கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிற்பிகளைச் செதுக்குவோம் வாருங்கள்…………

கஹட்டோவிட உபதபாலகத்திற்கருகில் பாடாசாலை மாணவர்கள் சிலரும், பாடாசாலை செல்லாத மாணவர்கள் சிலரும் தினமும் மாலை வேளைகளில் ஒன்று கூடுவதாகவும் இதன்போது தத்தமது கைத்தொலைபேசியிலுள்ளவற்றை பரஸ்பரம் இந்த இளைஞர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதுடன் அக்கம் பக்கத்தவர்களுக்கு இடைஞ்சலாகும் அமைப்பில் கைத்தொலைபேசிகளில் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும் அப்பகுதிவாழ் அன்பர்கள் சிலர் நமக்குத் தெரிவித்துள்ளார்கள். இவ்விளைஞர்களின் இந்தக் கும்மாளங்கள் இரவு ஒன்பது மணியையும் தாண்டி விடுகின்றமையால் அயலவர்களுக்கு பலத்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாடசாலைக்குள்ளும், வெளியிலும் உலாவரும் கிசுகிசுப்புக் கடிதங்களையும் இந்த சந்திப்பின்போது இவ்விளைஞர்கள் தம்மிடையே பரஸ்பரம் காண்பித்துக் கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது. தலைசிறந்த சமூக கூழலொன்றை உருவாக்குவதில் இது போன்ற நடத்தைகள் பாரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கடந்த காலங்களில் பாடசாலையில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள், அண்மைக்கால க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் போன்றன நமது இளைய சமூகம் ஒழுக்கத்திலும், கல்வியிலும் தடம் புரண்டு செல்கின்றது என்பதை உறுதி செய்துள்ளன. ஆகவே பெற்றோர், பள்ளி வாசல்கள், ஊர்ப் பிரமுகர்கள், ஆசிரியர்கள் ஒன்றினைந்து இந்த இளைஞர்களினதும் நமது ஊரனதும் வளமான எதிர்காலம் தொடர்பில் கவனமெடுத்து அவர்களை நெறிப்படுத்துவது காலத்தின் அத்தியவசியத் தேவையாகின்றது.

3 comments:

brother said...

அண்மைக்காலமாக எமது ஊரில் நிறைய பயான்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது அவைகள் அனைத்தும் எவ்வாறு என்றால்

தௌஹீத் பள்ளி , பெரிய பள்ளிவஷளுக்கு எதிராக பேசுவது, பெரிய பள்ளி தொஹீட்பல்லிக்கு எதிராக பேசுவதும் தான். பின்னர் இருவரும் நாம் நல்லக பயனள கொடுத்தோம் எண்டு தெருக்களில் கதைப்பதுமே.

யாரும் ஊரின் தற்கால தேவைக்கான இளைஞ்சர்கலதும் , பெற்றோர்களினதும் ஒழுக்கம், போதைபொருள் பாவனை, ஐவேளை தொழுகைக்கு வருதல் , வாங்கின கடனை சரியான நேரத்தில் கொடுத்தல், மூத்த மார்க்க அறிஜர்களது நல்லவிடன்களை பின்பற்றுதல், அவர்களுக்கு மரியாதை கொடுத்தல். எமது மார்கத்தில் இலஞ்சர்களது சிறப்பான பங்களிப்பு

இவைகள் பற்றி எந்தப்பல்லியிலும் கதைப்பது குறைவு என்பது உண்மையில் வேதனைக்குரியது.

மச்ஜிடுன்நூர் பள்ளிவஷளில் ஊரில் பொதுவாக உள்ள ஒழுக்கம்சம்பன்டமாக சொற்பொழிவு ஒன்று முண்டானால் இரவு இடம்பெற்றதாக நான் அறிந்து உண்மையில் மகிழ்ந்தேன்.

Anonymous said...

I hope to publish the Aticle related to follow link in this blog.
http://www.thinakaran.lk/2010/04/21/_art.asp?fn=d1004211

RASNY MOHAMED said...

salam
for editor:
perachchenaihalai suttik kaattuwazudan awatrukkana theerwu kalaththin awasiyam enru kuramal ungalal theerwaiyum kura mudiyumanal azuwae nanraha erukkum insha allah
KALATHTHIN MEEZU PALI SUMATHTHAZEERHAL

Post a Comment