கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

United Arab Emirates - பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வகிக்கும் பங்கு!! - எமிரேட்ஸின் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் பற்றிய குறிப்புகள்...



 

து ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பற்றிய அரசியல் உண்மைகள். 
ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியின் போது எகிப்திற்கு ஐக்கிய அரபு இராச்சியம் ஒவ்வொரு வருடமும் தலா 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை ($ 12 billion) உதவியாக வழங்கி வந்தது. ஒயில் புரொடக்களையே இவ்வாறு வழங்கியது எமிரேட்ஸ் அரசு. இஹ்வான்களின் அரசு ஆட்சியை அமைத்து அதன் அதிபராக முஹம்மட் முர்ஸி தெரிவான போது அந்த உதவிகளை உடனடியாகவே நிறுத்தி கொண்டது. இப்போது எகிப்திய இராணுவம் செய்த சதிப்புரட்சியின் பின்னரான அரசிற்கு அந்த உதவிகளை மீண்டும் வழங்க முன்வந்துள்ளது யூ.ஏ.ஈ.
  • 2010-ல் அமெரிக்க அரசு பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது. வோல் ஸ்டீரீட் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என அது அரசியல் ரீதியிலும் பின்னடைவை சந்தித்தது. அப்போது அமெரிக்க அரசை கைதூக்கும் முகமாக எமிரேட்ஸ் அரசு அமெரிக்க அரசுடன் ஆயுத கொள்வனவு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் $ 200 billion பெறுமதியான ஆயுதங்களை பணம் கொடுத்து வாங்கி அமெரிக்க பொருளாதார சரிவை ஈடுகட்ட உதவியது.
  • 2008-ல் அமெரிக்க அரிசோனாவில் (Arizona) ஏற்பட்ட பெரும் புயலின் (ஹரீகேன்) போது அந்த மாகாணத்தின் பாலங்கள், பாடசாலைகள், வீதிகள், மின்சார வசதிகளை மீள் கட்டமைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சுமார் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை (10 billion dollars) உடனடியாகவே வழங்கியது.
  • சிரிய சண்டைகள் ஆரம்பித்த நாள் முதலே சிரியர்களை நாட்டை விட்டு மெல்ல வெளியேற்ற ஆரம்பித்தது. அது போலவே UAE-ல் உள்ள சிரியர்கள் தங்கள் நாட்டிற்கு பணம் அனுப்புவதை தடுக்க முனைந்தது. UAE-ல் சேகரிக்கப்படும் பணம் சிரிய போராளிகளிற்கு சென்றடைவதை தடுப்பதே இதன் நோக்கம். 
  • மாலியில் இஸ்லாமிய ஷரீஆஃ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் முகமாக பிரான்ஸின் சிலுவை யுத்த வீரர்களிற்கு மாலியின் ஒப்பரேசன் செலவை ஈடுகட்டும் முகமாக $ 7 billion அமெரிக்க டொலர்களை வழங்கியதும் இந்த எமிரேட்ஸ் அரசே.
  • புத்தாண்டு கொண்டாட்டங்களை வெகு சிறப்பாக நடாத்துவதற்கு எமிரேட்ஸ் அரசு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை ($ 2 billion) செலவு செய்தது. 
  • சர்வதேச கிரிமினல்களிற்கு அடைக்கலம் தரும் சொர்க்கமும் இந்த எமிரேட்ஸே. Ahmad Shafiq மற்றும் Dahlan போன்ற மனித படுகொலைகளுடன் சம்மந்தமுடைய கிரிமினல்களிற்கும், பஸர் அல் அஸாதின் உறவினர்களிற்கும் அடைக்கலம் வழங்கியுள்ள தேசம் இந்த யூ.ஏ.ஈ.
  • எமிரேட்ஸ் அமெரிக்க, ஐரோப்பிய உளவமைப்புக்களின் பதுங்குமிடம். எகிப்தின் ஹொஸ்னி முபாரக்கின் அரசு வீழ்த்தப்பட்டு இஹ்வான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது இந்த இன்டலிஜென்ட் அமைப்புக்கள் அனைத்தம் தங்கள் செயற்பாட்டு மையங்களை கெய்ரோவில் இருந்து டுபாய்க்கு மாற்றி கொண்டன.
  • எமிரேட்ஸ் சர்வதேச கருப்பு பணம் புழங்கும் தேசம். கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் தேசமும் கூட. ஆயுத தளவாட விற்பனை, பல்நாட்டு பெண்களின் விபச்சார மையம் என இங்கு நடக்கும் நிழல் தொழில்கள் ஏராளம். 
  • பொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்த தேசமான சேர்பியாவிற்கு மனிதாபிமான உதவியாக $ 400 million அமெரிக்க டொலினை வழங்கியதும் இந்த எமிரேட்ஸே.
  • ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இஸ்லாமிய அறிஞர்களை சுதந்திரமாக இயங்க விடாமல் தடுக்கிறது.  Ibrahim al-Marzouqi, Hussain Al-Jaber போன்ற பல அறிஞர்கள் இந்த நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். எமிரேட்ஸில் இஸ்லாமிய செயற்பாடுகள் தொடர்பாக அதன் உளவு அமைப்புக்கள் தீவிரமாக கண்காணிக்கின்றன.
  • ரஷ்ய அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க ரஷய் ஜம்மியதுல் உலமா எனும் துரோக கும்பலையும் அதன் அதிபர் Kadyrov ஐயும் வரவேற்று அவர்களிற்கு பல மில்லியன் திர்ஹம்களை வழங்கி ஊக்குவித்தது இந்த இராஜ்ஜியம். 
  • எமிரேட்ஸ் மாலியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பிரெஞ் படையினரிற்கு மட்டுமல்ல, ஈராக்கில் (பக்தாத்தில்) பயங்கரவாத செயல்களை புரியும் அமெரிக்காவின் கூலிப்படையான Blackwater இற்கும் நிதியுதவி செய்துள்ளது.
  • எமிரேட்ஸில்  (CIA base in Jebel Ali) வைத்து சீ.ஐ.ஏ. உளவாளிகள் முஜாஹிதீன்களையும், இஸ்லாமிய செயற்பாட்டாளர்கள் என சந்தேகப்பட்டவர்களையும் தடுத்து வைத்து சித்திரவதை செய்துள்ளதுடன் அவர்களை வேறு நாடுகளிற்கு நாடு கடத்தும் பணியையும் செய்கின்றது. 
  • ப்றீமேசனின் உப அமைப்புக்களான Rotary clubs மற்றும் Lions clubs அமைப்புக்களின் சம்மேளன கூட்டங்கள் பல டுபாயிலும் அபூதாபியிலும் நடந்துள்ளன. இந்த மசோனிக் குழுமங்கள் எமிரேட்ஸில் சுதந்திரமாக தொழிற்படுகின்றன. 
  • கிறிஸ்தவ தேவாலயங்கள், மடாலயங்கள் என மாற்று மத வழிபாட்டு தளங்கள் கட்டப்படும் பராமரிக்கப்படும் தேசமாகவும் எமிரேட்ஸ் திகழ்கிறது. 

இவ்வளவிற்கும் பின்பு ஒரு கேள்வி பிறக்கிறது. அது, “எமிரேட்ஸ் முஸ்லிம் தேசமா” என்பதாகும்.
.........
கைபர் தளம்




0 comments:

Post a Comment