நாட்டைக் கொள்ளையடித்த மஹிந்த வாக்கையும் கொள்ளையடித்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தேசிய முண்ணனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக் கூட்டமொன்று நேற்றிரவு (02.04.2010) ஹிஷாம் ஹாஜியார் அவர்களின் கோழிக்கடைக்கு அருகாமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பாராளு மன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்கள் நாட்டின் உண்மையான ஜனாதிபதி பொன்சேகாவேயாவார். மஹிந்த ராஜபக்ச மக்களின் வாக்கைக் கொள்ளையடித்த போலி ஜனாதிபதியே. நாட்டைக் கொள்ளையடித்த மஹிந்த ராஜபக்ச மக்களின் வாக்கையும் கொள்ளையடித்தார் என்று குறிப்பிட்டார். வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களிற்காக கிடைக்கப் பெற்ற நிதியை பசில் ராஜபக்ஷவின் வெற்றிக்காக போலியான அபிவிருத்தித் திட்டங்களில் அநியாயமான முறையில் இந்த அரசு செலவிடுகிறது. வடக்கின் வசந்தம் என்ற சொல் இப்போது பசிலின் வசந்தமாக மாறியுள்ளது. பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை கிடைக்காது என்பதை கடந்த காலத் தேர்தல்கள் உணர்த்துகின்றன. 1994இல் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியடைந்த சந்திரிக்கா அம்மையாருக்குக் கூட பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பாண்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தேவைப்பட்டது. இவ்வரசாங்கத்தில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த கிண்ணத்திற்கு வாக்களிக்க வேண்டும். கஹட்டோவிடாவில் இவ்வாறான ஒரு பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு நன்றியைக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சாரக் கூட்டத்தில் ஜனநாயக தேசிய முண்ணனியின் திஹாரிய வேட்பாளர் சகோதரர் நஸார் அவர்களும், மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான வருண ராஜபக்ஷ மற்றும் எமதூரின் மூத்த அரசியல் வாதியான சகோதரர் ஹ{சைன் முஹம்மத் அவர்களும் உரையாற்றினார்.
இப்பிரச்சாரக் கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான பட்டாசுகளும், வாணவெடிகளும் கொளுத்தப்பட்டன. கஹட்டோவிட மக்கள் தமது மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினாலும், எமதூர் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுவதில் ஆர்வமாக இருப்பதனால் இவ்வாறான வீணான செலவினங்களை தவிர்ந்து கொண்;டிருக்கலாம் என பலர் கருத்துத் தெரிவித்தனர்.
2 comments:
please see www.palichkahatowita.blogspot.com
This is a good jib. Please if you can try to update Friday's CASSETTE and Vacancies University admission matters and other courses....... this will be a helpful to our village youths.
I am Ashkar - Kahatowita.
Post a Comment