கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிரிய சண்டைகளில் களமாடும் “அமெரிக்க மீடியா அல்-காயிதா” - டிஜிட்டல் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய புரிதல்கள்!!

கைபர் தளம்
சிரிய இராணுவமும், சியா வெறியர்களும், ஹிஸ்புல்லாக்களும் தங்களால் கைது செய்யப்பட்ட சிரிய போராளிகளை சித்திரவதை செய்வதும் கொலை செய்வதும் பல வீடியோ கிளிப்களில் பாத்திருக்கின்றோம். அதே போல் இஸ்லாமிய போராளிகள் சியா இராணுவத்தினரை வதை செய்து கொல்லும் கிளிப்களும் வருகின்றனவே. அப்படியானால் இவர்களிடையே வித்தியாசம் இல்லையா. இவர்கள் இரு தரப்பினருமே அழிக்கப்படல் வேண்டுமா? இந்த நியாயமான கேள்வியின் பின்னால் இருந்து நாம் முட்டாளாக்கப்படுகிறோம். அது எப்படி?

அமெரிக்கா சிரியா மீதான உள்நாட்டு போரில் F.S.A. எனும் பிறீ சிரியன் ஆர்மியை தனது துரும்பாக கொண்டே ஆரம்பம் முதல் செயற்பட்டு வந்தது. லிபியாவின் சுதந்திர போராளிகள் போன்றே இவர்களையும் தனது கட்டுப்பாட்டு ஊடகங்கள் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்தது. தராளமாக ஆயுதமயப்படுத்தியது. ஒரு கட்டத்தில் சிரிய ஜிஹாதில் செயற்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் குறிப்பாக அல் காயிதா ஆதரவு தரப்புக்களுடன் F.S.A.-இனை நெருங்கி செயற்பட வைத்தது. எந்தளவிற்கு என்றால் பல தாக்குதல்களின் F.S.A. அவர்களுடன் இணைந்து கூட்டு தாக்குதல்களை நடாத்தியது. பலரின் மனதில் F.S.A.-யும் இஸ்லாமிய சாயல் கொண்ட அமைப்பாக மாறும் என நம்பும் அளவிற்கு.

பின்னர் அதே F.S.A.-யின் அமெரிக்க ஆதரவு பிரிவினை வைத்து படுகொலைகளை சிவிலியன்கள் மேல் செய்தது. தனது ஊடகங்கள் மூலம் அதனை இஸ்லாமிய அணிகளின் பாசிஸமாக காட்டியது. சிரியாவில் அல் காயிதா ஆதரவு அணிகள் இருப்பது உண்மை. அது போல அமெரிக்க மீடியா உருவாக்கியுள்ள பொய்யான தரவுகளும் தகவல்களும் அடங்கிய போலி அல் காயிதாவும் சண்டையிடுகிறது. இந்த அல் காயிதா அமெரிக்காவின் டிஜிட்டல் சட்டலைட் தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட அல்-காயிதா. நிஜத்தில் அல்-காயிதா என்ற பெயரில் அமெரிக்க பினாமிகளான F.S.A. போராளிகள் அவர்கள். 

சிரியாவை எடுத்த எடுப்பில் தாக்க முடியாது. அதனை ரஸ்யா அனுமதிக்காது. இஸ்லாமிய குழுக்களின் ஸரீஆஃ ஆட்சி என்ற பெயரில் அஸாதிய அரசை பலவீனப்படுத்தி அதன் பின் அந்த குழுக்களிற்கு பயங்கரவாத முத்திரை குத்தும் சீ.ஐ.ஏ.யின் மோசடியின் ஒரு வாசிப்பு இது.

சரி இப்போது கீழே வாசியுங்கள். அமெரிக்க மோசடியின் பிம்பங்கள் புரியும்.... 

சிரியாமீது அமெரிக்க நடத்த இருக்கும் ஆக்கிரமிப்பு போர்கள் குறித்து ஒபாமா நிர்வாகத்தின் இராணுவப் படை பயன்பாட்டிற்கு அங்கீகாரம் பெறும் தீர்மானம், காங்கிரஸ் குழுக்கள் முன் வேண்டுகோள்விடுவதற்கு முன்பு இந்த வாரம் இருமுறை சாட்சியமளிக்கையில் வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்டுள்ள உள்நாட்டுப்போரில் அல் காயிதாவும், அதன் தொடர்புபட்ட குழுக்களும் கொண்டுள்ள முக்கிய பங்கு பற்றிய வினாக்களை உதறித்தள்ளி, “எதிர்த்தரப்பு பெருகிய முறையில் அதன் நிதானத்தால் வரையறுக்கப்பட்டு வருகிறது” என்று வலியுறுத்தினார்.

ஒரு தசாப்தத்தில் இரண்டாவது தடவையாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவு ஆயுதங்கள்  மற்றும் அல் காயிதா குறித்த பொய்களை அடிப்படையாக கொண்ட போரை தொடுக்க தயாராகின்றது. 2003ல் வாஷிங்டன் ஈராக் மீது படையெடுத்து, சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்க்க, அது பேரழிவு ஆயுதங்களை கொண்டுள்ளது,  அவற்றை அல் காயிதாவிற்குக் கொடுக்க இருக்கிறது என்ற கூற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. அத்தகைய ஆயுதங்களும் ஈராக்கில் இருக்கவில்லை, ஈராக்கிய ஆட்சி அல்குவேடாவின் எதிரியாக இருந்தது.

இப்பொழுது பத்தரை ஆண்டுகளுக்குப்பின், ஒபாமா நிர்வாகம் சிரியா மீது ஒரு போருக்குத் தயாரிப்புக்களை கொண்டுள்ளது, போலியாகத் தயாரிக்கப்பட்ட உளவுத்துறை அறிக்கை ஆகஸ்ட் 21ல் இரசாயன ஆயுதங்கள் டமாஸ்கஸிற்கு வெளியே ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டது என்பதை அடிப்படையாக கொண்டு மற்றும் “போராளிகள்” எனப்படுவோர் “நிதானமான ஜனநாயகவாதிகள்” என்றும் அல் காயிதா கூறுபாடுகள் முக்கியத்துவமற்ற வகையில் சிறுபான்மையில்தான் உள்ளது என்றும் கூறுகிறது. இரு கூற்றுக்களுமே பொய்கள்தான்.

ஆகஸ்ட் 21ம் திகதி தாக்குல் — அசாத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட ஐ.நா. ஆயுதங்கள் ஆய்வாளர்கள் சிரியாவிற்கு தங்கள் பணியைத் தொடங்கிய அன்றே— அமெரிக்கத் தாக்குதலுக்கு ஒரு போலிக் காரணத்தை அளிக்க “எழுச்சியாளர்களால்” செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை நம்புவதற்கு இடமுண்டு. 

சிரிய அரசாங்கப் படைகளால் இராணுவத் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ள அவர்கள், அத்தகைய நிகழ்ச்சி திருப்பத்தால் எப்படியும் ஆதாயம் அடைவர், அசாத் ஆட்சி அனைத்தையும் இழக்கும்.

கெர்ரியின் அசாத் விரோத சக்திகள் பற்றிய கூற்றுக்களை பொறுத்தவரை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அமெரிக்க வெளிவிவகார செயலரை முரண்படுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்ட வகையில், செப்டம்பர் 5ம் திகதி அவருடைய “சிரிய நிதானமான எதிர்த்தரப்புக் குழுக்கள்  செல்வாக்கில் பெருக்கம் கண்டுள்ளன என்ற வலியுறுத்தல்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை ஆதாரங்கள் மற்றும் அரசுசாராத நிபுணர்களின் மதிப்பீட்டிற்கு மாறுபட்டுள்ளன, அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் கடுமையான, மிகச் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் என்று கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

கெர்ரி புதன் அன்று “எழுச்சியாளர்களின்” ஜனநாயக குணநலன்களைப் போற்றுகையில், ஜிகாத்திச போராளிகள் கிறிஸ்துவக் கிராமமான டமாஸ்கஸுக்கு வடக்கே உள்ள மாலுலாவை முற்றுகையிட்டு நிலைத்தை அபகரித்து, ஆதரவற்ற குடிமக்கள் வாழும் பகுதிகளையும் திருச்சபைகளையும் குண்டுத்தாக்குதல் நடத்தி, குறுங்குழுவாத  இரத்தக்களரியை கட்டவிழ்த்துவிடுகின்றனர்.

அமெரிக்க ஆதரவுடைய இஸ்லாமியப் போராளிகளின் எண்ணிலடங்கா கொடுமைகளில் இது சமீபத்தியதாகும். அவர்கள், அசாத் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடனும் மத்திய கிழக்கில் அரசியல் வரைபடத்தை மறுபடி வரைவதற்கும் வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆதரவில் சிரியாவிற்குள் ஆயுதங்களுடனும் நிதியுடனும் அனுப்பப்பட்டனர்.
  நேரடி அவசர அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு முக்கிய காரணம், எதிர்த்தரப்பு போர்க்களத்தில் பெற்ற தோல்விகளால் சிதைவுற்று இருப்பதும், சிரிய மக்கள் உடைய விரோதப் போக்கு மற்றும் வெறுப்புணர்வும்தான்.
ஆன்லைனில் வந்துள்ள சமீபத்திய காணொலிகள் இஸ்லாமியப் போராளிகளின் குற்றங்களைப் பதிவு செய்துள்ளன. நம் வாசகர்களை நாம் எச்சரிக்கிறோம்: நீங்கள், அமெரிக்க அரசாங்கத்தின் நட்பு அமைப்பாக செயல்படும் ஒரு வக்கிரமான அமைப்பின் செயலைக் காண்கிறீர்கள், அமெரிக்க அரசாங்கம் அதைப் பதவியில் கொண்டுவர உழைக்கிறது.
அச்செயல்களில், அலாவைட் சிறுபான்மை உறுப்பினர்கள் என்ற "குற்றத்திற்காக" சாலையோரத்தில் மூன்று கனசாரதிகள் கொல்லப்படுவதும் அடங்கியுள்ளது. (கொலையாளிக்கு ஒரு சாரதி கூறுகிறார்: “நாங்கள் வாழ்வதற்கு சம்பாதிக்க முயற்சிக்கிறோம்.”) 
இவற்றில் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் தலை துண்டிக்கப்படுவதும் உள்ளது. 

மற்றொரு காணொலியில், சமீபத்தில் வெறுப்படைந்து "போராளி" முகாமில் இருந்து அகன்றவரால், கைது செய்யப்பட்டு சிரியாவிற்கு வெளியே கடத்தப்பட்டிருந்த ஏராளமான பாதுகாப்பற்ற சிரியப் படையினர்கள் கொல்லப்படுவதை காட்டுகிறது.

இக்கொடூரங்கள் பெரிதும் பெருநிறுவனச் செய்தி ஊடகத்தால் தகவல் கொடுக்கப்படுவதில்லை; அவை தங்கள் முயற்சிகளை (குறையும் வெற்றிகளுடன்) போருக்கான பொதுமக்கள் கருத்தை உருவாக்க முற்படுகின்றன. இந்த “எழுச்சியாளர்களின்” உறுதி செய்யப்பட்ட கொடூரங்களைப் பற்றி கருத்துக் கூறுமாறு வினவப்பட்டதற்கு கெர்ரியும் பிற போர் ஆதரவாளர்களும் அமெரிக்கக் குண்டுத்தாக்குதல்தான் இத்தகைய “தீவிரமயப்படுதல்களை” தடுக்கும் என வலியுறுத்தினார்.

சிரியா மீது ஒரு “மனிதாபிமான” தாக்குதல் தேவை என வாதிடும் அரசியல்வாதிகள் செய்தி ஊடகப் பண்டிதர்கள் அனைவரும் கிட்டத்தட்ட அந்நாட்டு உள்நாட்டுப்போரில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளர் என்பதை அமெரிக்கத் தாக்குதலை நியாயப்படுத்தக் கூறுகின்றனர். அவர்களில் எவரும் இப்போர் சிரியா மீது அமெரிக்கா இன்னும் பிற மேற்கத்தைய சக்திகளால் திணிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. இப்போரில் அவர்களுடைய பினாமிகளாக, ஆட்சி மாற்றத்திற்காக போரிடும் இஸ்லாமியவாதப் போராளிகள்தான் படுகொலைகளுக்கு பொறுப்பு என்ற உண்மையையும் மறைக்கின்றனர்.

அசாத்-விரோத குழுவான மனித உரிமைகள் சிரியக் கண்காணிப்பு அமைப்பின்படி, இந்த இறப்புக்களில் முற்றிலும் 40% சிரிய படையினர்கள் மற்றும் அரசாங்க சார்புடைய போராளிகள் ஆவர் என்று கூறுகிறது. இந்த பாசிச வகைப்பட்ட கொலை நடத்தும் குழுக்கள் எத்தனை குடிமக்களை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவில்லை, ஆனால் அவர்கள் தொடர்ந்த தாக்குதல்களை அல்லாவைட்டுக்கள், கிறிஸ்துவர்கள், குர்திஸ்துக்கள் இன்னும் ஏனைய சிறுபான்மையினர் மீதும் மதச்சார்பற்ற சுன்னி முஸ்லிம்கள் மீதும் நடத்துகின்றனர்.

இக்கூறுபாடுகளின் குற்றங்களைப் பற்றி பொய் சொல்லும் கட்டாயத்தில் கெர்ரி ஏன் உள்ளார்? இல்லாத “நிதான எதிர்தரப்பு” என்று அவர் ஏன் பாசாங்குத்தனம் செய்கிறார் மற்றும் வெற்றுத்தனமான “சுதந்திர சிரிய இராணுவம்” குறித்து, அவைதான் அசாத் ஆட்சியை எதிர்க்கும் உண்மை சக்திகள் என்கிறார்?

இப்பொய்கள், அமெரிக்காவும் அதன் உளவுத்துறை நிறுவனங்களும் அல் காயிதா மற்றும் அத்துடன் பிணைந்த அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன என்னும் உண்மையை மூடிமறைக்கும் நோக்கத்தைக் கொண்டவை. இது ஒன்றும் புதிதல்ல. வாஷிங்டன் வழக்கமாக வலதுசாரி இஸ்லாமியக் குழுக்களை இடது தேசியவாத, சோசலிச இயக்கங்களை நசுக்குவதற்கு மத்திய கிழக்கிலும் அப்பாலும் பயன்படுத்தியுள்ளது. இது CIA மூலம் அத்தகைய சக்திகள் ஈரானில் 1953ம் ஆண்டு மோசடெக் அரசாங்கத்தை அகற்றப் பயன்படுத்தியது; CIA  ஆதரவுடைய இராணுவ சதி மற்றும் பாரிய மக்கள் கொலைகள் இந்தோனேசியாவில் 1965ல் நடைபெற உதவியது.

இச்சக்திகளில் மிகவும் அறியப்பட்டுள்ள அல் காயிதா, 1980 களில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் சார்பு ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிட்ட போரின்போது CIA மற்றும் பாக்கிஸ்தான் உளவுத்துறையால் தோற்றுவிக்கப்பட்டது,  சவுதி அரேபிய முடியாட்சியால் ஆயுதங்கள், நிதிகள் கொடுக்கப்பட்டன.

வாஷிங்டன் ஒசாமா பின் லாடனை தேடுவதில் ஆர்வத்தை காட்டவில்லை, அவர் பயன்பாடு இல்லா வாழ்க்கைக்கு இயலாமையால் செல்லும் வரை?

சிரியாவிற்கு எதிராக, வரவிருக்கும் தவிர்க்க முடியாத அமெரிக்க ஆக்கிரமிப்பு தாக்குதல் வாஷிங்டனின் பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதில் உள்ள மகத்தான மோசடியை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது; 

இன்று சிரியாவில் நடப்பதைப் போல் லிபியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும், இஸ்லாமிய மெகரப்பில் அல் குவேடாவிற்கும் அதையொத்த கூறுபாடுகளுக்கும் ஆயுதம் அளித்து, பயிற்சி கொடுத்து வான் தாக்குதல் ஆதரவையும் கொடுத்து இச்சக்திகளை பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தை நடத்தின. அத்தலையீடும் இன்று சிரியாவில் உள்ளதைப் போல் “மனிதாபிமான” அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டது; அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், நாடு அழிவிற்கு உட்பட்டது.

இந்த பயங்கரவாதிகள் ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையின் கருவியாக பயன்படுத்தப்படும் முறை, நயமற்ற முறையில் சமீபத்திய பேச்சுக்களில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இளவரசர் பண்டர் பின் சுல்த்தான், சௌதி உளவுத்துறைத் தலைவர் மற்றும் வாஷிங்டன் ரியாத்திற்கு இடையே முக்கிய இணைப்பாளராக இருப்பவருடன் நடத்திய பேச்சுக்களில் வெளிப்பாட்டைக் கண்டது.

இப்பேச்சுக்களின் கசியவிடப்பட்ட ஆவணத்தின்படி, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு ரஷ்யா உடன்பாட்டால், பண்டர் எண்ணெய் மற்றும் எரிவாயு உடன்பாடுகளை அளிக்க முன்வந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக், சேஷென் இஸ்லாமியவாதிகளின் பயங்கரவாத தாக்குதலுக்கு உட்படாது என்னும் உத்தரவாதத்தையும் கொடுக்க முன்வந்தார். புட்டினுக்கு பண்டார் இக்குழுக்கள் “எங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன” என்றும் சௌதி மற்றும் அமெரிக்க நலன்களுக்கு ஏற்றார்போல் தூண்டிவிடப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்று உறுதியளித்துள்ளார்.

சிரியாவில், தாக்குதல் அணிகளை பயன்படுத்தி குற்றம் சார்ந்த வகையில் அமெரிக்கத் தலையீடு, இப்பொழுது நேரடியாக தூண்டுதலற்ற இராணுவத் தாக்குதலாக மாறுவது, பிராந்திய, ஏன் உலகப் போரை எரியூட்டும் அச்சுறுத்தலைக் கொண்டது. இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பாரக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஆழ்ந்த குற்றத்தன்மைக்கு இழிந்துவிட்டதைத்தான் அம்பலப்படுத்துகிறது.
 
கைபர் தளம்
 

0 comments:

Post a Comment