கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ள பள்ளிவாசலுக்கு மீண்டும் ஆபத்து - பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடி வீதி



 தம்புள்ள பள்ளிவாசலையும் அதனையண்டிய பகுதிகளையும் அளவீடு செய்யும் நடவடிக்கையில் நில அளவையாளர் திணைக்களம் நேற்று 11-09-2013 புதன்கிழமை பங்கேற்றுள்ளது. இதையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 தம்புள்ள பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடியில் வீதி அமைக்கப்படவுள்ளதாகவும், தாம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கு அமையவே நில அளவையில் பங்கேற்பதாகவும் குணதிலக்க என்ற அதிகாரி இதன்போது அங்கிருந்த தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபை உபசெயலாளர் ரவுப்பிடம் குறிப்பிட்டுள்ளார்.

 தம்புள்ள பள்ளிவாசல் 100 அடி விசாலம் கொண்டது என jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை உபசெயலாளர் ரவுப், பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடியில் வீதி அமைக்கப்படுமாயின் பள்ளிவாசல் அப்படியே உதிர்ந்து போய்விடுமென தெரிவித்தார்.
 இதுவிடயமாக தான் முஸ்லிம் அரசியல்வாதிகளை தொடர்புகொள்ள முயன்றபோதும் அவர்கள் எவரும் தமக்கு விடையளிக்கவில்லையெனவும் அவர் கவலைப்பட jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தார்.

Jaffna Muslim  News

0 comments:

Post a Comment