சிரியா தாக்கப்படுமானால் ரஷ்யா சவுதி அரேபியாவை தாக்கும் !! - விளாடிமிர் புட்டின் அசோல்டிங் ஓடரில் கையொப்பமிட்டார்!!
Khaibar Thalam News Re-view |
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இருந்து Russian Federation for the Armed Forces-இற்கு ஒரு அவசர மெமரண்டம் அனுப்பப்பட்டுள்ளது. “முழு நேர தாக்குதலிற்கான படைகளை தயார்படுத்தும் கட்டளை” அதில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு நாடுகள் சிரியா மீது தாக்குதல் தொடுக்குமானால் சவுதி அரேபியா மீத ரஷ்யாவின் தாக்குதல்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கம். இதனை யூரோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிரியா மீதான தாக்குதலிற்கு சவுதி அரேபியா எவ்விதத்திலும் உதவ கூடாது என்று கடந்த ஆகஸ்டில் சவுதி அரேபிய இளவரசர் Bandar bin Sultan-னிடம் அதிபர் புட்டின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் சவுதி ஆட்சியாளர்கள் அதற்கு நேர் முரணான அமெரிக்க சார்பு கொள்கைகளிற்கு துணை நின்றதுடன் நேரடியாகவே பணம், ஆயுத உதவி என சிரிய போராளிகளிற்கு வழங்க ஆரம்பித்தது. சிரியா மீதான தாக்குதலில் மேற்கு நாடுகளிற்கு தனது பரிபூரணை ஒத்துழைப்பை வழங்க அண்மையில் சவுதி அரேபிய அரசு உடன்பட்டிருந்தது. அதன் விளைவே "command battle" எனும் சவுதி மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டமாகும்.
Bandar bin Sultan ரஷ்ய அதிபருடன் பேசும் பொழுது பஸர் அல்-அஸாதின் ஆட்சி தூக்கி வீசப்பட்டாலோ அல்லது சிரியா மீதான தாக்குதல் ஏற்பட்டாலோ, சிரியாவில் உள்ள ரஷ்ய கடற்தளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அது தொடர்ந்தும் இயங்கும்படியான சூழ்நிலைகள் உருவாக்கப்படும் என வாக்களித்திருந்தார். ஆனால் இப்போது அமெரிக்க முதன்மை தாக்குதல் திட்டத்தில் அனைத்து சிரிய துறைமுகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபிய அரசு சிரியா மீதான ஆதரவை ரஷ்யா விளக்கிகொள்ளுமாக இருந்தால் எண்ணை சந்தையில் உலகாதிக்கம் மிக்க நாடாக ரஷ்யாவை மாற்ற தாம் துணை நிற்பதுடன் ரஷ்யாவுடன் பாரிய எரிவாயு ஒப்பந்தத்தையும் செய்ய தயார் என மெல்ல டீல் பேசியிருந்தது. அதற்கு ரஷ்ய அதிபர் புட்டின் “தாம் ஒரு போதும் சிரியாவை கைவிட முடியாது” என ஆணித்தரமாக தெரிவித்து இருந்தார். இந்த தகவலை லண்டன் டெய்லி கிராப்ஃ பத்திரிகை தெரிவித்திருந்தது.
இதற்கமைவாக லண்டன் இன்டிபென்டன்ட் பத்திரிகை ரஷ்ய வெளியுறவுதுறை செயளரின் பேச்சை ஆதாரம் காட்டியுள்ளது. Alexander Lukashevich சிரியா மீதான தாக்குதல்கள் பற்றி கருத்து வெளியிடுகையில் சிரியா மீதான அமெரிக்காவின் சீரியல் தாக்குதல்களின் விளைவாக மத்தியகிழக்கும் வடஆபிரிக்காவும் தாக்குதல்களிற்கு உள்ளாகும். இது மூன்றாம் உலகப் போரிற்கான ஆரம்பமாக அமையும் என எச்சரித்திருந்தார்.
“பிளேன் சிரியா”-வில் பஸர் அல்-அஸாதின் இராணுவ கட்டமைப்பை தகர்ப்பது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல. டமஸ்கஸ் வரை நெருங்கி வந்து சண்டையிடும் அல்-காயிதா ஆதரவு அமைப்பை அழிப்பதும் அதன் நோக்கம். இறுதி இலக்காக ரஷ்யாவின் மத்தியகிழக்கிற்கான தளத்தை இல்லாமல் செய்வதே அதன் ஏகபோக எண்ணெய் சுரண்டலிற்கு வழியமைக்கும்.
0 comments:
Post a Comment