ஜனாதிபதி முர்சியின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் ?
நேற்று (03/07/2013) அன்று இரவு ஒப்பது மணியளவில் எகிப்திய ஜனாதிபதி முர்சி அவர்களின் ஆட்சி இராணுவத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இது மிக கவனமாக பல இஸ்லாமிய தீய சக்திகளின் திட்டமிட்ட சதி முயற்சியால் நடந்தேறியது.
இதற்கு பின்னால் உள்ளும் வெளியுமாக பல இஸ்லாத்தின் பயங்கரவாத சக்திகள் நிற்பது தெளிவாக சொல்ல முடியும் அதன் விளைவே இப்போது அரங்கேறிவருகிறது.முர்சியை ஆட்சியில் இருந்து கவிழ்த்த அடுத்த நிமிடம் இஸ்லாமிய வாதிகளுக்கு எதிராக பல அராஜகம் நடைபெற்றதை நேரடியாக உள்ளிருந்து அவதானிக்க முடிந்தது உலக வரலாற்றில் இஸ்லாத்துக்கு எதிராக பல சதிகள் நடை பெற்றுள்ளதாகவும் அதில் பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் தூக்கில் இடப்பட்டதாகவும் பல வருடங்கள் சிறையில் வாழ்த்ததாகவும் படித்துள்ளேன் இப்போது அதை என் கண் முன்னே உணர்கின்றேன் .
அல்லாஹ் நீயே போதுமானவன் நீயே எல்லா வற்றையும் அறிந்தவன் நேற்று இராணுவம் ஆட்சி கவில்ப்பை அறிவித்தது முதல் பல விளைவுகள் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றம் நடைபெற்றது .
அந்த வகையில் பின்வருவன மிக முக்கியமாகும் .
ஜனாதிபதி முர்சி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்
நாப்பது பேர் கொண்ட மிக முக்கியமான இஸ்லாமிய தலைமைகள் நாட்டுக்கு வெளியே பிரயானிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் இயங்கி வந்த 17 இஸ்லாமிய சானல்களும் முடக்கப்பட்டுள்ளது .
இஸ்லாமிய சானல்களில் வேலை செய்த அனைத்து ஊ டகவியாலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஜெசீரா தொலைகாட்சி எகிப்தில் முடக்கப்பட்டு அதில் பணி புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
எகிப்தின் பல இடங்களிலும் பலர் சஹீதகப்பட்டுள்ளனர்
முர்சிக்கு ஆதரவானவர்கள் இராணுவத்தினால் முற்றுகைக்கு ஆளாக்கப்டுள்ளனர் .
எகிப்திய முழு ஊடகமும் முஸ்லிம்களை தூற்ற ஆரம்பித்ததுள்ளது.
இக்வான்களின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
90 வீதமான முஸ்லிம்களை ஒரு கிறிஸ்தவ தலைவர் ஆட்சி செய்ய அமர்த்தப்பட்டுள்ளார் .
இஸ்ரேல் ,சிரியா ,சவூதீ ,குவைத் .இமாரத் அமெரிக்க போன்ற நாடுகள் வாழ்த்துக்களை ஆட்சி கவிழ்ப்புக்கு தமது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளது.
ஹிஜாப் அணிந்துது தொலை காட்சியில் தோன்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது .
இஸ்லாமிய பிரசாரம் செய்து வந்த அல் ஹாபில் சானல் மற்றும் அதன் உரிமையாளர் ஆதிப் அப்துர் ரசீத் கைது செய்யப்பட்டுள்ளார்
எகிப்தின் மிக முக்கிய சலபி சானல் நாஸ் முடக்கப்பட்டு அதன் மிக முக்கிய ஊடகியலாளர் அப்துல்லாஹ் காலித் கைது செய்யப்பட்டுள்ளார்
இக்வங்களின் சனல் 25 மிஸ்ர் முடக்கப்பட்டு அதன் மிக முக்கிய ஊடகியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
இக்வான்களின் தினசரி பத்திரிகை ஹுர்ரியா வ அதாலா வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது .
முபாரக்கின் ஆதரவாளர்கள் அமைச்சு பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் .
இக்வங்களின் பிரதி தலைவர் ரசாதுள் பய்யூமி மற்றும் ஹுர்ரியா வ அதாலா கட்சின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி சஹ்த் கதாதினி இன்னும் சிலர் கைது செய்யப்பட்டு ள்ளனர் .
இஸ்லாமிய வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் ஜனாதிபதிக்கு எதிராக நஸ்ரானிகள் மேலேளுந்துள்ளனர் .
இரனுவம் காடையர்களுக்கு எகிப்து கொடியை ஹெலிகாப்டர் மூலம் வழங்கி அவர்களை இன்னும் தூண்டுகிறது .
ராபியா அத்தஅவிய்யா வை சூழ கேமிரா பூட்டப்பட்டு அதிலிருந்து வெளியேறும் நபர்கள் சோதனைக்கும் (செக்கிங்) உள்ளாக்கப்படுகிறார்கள்.
முர்சியின் ஆதரவாளர்கள் இருக்கும் இடத்துக்கு பத்திரிகையாளர்கள் போவது தடை செய்யப்பட்டுள்ளது .
இப்படி மிக படு மோசமான முறையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் கட்டாயம் உங்கள் துஆக்களில் எகிப்துக்கு நல்ல ஆட்சி கிட்ட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்
0 comments:
Post a Comment