதிகரிப்பு – 900 ரூபா பெறுவோருக்கு 1200 ஆக அதிகரிப்பு *...

நழுவிச் செல்லும் அரசாங்க உதவிகள்.

எமது பிரதேசத்தில் உள்ள அதிகமான பாடசாலைகள் அரசாங்க உதவிகளையும், பொது நிறுவனங்களின் உதவிகளையும் எதிர்பார்த்து இருக்கின்ற இந்த வேலையில். அல்பத்ரியா ம.வி மற்றும் பாலிகா மகளிர் பாடசாலைக்கு மலசலகூ கட்டமைப்பை கட்டுவதற்காக அரசாங்கத்தினால் பண உதவி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறுகிடைக்கப் பெற்ற...

கஹட்டோவிடாவும் இவ்வாறு மாறுமா...?

இறுதி ஹஜ்ஜில் நபியவர்கள் மூலம் அல்லாஹுத்தஆலா புனித தீனுள் இஸ்லாத்தை நிறைவு செய்து அதனை ஒரு வாழ்க்கைத் திட்டமாக ஆக்கினான். நபியவர்களின் மறைவிற்குப் பிறகு இந்த மார்க்கத்தில் பல்வேறு பித்அத்துக்கள் புகுந்து இஸ்லாத்தின் தூய தண்மையை மாற்றி விட்டது என்பதை நாம் வரலாறுகள் மூலம் அறிகிறோம். அந்த வகையில் புகுந்த ஒரு பித்அத்துதான் தரீகாக்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட...

EID MUBARAK

THAKABBALALLAHU MINNA WA MINKUM கஹட்டோவிட மஸ்ஜித் ஜாமிஉத் தௌஹீதினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை காலை 7.25மணியளவில் கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப்பெருநாள் தொழுகையில்  இமாம் அஷ்ஷெக் முஜாஹித்  அவர்கள்...

மர்வானையும் தட்டிக் கேட்ட ஸஈத் அல் குதிரிகள் எமது ஊரிலும் தேவை

ஆட்சியாளர் மர்வான் ஒரு முறை பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகைக்கு முன்னதாக பெருநாள் குத்பாவை ஒத முற்பட்டார். அவ்வேளை அச்சபையில் இருந்த ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் மர்வானின் ஆடையைப் பிடித்திழுத்து நீ ஸுன்னாவை மாற்ற முற்படுகிறீரா என்று கேட்டு மர்வானின் இச்செய்கையைக் கண்டித்தார். மார்க்கத்தில் பித்அத் ஒன்று அரங்கேறுவதை உடனே தட்டிக் கேட்டார். பெருநாள்...

கஹட்டோவிட அல் பத்ரியாவில் மௌலவி நவ்பர்; கபூரியின் உரை

கடந்த வாரம் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்தில் மௌலவி எஸ்.எச்.எம் நவ்பர் கபூரி அவர்களின் ஒரு விசேட உரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வுரையில் மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியத்தையும் அதன் மாhக்க ரீதியான நிலைப்பாட்டையும் குறிப்பிட்டுக் காட்டியதுடன் ஆசிரியர்கள் எவ்வாறு...

கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…

உலகை ஆச்சரியமடைய வைத்த புரட்சியாளராக மாறி கடைசியில் மக்கள் கோபத்தால் மரணத்தை சந்தித்த தலைவர்தாம் மக்ரிப் தேசமான லிபியாவை 42 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த கடாஃபி. வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து 1951-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறிய லிபியாவின் எண்ணெய் வளங்களை மேற்கத்திய நாடுகள் கொள்ளையடித்த...

தோ்தல் ஆணையாளருக்கு அனுப்ப முன் அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்ட ஐனாதிபதி தேர்தல் முடிவுகள் : வீக்கிலீக்ஸ்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்ப முன்னதாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டிருந்ததாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்துள்ள கேபிள் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அம்பாறை, அனுராதபுரம்,...

கஹட்டோவிடாவின் பாதுகாப்பு சம்பந்தான விசேட கூட்டம்

எமதூரின் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு விசேட கூட்டம் 25.09.2011ஆம் திகதி காலை 9.30மணிக்கு கஹட்டோவிட அல்பந்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் எமதூரின் பாதுகாப்பு சம்பந்தமான கல்நதுரையாடல் நடைபெறவுள்ளதால் ஊரின் நலன் விரும்பிகள் அனைவரும் இதில் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்....

2011 ஆம் ஆண்டு கஹட்டோவிட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து விட்டன.எமது ஊரைப் பொருத்தவரை, அல் பத்ரியா பாடசாலையைச் சேர்ந்த 03 மாணவர்களும், பாலிகா பாடசாலையைச் சேர்ந்த 05 மாணவிகளுமாக மொத்தம் 08 மாணவ மணிகள் இம்முறையும் எமது ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மண்ணின்...

தனது அண்ணனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு பகிரங்க பிரம்படித் தண்டனை!

கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது அண்ணன் முறையான நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவர் பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது. திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

கஹட்டோவிட சந்தியில் வீதி விபத்து.

கஹட்டோவிட பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் நேற்று 07.09.2011 அன்று ஒரு காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரின் கால் முறிந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. காரினை செலுத்தியவர் எமது ஊரில் பிரபல்யமான வைத்தியரான டொக்டர் சஞ்சீவ ஆவர். விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும்...

தீமைகளிற்குப் பன்னீர் தெளிக்கும் பெருநாள் கொண்டாட்டம்

30 நாட்கள் நோன்பு நோற்ற நாம் அதன் பயனை அடைந்து விட்டோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவிதமாக பல நிகழ்வுகள் நடந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. நோன்பின் நோக்கமே இறையச்சம்தான் என்று அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். இவ்விறையச்சம் பெருநாள் தினத்துடன் செல்லுபடியற்றியதாக மாறிய...

أسلام عليكم ورحمة الله وبركاته

أسلام عليكم ورحمة الله وبركاتهأهنئكم بأطيب التهاني والتبريكات بمناسبة عيد الفطر السعيد. تقبل الله منا ومنكم صالح الأعمال. وكل عام وأنتم بخير...EID MUBARAKTHAKABBALALLAHU MINNA WA MINKUM............................................................................................................கஹட்டோவிட...

யாருக்குப் பெருநாள்?

- உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை. - பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை. - காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை. - புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை. இவருக்குத்தான் இனிய பெருநாள்...! - தன் ஆணவத்தை அடக்கி - அலட்சியப் போக்கை அழித்து...

கஹடோவிட பாலிகாவில் சிங்கள சகோதார்களுடனான இப்தார் நிகழ்வும் கலந்துரையாடலும்

கஹட்டோவிட கல்வி வட்டத்தினால் 3வது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்கள சகோதார்களுடனான இப்தார் நிகழ்வு இன்று 22.08.2011 ஆம் திகதி கஹட்டோவிட பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்லாமும் நோன்பும் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட வறக்காப்பொளையைச் சேர்ந்த சகோதரர் முனாஸ்...

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரர் ஸைனுல் ஆப்தீன் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் பரீதா அவர்களின் கணவரும் மற்றும் பருஜ், பராஸ், ஜவ்ஸான், ஜவாத் ஜஸீம் ஆகியோரின் தகப்பனும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (22. 08 . 2011) காலை   11.00 மணியளவில் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயில் மையவாடியில்...

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட 17வயது தமிழ்யுவதி

இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன் - அல்குர்ஆன் நாம் அல்லாஹ்விடம் கேட்கின்ற துஆக்களில் இந்தசகோதரியின்வேண்டுகொளையும் சேர்த்துக்கொள்வோம். You all! please make du'a for my mother and my brother that they should embrace islaam. If you have any friends give Da'wah to them. Be firm with...

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி

ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர். பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ தொலைவில் உள்ள குத் நகரில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர். இதையடுத்து நஜாப், பக்குவுபா,...

றிஸானாவின் விடுதலைக்காகப் பிரார்த்திப்போம்!

சவூதியில் குற்றவாளியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஸானா நபீக் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக றிஸானா நபீக்கின் தாயார் தெரிவித்துள்ளார். அதேவேளை இவரது விடுதலை தொடர்பாகப் பேச அரச உயர் மட்ட தூதுக்குழு சவூதி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. றிஸானா நபீக்கின் விடுதலைக்காக செயற்பட்டு வரும் திருகோணமலைமாவட்ட மக்கள் மன்ற பிரதிநிதி ஜிஹாஜ் றிஸானாவின்...

ரமலான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்

ரமலான் மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதும் அம்மாதத்தில் செய்யப்படும் அமல்கள் சிறப்புக்குரியவை என்பதற்கும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அதே வேளையில் நபிகளாரின் பெயரில் இம்மாத சிறப்பு பற்றியும் இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் சிறப்பு பற்றியும் இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளும் கணிசமாக இடம் பெற்றுள்ளது....

ஜனாஸா அறிவித்தல்

கஹட்டோவிடாவைச் சேர்ந்த உம்மு நயீமா அவர்கள் காலமானார். அன்னார் ஓகடபொளையைச் சேர்ந்த தாஹா நாநா அவர்களின் மனைவியும் கஹட்டோவிடாவைச் சேர்ந்த நயீம் நாநா அவர்களின் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு (29.07.2011) 10.00மணியளவு முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்த நிம்மதியான கப்றுடைய வாழ்வை வாழ...

பிரதேச சபைத் தேர்தலில் சகோதரர் நஜீம் (ஜே.பி) அவர்கள் அமோக வெற்றி!

நேற்று நடைபெற்ற 65 தொகுதிகளில் உள்ள பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தோ்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட எமதூரைச் சேர்ந்த சமாதான நீதிவான் சகோதரர் நஜீம் அவர்கள் சுமார் 4050விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய...