கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாமும் பகிரங்க ஆதரவு தெரிவிப்போம்..!


"எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும் சிகரெட் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்வேன், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு இந்தப் போராட்டத்தில் எனது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன்" என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிகரெட் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் வகையிலான படங்களை சிகரெட் பெட்டிகளில் பிரசுரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதனை சீர்குலைக்க முயற்சி மேற்கொண் டால் அது தேசியப் போராட்டமாக உருவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்க எனது வாழ்வையும் அர்ப் பணிக்க தயாரெனவும் கூறிய அமைச்சர், சிகரெட் எதிர்ப்பு போராட்டத்தை எந்தவொரு சக்தியாலும் நிறுத்த இடமளிக்க மாட்டேன்.
இப்போராட்டத்தில் நாட்டில் பெரும் எண்ணிக்கை யினர் தன்னுடன் அணிசேர தயார் என்பதை நான் அறிவேன் எனத் தெரிவித்தார். சிகரெட் பக்கெட்டு களில் வாய்ப்புற்று ஆபத்துக்கள் பற்றிய படங்களைப் பிரசுரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டு வருவதை இடைநிறுத்தி இருந்தால், எனது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் உலகில் மகிழ்ச்சியாக உள்ளவர்கள் வாழும் முதல் தர நாட்டில் நல்ல வீடு வாசல்களை அமைத்து, வாகனங்களுடன், சுகபோக வாழ்வை நடத்த வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
நாட்டின் அப்பாவி மனிதர்கள் சிகரெட் கொலைஞர்களிடமிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். சிகரெட் பாவனையை நாட்டில் இருந்து அகற்றுவதே எமது கொள்கையாகும்.
உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போர் வாழும் 194 நாடுகளில் இலங்கை 137 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதெனவும் அவர் கூறினார்.
சிகரெட் பக்கெட்டுக்களில் வாய்ப்புற்று நோய் ஆபத்துகள் பற்றிய படங்களைப் பிரசுரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த அக்கம்பனி களுடன் உடன்பட்டிருந்தால் எனக்கு சுகபோக வாழ்வு நடத்த வாய்ப்பிருந் திருக்கும்.

ஒரு தலைமுறைக்கு அல்ல. 14 - 15 தலைமுறைகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி வாழும் செல்வத்தை புகையிலைக் கைத்தொழில் நிறுவனத்தினர் எனக்குத் தந்திருப்பர்.  ஆனால் நான் ஒன்றையும் பெரிதாகக் கொள்ளவில்லை. நாட்டின் அப்பாவி மனிதர்கள் சிகரெட் கொலைஞரிடம் இருந்து பாதுகாப்பு பெற வேண்டுமென்பதே எனது எண்ணமாகும்.
அதனால் தான் வர்த்தமானி பிரகடனத்தை செய்தேன். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பல்தேசியக் கம்பனிகள் கொலை செய்யும் வேலையையும் செய்வார்கள். இப்போராட்டத்தில் எனக்கு எதிராக என்னுடைய வாழ்க்கை தொடர்பாக களங்கம் கற்பிக்கப்படும். சில வேளை என்னைக் கொல்லவும் இடமுண்டு. நான் கிராமத்தில் இருந்து வந்த சிறிய மனிதன்.

சில வேளை பல்தேசியக் கம்பனிகளுடன் எனக்கு மோத இயலாமல் போகும். ஆனால் நான் தனிமைப்படவில்லை என்பதை அறிவேன் எனவும் அமைச்சர் கூறினார். பொலன்னறுவையில் நடைபெற்ற பல வைபவங்களில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment