கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இந்தியாவின் 15வது பிரதமராக மோடி எதிர்வரும் 21ம் திகதி பதவியேற்பு - 160 தொகுதிகளை பறிகொடுத்த காங்கிரஸ்.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி எதிர்வரும் 21ம் திகதி பதவியேற்கவுள்ளார் என பாரதீய ஜனதா கட்சித் தலைமையகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 300 இற்கும் அதிகமான ஆசனங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. 

பாஜக 278இற்கும் அதிகமாக தொகுதிகளை தனித்துக், கைப்பற்றும் நிலையில் உள்ளது. இது அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 ஆசனங்களை விட அதிகமாகும்.

இந்தநிலையில், பாஜகவின் நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக வரும் 21ம் நாள் பதவியேற்கவுள்ளார்.

 நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதிகளில் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

160 தொகுதிகளை பறிகொடுத்த காங்கிரஸ்

பாராளுமன்ற தேர்தலில் மோடி அலையால் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவும் என்று கூறப்பட்டது. மக்கள் மனதிலும் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததால், காங்கிரஸ் தோற்கும் என்று நாடெங்கும் பேசப்பட்டு வந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் இருந்து அடிமட்டத்து தொண்டர் வரை காங்கிரசில் எல்லாருமே தோல்வியை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏதோ கொஞ்சம் தோல்வி அடைவோம் என்றே காங்கிரசில் பெரும்பாலானவர்கள் நினைத்தனர். சில காங்கிரஸ் தலைவர்கள் தோற்றாலும் 3–வது அணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற்று மீண்டும் அரியணையில் அமர்ந்து விடலாம் என்று கனவு கொண்டிருந்தனர். ஆனால் அந்த கனவை தகர்த்து தவிடு பொடியாக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி படுபாதாள வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி இந்த தடவை சுமார் 100 இடங்களை பெறும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரசுக்கு அந்த அளவுக்கு கூட வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு 75 இடங்களே கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு பலத்த அடி விழும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

கடந்த 2009–ம் ஆண்டு நாடெங்கும் வெற்றி பெற்றிருந்த தொகுதிகளில் 163 தொகுதிகளில் இந்த தடவை காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் இந்த அளவுக்கு மோசமாக தோற்கும் என்று சோனியா, ராகுல் இருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காங்கிரசுக்கு பலத்த அடியை கொடுத்து பா.ஜ.க. இந்த தடவை ‘சூப்பர்’ வெற்றியை ருசித்துள்ளது. 300 இடங்களை தாண்டி இப்போதுதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை நாடெங்கும் பா.ஜ.க. 175 தொகுதிகளை அதிகம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வுக்கு இது இமாலய வெற்றியாகும்.

 

0 comments:

Post a Comment