கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட பாலிகாவிற்கு முதலமைச்சர் விஜயம்


கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் வருடாந்த கலைவிழா நிகழ்வுகள் இன்று காலை (03.04.2010) 10.30 மணியளவில் பாடாசாலை அதிபரின் புகாரி உடையார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண சபை முதலமைச்சரும் கல்வியமைச்சருமான கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கலந்து கொண்டார்.

ஊர்ப் பிரமுகர்களும் பெற்றோரும் மாணவர்களும் நலன் விரும்பிகளும் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றும்போது, இன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் ஒரே முஸ்லிம் பெண் பாடசாலையான முஸ்லிம் பாலிக வித்தியாலயத்திற்கு வருகை தர முடிந்தமைக்ககா மகிழ்ச்சியடைகிறேன். 1946இல் மறைந்த பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டீ பண்டாரநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை வளங்கள் அற்ற நிலையில் இருப்பது எனக்கு மிகவும் கவலையைத் தருகிறது. இப்பாடசாலையின் குறைபாடுகள் பற்றி இதன் அதிபர் என்னிடம் எடுத்துக் கூறிய விடயங்கள் சம்பந்தமாக எனது அவதானத்தை செலுத்தவுள்ளேன். இது விடயமாக பொதுத் தேர்தலின் பின் கலந்துரையாடல் ஒன்றிற்காக வருமாறு அதிபரையும் அவர் குழுவினரையும் அழைத்துள்ளேன். இச்சந்தர்ப்பத்தில் இப்பாடசாலைக்குத் தேவையான மூன்று மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்துத் தருவதற்கு உங்கள் முன்னால் உறுதிளிக்கின்றேன். உங்களுடைய இக்கலைவிழா வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் என்றார்.

முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான எமதூரைச் சேர்ந்த சகோதரர் கியாஸ் அவர்களும் இவ்வைபவத்தில் உரையாற்றியதோடு மாணவிகளின் விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.
POSTED BY : ABU MUSAB, KAHATOWITA

3 comments:

ihthisam said...

அலைக்கும்,

alhamdulillaah , இது உண்மையிலே செய்ய வேண்டிய விடயம், கஹடோவிட பெண்கள் பாடசாலை வளர்பது எமது கடமை, ஆண்கள் பெண்கள் வேராஹ் படிப்பதன் மூலம் ஒழுக்க விடயங்களை 1௦௦% அடையமுடியும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ,

அஸ்ஸலாமு அழைக்கும்

ihthisam said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

alhamdulillaah , இது உண்மையிலே செய்ய வேண்டிய விடயம், கஹடோவிட பெண்கள் பாடசாலை வளர்பது எமது கடமை, ஆண்கள் பெண்கள் வேராஹ் படிப்பதன் மூலம் ஒழுக்க விடயங்களை 100௦௦% அடையமுடியும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ,

அஸ்ஸலாமு அழைக்கும்

Anonymous said...

ithu oru shiranda shevai gampaha mawattathilirukkum enaya muslim urhal kan thirakka wendum inda kahatowita balikawai thalaimai paadashalayaha matra ellorum otthulaikaweddndum

Post a Comment