கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

~~ மக்கள் தலைவனின் மனதை நெகிழவைக்கும் முன்மாதிரி ~~

சுப்ஹானல்லாஹ், இது நம்ப முடியாத உண்மைச் சம்பவம். இல்ஹாம் அப்துல் ஹாதி அப்துல் பாகி முஹம்மத் எனும் எகிப்திய பெண்ணின் வாழ்வில் நடந்த இச் சம்வத்தை வாசித்து, ஈரமாகாத கண்கள் இருக்க முடியாது. அது இச் சம்பவத்துடன் தொடர்புபடும் இன்னுமொரு மனிதரினால், இல்லை ஒரு மகானினால். இனி இல்ஹாமின் கதையைக் கேளுங்கள்.


எனக்கு வீடு, கணவன், குழந்தை என எல்லாம் இருந்தது. அழகான சந்தோசமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்தார் மரணித்து, எங்கள் வீடு இடிந்து விழுந்த பின் இந்த உலகில் நான் தனிமைப்பட்ட வயோதிப பெண்ணாக நின்றேன். வீடு வீடாகச் சென்று வேலைகளைச் செய்துகொடுத்தும் சிறிய சில்லரைப் பொருட்களை விற்றும் வறுமையின் அகோர பிடியில் நாட்களைத் தள்ளிக்கொண்டு இருந்தேன். தூங்குவதற்குக் கூட சொந்தமாக ஓர் இடமில்லை. கீஸா சதுக்கத்தில் கைரோ பல்கலைக் கழகத்திற்கு முன்னால் வீதியில் ஒதுக்கமான பகுதி, தெய்வம் தந்த வீடானது, வீதிதான் எனது தங்குமிடமானது. அந்த இடத்தில் ஐந்து வருடங்களாக இரவில் வந்து தூங்குவேன். அங்கிருந்த அனைவரும் என்னை அறிவார்கள்.

அது டிசம்பர் மாதத்தில் ஒரு நாள். எனது முமு உடலையும் மூடிக்கொள்ளும் போர்வைக்குள் தூங்கிக்கொண்டிருந்தேன். வயொதிபப் பெண்ணாக இருந்தாலும் தூங்கும் போது எவரும் என்னைக் கண்டுவிடுவார்களோ என்ற வெட்கம் என்னை வாட்டும். அப்போது ஒரு மனிதன் வந்து என்னை தட்டினான். நான் அதிர்ந்தவளாக தலையை உயர்த்திப் பார்த்தேன். அவருடைய புகைப் படங்களை சுவர்களில் கண்டுள்ளேன். அவர் தனது காரில் வந்திருந்தார். அவருடன் சாரதியைத் தவிர வெறு யாரும் இல்லை. அவர் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி.

அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கின்றேன், ஜனாதிபதி வாகன ஊர்வலமாக செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் படை சூழ செல்வார். இப்படி தன்னந்தனிமையில் வந்து நிற்பதை என்னால் நம்ப முடியாமல், வியப்பில் திகைத்து நிற்கும் போது அவர் கேட்டார், “உம்மா, இந்த இடத்தில் ஏன் தூங்குறீங்க?” அப்போது சாமம் 2 மணியிருக்கும். நான் அவரிடம் எனது  கதையைக் கூறினேன். “இந்த இடத்தில் தூங்குறீங்க என்றால், உங்கள் தனிப்பட்டத் தேவைகளை (மலசலம் கழித்தல், குளித்தல்) எப்படி செய்துகொள்றீங்க?” என்று கேட்டார். நான் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் அருகில் இருக்கும் இடத்தைக் கூறினேன். அவர் பதிலேதும் சொல்லாமல் காரில் ஏறி சென்று விட்டார்.

மறு நாள் காலை 8 - 9 மணியளவு இருக்கும். நேற்று இரவு வந்த சாரதி அதே காரில் வந்திறங்கினார். அவர் என்னை அழைத்து சொன்னார், “நீங்கள் தங்குவதற்கு ஓர் இடமும் உங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவும் வழங்குமாறு ஜனாதிபதி கூறினார். நீங்கள் வெளியே சென்று அவதிப்படத் தேவை இல்லை. அல்லாஹ் தனது பொறுப்பில் ஏற்றுக்கொள்ளும் வரை ஜனாதிபதி உங்களுக்கான அனுசரனையை வழங்குவார்”.

எனக்கு வழங்கிய தங்குமிடத்திற்குச் சென்றேன். ஒரு படுக்கை, அதில் புனித குர்ஆனும் தொழுகை விரிப்பும் இருந்தது. தங்குமிடத்திற்கான ஒப்பந்தப் பத்திரத்தையும் மாதக் கொடுப்பனவையும் காகித உரையில் போட்டு தந்தார். ஒவ்வொரு மாதமும் தவறாது தங்குமிடத்தின் வாடகைக்கான பற்றுச் சீட்டையும் மாதக் கொடுப்பனவையும் கையில் கொடுத்துவிட்டுப் போவார்கள்.

நான் இக்வான் கட்சியைச் சேர்ந்தவள் அல்ல. வாழ்க்கையில் தனிமைப்பட்டு விட்ட வயோதிபப் பெண். என்னை தனது தாயைப்போல் பராமரித்த அந்த மனிதன், முஹம்மத் முர்ஸி, யார் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும். அன்று, அந்த நடு நிசியில் டிசம்பரின் கடும் குளிரில் என்னைப் போர்த்துவதற்கு மேலதிக போர்வை இருக்குமா என்று தனது காரில் தேடினார்...

யா அல்லாஹ்”.
அரபு மொழி உரையின் ஆங்கில மொழியாக்கத்தை அடிப்படையாக வைத்து, இலக்கிய சேர்மானங்களுடன் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாய் (அரபு மொழியில்) பேசுவதை கீழ் Youtube வீடியோ link இல் பார்வையிடலாம்.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=LaJ-La1kGa8#at=126

(Hisham Hussain, Puttalam)

0 comments:

Post a Comment