கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சீனாவில் 22 உய்குர் முஸ்லிம்கள் சுட்டு கொலை - இஸ்லாமிய வணக்கங்களில் கூட்டாக ஈடுபட்டமை பயங்கரவாத செயற்பாடு என சீன பொலீஸார் அறிவிப்பு!!

22 Muslim Uighur Chinese police shot dead while praying on charges of "terrorism"

சீனாவின் ஷின்-ஷியாங் மாகாண முஸ்லிம்கள் மீண்டும் சீன பொலீஸாரினால் வேட்டையாடப்பட்டுள்ளனர். யாருமே பார்க்க முடியாத மியன்மார் களம் இன்று ஷின்-ஷியாங்கில் அரங்கேறி வருகிறது. இவர்களது போராட்டம் தொடர்பாக கைபர் தளத்தில் கடந்த வருடம் ஒரு பதிவு வெளியாகியிருந்தது.  கடந்த செவ்வாய்கிழமை (8/27/2013) இந்த தகவல் வெிளியிடப்பட்டுள்ளது. உய்குர் இன முஸ்லிம்கள் 22 பேரை சீன பொலீஸார் சுட்டு படுகொலை செய்துள்ளனர். அவர்களின் பிணங்களின் மேல் பங்கரவாதிகள் என்ற பிரசுரங்களை போட்டு விட்டு சென்றுள்ளனர். இவர்கள் சீன பாலைவன எல்லையான Yilkiqi Kargilik (Yecheng in Chinese)-வில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த தகவலை பிறீ ஏசியா ரேடியோ Free Asia (FRA) தெரிவித்துள்ளது. இவர்கள் கடந்த ஒகஸ்ட் 20ம் திகதி இந்த தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தாமதமாகவே வெளியாகியுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது. இவர்களது வீடுகளில் வைத்து பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக FRA தகவல் வெளியிட்டுள்ளது. 

இவர்கள் மீது சீன பொலீஸார் முன்வைத்த குற்றச்சாட்டு “ தடை செய்யப்பட்ட மார்க்க செயற்பாடுகளை செயற்படுத்தியமையும், அதனை செய்ய மற்றவர்களை ஊக்குவித்தமையுமாகும். இதன சீன அரசு “பயங்கரவாத செயற்பாடு” என பிரகடனம்  செய்துள்ளதுடன் இதனை செய்தவர்களை “பயங்கரவாதிகள்” என்றும் குற்றம் சுமத்தியுள்ளது. 

பிறீ ஏசியா ரேடியோவிற்கு ஷின்-ஷியாங் தலைமை பொலீஸ் அதிகாரி Osman Batur Yilkiqi தகவல் தருகையில் சீன குடியரசின் பொலீஸார் பயங்கரவாதிகள் 22  பேரை வெற்றிகரமாக உயிருடன் பிடித்ததாகவும், இவர்கள் மதப்பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் சொல்லும் மதப்பயங்கவாதத்தின் மறுவார்த்தை என்பது இஸ்லாமிய வணக்க வழிபாடுகள், மதப்பிரச்சாரம், மத ஒன்றுகூடல் போன்றனவாகும். 

கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு நாட்கள் பொலிஸ் கஷ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு தகவல்கள் பெற முயற்ச்சிக்கப்பட்ட நிலைகயில், கைகள் பின்புறம் கட்டப்பட்டு நீல் டவுனில் (முழங்காலில் முட்டியிடப்பட்டு) பின் பிடறியில் சுடப்பட்ட நிலையில் இந்த 22 உடல்களும் கறுப்பு கனத்த பொலிதீன் பேக்களில் போடப்பட்டு வீசப்பட்டிருந்தன. இதனை தாம் கண்டதாக Mahmut Han தெரிவித்துள்ளார். இவரே Yilkiqi City-யின் தலைமை நிர்வாகி. 

urban மலையுச்சியில் இவர்களது உடல்கள் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளன. இன்னொரு பிரதேசவாசியின் தகவல்படி இவர்கள் கைது செய்யப்படவேயில்லை. இவர்கள் கூட்டாக தொழுகை நாடாத்திக் கொண்டிருக்கும் போது சீன போலீஸார் சடுதியாக உள் நுழைந்து இவர்கள் மேல் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அதனை மறைக்க அவர்கள் கைகளை பின்புறம் கட்டி தலையில் சுட்டு தண்டனையை நிறைவேற்றியது போல் காட்சிகளை மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் வசம் 06 கத்திகளும், கோடரிகளும் இருந்ததாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆயுதங்களுடன் தடைசெய்யப்பட்ட வணக்க வழிபாடுகளிற்கு ஒன்று கூடியது பயங்கரவாத செயல்களில் ஈடுபடவேயென சீன பொலீஸார் நிலைமைகளை சோடித்துள்ளனர். 

சீனாவை பொருத்தவரை Xinjiang-இன் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் அனைவருமே பயங்கரவாதிகள் ஆவர். ஜேர்மனியின் பேர்லினில் உள்ள World Uyghur Congress (WUC), இந்த காட்டுமிராண்டித்தனமான சீன பொலீஸாரின் தாக்குதல்களை மிக வன்மையாக கண்டனம் செய்துள்ளனர். 

கைபர்தளம்

3 comments:

முஹம்மது ஸாபிர். said...

எங்கெல்லாம் கவாரிஜ் வஹாபிகள் ஊடுருவி முஸ்லிம்களை வழிகெடுக்கின்றனரோ அப்படி வழிகெடுப்பவர்களை மார்க்க ரீதியாக எதிர்க்காமல் பொறுப்பானவர்கள் அமைதி காக்கின்றனரோ அங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரிகள் மூலம் பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

முஸ்லிம்கள் சுபிட்சமாக வாழ வேண்டுமா? ஒரே வழி...
தஜ்ஜாலின் கூட்டாளிகளான இஸ்ரவேலின் எச்சங்களான வஹாபி கவாரிஜ்களை கானும் இடம் எல்லாம் தனது சக்திக்கு உட்பட்ட விதத்தில் அனைவதும் எதிர்க்க வேண்டும். அதற்கு முயற்சிக்க வேண்டும்.

Anonymous said...

யார் இந்த மென்டல் ஸாபிர், உண்மையில் கவாரிஜிக்கும் வஹாபிக்கும், இஸ்ரவேலுக்கும் விளக்கம் தெரியாமல் உலறுகிறாரா? அல்லது இவரும் ஷியா ஏஜன்டா???
Mohamed Nazim

BlogEditor said...

Anonymous:
முப்பெரும் அறிஞர்திலகம் ....... யின் வாரிசிகள் இப்படித்தான் ......சாப்பட்டுக்கே வளர்க்கப்பட்டவர்கள். அந்த முட்டால்தான் அறிவீனமாக உலருகிறான் என்றால் இந்த ஸாபிருக்காவது மூளையிருக்கவேண்டாமா???? இந்த முட்டால் ...........
நண்பரே உங்களுடைய கருத்து எடிட் செய்யப்பட்டுள்ளது. ஆக்கத்தோடு சம்பந்தமில்லாதவிடயங்களை அநாகரிகமாக எழுதுவது நல்லது அல்ல என்பது எமது கருத்து. நாகரீகமாக, அவருடைய குடும்பவிடயங்களை தவிர்த்திருந்தால் நாம் உங்களுடைய கருத்தை முழுமையாகப் பிரசுரித்திருப்போம்.

Post a Comment