கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சீனாவில் மார்க்கெட்டில் தொடர் குண்டு வெடிப்பு: 31 பேர் பலி (photos)

சீனாவில் மார்க்கெட்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலர் பலியானார்கள்.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி என்ற இடத்தில் திறந்த வெளி மார்க்கெட் உள்ளது. இன்று காலை 7.50 மணி அளவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது 2 வாகனங்கள் வேகமாக வந்து மார்க்கெட்டுக்குள் புகுந்தது. உடனே அதில் இருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. 12 முறை அடுத்தடுத்து தொடர்ச்சியாக குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது.

குண்டு வெடிப்பில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன. மார்க்கெட்டுக்கு வந்திருந்த மக்கள் குண்டு வெடிப்பில் சிக்கிக் கொண்டனர். உடனே ஆம்புலன்ஸ்களும் பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Smoke in Urumqi (photo from Weibo user "Manga"), 22 May
இதில் ஏராளமானோர் பலியானதாக சீனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை உறுதியாக தெரியவில்லை. ஏராளமானவர்கள் கவலைக்கிடமான நிலையில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாகாணத்தில் முஸ்லிம்களில் உய்குர்ஸ் பிரிவினர் அதிகம் வசிக்கிறார்கள். அங்கு காலம் காலமாக வசிப்பவர்களுக்கும் புதிதாக குடியேறியவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன. துர்கிஸ்தான் இஸ்லாமிக் அமைப்பும், அல்கொய்தா இயக்கமும் தான் கலவரத்துக்கு காரணம் என்று சீனா குற்றம் சாட்டியது.

கடந்த மாதம் ஷின்ஜியாங் மாகாணத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். 79 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக சீன அரசு தெரிவித்து இருந்தது. தற்போது மார்க்கெட்டில் குண்டு வெடித்து இருப்பது சீன அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
Image from weibo.com
View image on Twitter
View image on Twitter
View image on Twitter
 

0 comments:

Post a Comment