அல்பத்ரியாவின் வளா்ச்சியிற்கு சில விசமிகளால் தடை. மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
கடந்த சில நாட்களாக கஹட்டோவிட அல்பத்ரியா மகாவித்தியாலயத்தின் சொத்துக்களிற்கு சில விசமிகள் ஊருவிளைவித்துள்ளன. கடந்த விடுமுறை காலத்தில் ஒருசில விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. விடுமுறையின் பின்னா் பாடசாலை ஆரம்பித்தன் பின்னா் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவா்களின் புத்தகங்கள் மற்றும் காட்சிப் பொருட்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடா்நது நேற்று இரவு பாடசாலையின் சில வகுப்புக்களின் தும்புத்தடிகள் தீமுட்டப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் அனைத்து வகுப்புக்களினதும் மின்குமிழ்கள் உடைக்கப்பட்டிந்ததாகவும் அறியக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடா்ந்து இந்த அசம்பாவிதம் பற்றி ஒரு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்குடன் பாடசாலை மாணவா்கள் ஒரு எதிர்ப்பு ஊா்வலத்தை இன்று நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசமிகளின் நடவடிக்கையினால் பாடசாலை மாணவா்களின் கல்வி மற்றுமின்றி மாலை நேரங்களில் விளையாடும் மாணவா்களின் விளையாட்டுக்கும் தடங்கள் ஏற்பட்டுள்ளமை வருந்ததக்கதாகும். எது எப்படியிருப்பினும் பாடசாலை என்பது பொதுவான ஒரு இடம். இதில் தனிப்பிட்ட கோபங்களை வெளிப்படுத்துவதோ அல்லது அதற்கு சேதம் ஏற்படுத்துவதோ முறையற்ற ஒரு செயலாகும். இதுவிடயத்தில் ஊா்மக்கள் அனைவரும் இணைந்து இந்த விசமிகளை இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுப்பது கடமையாகும்.
3 comments:
Appabiyenral, kavalkaranukku angu enna velai...thoongurazuthan avanudaya velaya....
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்தத் இணையத்தினூடாக எமது ஊர் செய்திகளை எங்களுடன் பகிர்ந்துகொள்வது சந்தோசமாக இருக்கிறது. அதேபோன்று எங்களுடைக கருத்துக்களையும் நீக்கிவிடாமல் இங்கே போட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன். நீக்கியமைக்கான காரணம் புரியவில்லை இதையாவது போடுவீர்கள் என நினைக்கிறேன். இந்த நிகழ்வு கண்டிப்பாக கண்டிக்கப்படவேண்டியது. அதேவேலை பாடசாலை நிறுவாகம், SDS நடவடிக்கைகள், மாணவர்களது ஒழுக்கயீனம், ஆசிரியர்களது கடமைப்பாடு (பாடம் படிப்பித்தல்), முக்கியமாக அதிபர் அவர்களின் செயற்பாடுகள்.

Post a Comment