கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வட மாகாண சபைத்தேர்தலில் முடிவுகள்

பலத்த சவால்களுக்கு மத்தியில் வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது இலங்கை தமிழரசுக் கட்சி

வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி  30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக)  கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது.
இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழரசுக் கட்சி  14 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு,

மன்னார் :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

கிளிநொச்சி :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

முல்லைத்தீவு :
இலங்கை தமிழரசுக் கட்சி   - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

வவுனியா :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2

நுவரெலியாவும் ஐ.ம.சு.மு. விடம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 225,307
ஐக்கிய தேசியக் கட்சி - 67,263
மலையக மக்கள் முன்னணி - 23,455

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 04 ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி - 01 ஆசனம்


புத்தளம் ஐ.ம.சு.மு. வசம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 164,675
ஐக்கிய தேசியக் கட்சி - 87,343
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 10,730
ஜனநாயகக் கட்சி - 10,018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 09 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 05 ஆசனங்கள
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
ஜனநாயகக் கட்சி - 01 ஆசனம்


கண்டியை கைப்பற்றியது ஐ.ம.சு.மு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 355,812
ஐக்கிய தேசியக் கட்சி - 200,187
ஜனநாயகக் கட்சி - 37,431
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 18,787
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 11,137

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 09 ஆசனங்கள
ஜனநாயகக் கட்சி - 02 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 01 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்


மாத்தளையில் ஐ.ம.சு.மு. வெற்றி: மீண்டும் தமிழ்ப் பிரதிநிதித்துவம்
மத்திய மாகாண சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது.

இரு இலட்சத்தி 35 ஆயிரத்து 128 வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களையும். 63 ஆயிரத்து 365 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மூன்று உறுப்பினர்களையும், 10 ஆயிரத்து 498 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு உறுப்பினரையும் மத்திய மாகாண சபைக்கு அனுப்பத் தகுதி பெற்றுள்ளன.
பலரது எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த தமிழ்ப் பிரதிநிதித்துவம் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இம்முறை மீளப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
வழமைக்கு மாறாக இம்முறை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது சேவல் சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது

 

0 comments:

Post a Comment