கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இங்கிலாந்திலுள்ள இலங்கை முஸ்லிம்கள் தயார் நிலையில்..!

அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு,
 
எம்முடைய ஆர்ப்பாட்டப் பேரணியானது அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. 
 
பேரணிக்கான இறுதி அறிவுறுத்தலும் திட்டமும் எமக்கு ஒத்துழைப்புத் தரும் லண்டன் மாநகர மெட்ரோபொலிடன் பொலிசாரினால் அழகாகத் திட்டமிடப்பட்டு எமக்கு வழங்கப்பட்டு விட்ட நிலையில், இதில் கலந்து கொள்கின்ற சகோதர சகோதரிகளுக்கான சந்திக்கின்ற பொது இடம் Meeting Point மற்றும் பயண வழிகாட்டல்கள் ஆகியன கீழே தரப்படுகின்றன.
 
மே 5ந் திகதி நண்பகல் 12.00PM மணிக்கு அனைத்து சகோதர சகோதரிகளும் ஒன்றாக சந்தித்து தமது வருகையினை அறிவிக்கின்ற இடமாக லண்டனில் உள்ள Richmond Terrace வளாகமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதுவே அதற்குரிய முகவரி விபரம்.
Richmond Terrace, London.
SW1A 2JL
 
அங்கு வந்து சேர்கின்ற அத்தனை மக்களோடும் சரியாக பிரித்தானிய நேரம் நண்பகல் 12.00PM மணிக்கு எம்முடைய பேரணி ஆரம்பிக்கும். 
 
மதியம் 1:30PM வரையான ஒன்றரை மணித்தியாலங்கள் அவ்விடத்திலேயே எம்முடைய அடையாள எதிர்ப்பை முன்னெடுத்துவிட்டு, 
 
அங்கிருந்து தொடர்ந்து இலங்கை உயர்ஸ்தானிகம் அமைந்துள்ள Hyde Park Gardens நோக்கி பேரணி நகரும். 
 
அங்கே நமது எதிர்ப்பினை முறையாக வெளிப்படுத்துவதற்காக வாகனப் போக்குவரத்துத் தடைகள் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதால் நாம் நமது எதிர்ப்புப் பேரணியை ஒழுங்கான முறையில் அங்கேயும் முன்னெடுக்கமுடியும்.
 
அதைத் தொடர்ந்து இறுதி மணித்தியாலத்தில் மீண்டும் அனைவரும் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட மற்றும் உரைகளை ஆற்றுவதற்கென சந்தித்த இடத்திலே ஒன்று சேர்ந்து நம்முடைய கருத்துக்களை வெளியிட்டு சரியாக பிற்பகல் 4:00PM மணிக்கு ஆர்ப்பாட்டப் பேரணி நிறைவடையும்.
 
கலந்துகொள்பவர்களுக்கான ஒழுங்குகளை அறிவுறுத்தவும் அவர்களுக்கான முறையான வழிகாட்டலைச் செய்யவும் வளாகம் நெடுக எமது தொண்டர்கள் தமக்கான அடையாளங்களுடன் நிற்பார்கள்.
 
அவர்களே சுலோகங்களையும் கோஷங்களையும் பேனர்களையும் விநியோகிப்பார்கள். 
 
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அங்கே எம்மால் அனைவரதும் அனுமதியோடு தயாரிக்கப்பட்டிருக்கும் கோஷங்கள் பதாதைகள் தவிர வெளியிலிருந்து எவையும் அனுமதிக்கப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
இறுதி நேரத்தில் வருகின்ற குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக இங்கிலாந்தின் தூரப் பகுதிகளிலிருந்தும் ஸ்கொட்லாண்ட் வேல்ஸ் பகுதிகளிலிருந்தும் வருகின்ற சகோதர சகோதரிகள் உங்களுடைய பயண புறப்பாடுகளை காலநிலை மற்றும் வீதி நிலைமைகளை முன்கூட்டியே அறிந்து நேரத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
மறந்து விடாதீர்கள்!!
 
நாம் அனைவரும் ஒன்றாக ஓரிடத்தில் ஒன்றுகூடி சுலோகங்கள், பதாதைகள் மற்றும் ஏனைய அடையாளங்கள் வழங்கப்படும் இடம் Richmond Terrace வளாகமாகும்.
 
அங்கிருந்து ஆரம்பித்துத்தான் உயர்ஸ்தானிகத்தை நோக்கி நாம் செல்லவிருக்கிறோம்.
(ஒப்பீட்டளவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடுவதற்கென உயர்ஸ்தானிகத்துக்கு மிக அண்மையிலிருக்கின்ற பொது இடம் Richmond Terrace மாத்திரமே என்பது பொலிசாரின் அறிவுரை என்பதாலும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பயணித்து வருகின்ற அனைவரையும் ஒரே நேரத்தில் ஒன்று கூட்டுவதிலுள்ள நடைமுறை அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகவும் இவ்விடம் தெரிவுசெய்யப்பட்டது )
 
Richmond Terrace, London.
SW1A 2JL
 
அத்தோடு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைவரும் 
 
District Line, Jubilee Line, Circle Line ஆகிய இணைப்புக்களில் 
Westminster க்கு வரமுடியும். 
 
அதிலிருந்து கீழேயுள்ள படத்தின்படி நான்கு நிமிடம் நடந்தால் Richmond Terrace இனை அடைய முடியும்.
சொந்த வாகனங்களில் வருபவர்கள் தமது வாகனங்களை நிறுத்துவதற்கான அண்மையிலுள்ள பார்க்கிங் விபரங்கள் கீழே
 
சொந்த வாகனங்களில் வருபவர்கள் தமது வாகனங்களை நிறுத்துவதற்கான அண்மையிலுள்ள பார்க்கிங் விபரங்கள் கீழே
 
Spring Gardens, Westminster, London SW1A 2BN (7 Minutes)
Great College Street, Westminster, London SW1P 3RX  (8 Minutes)
45 St Martins Lane, Covent Garden, London WC2N 4HX  (10 Minutes)
 
மேலதிக விபரங்களுக்கு எம்மைத் தொடர்புகொண்டு அவ் விபரங்களைக் கேட்டறிந்துகொள்ளவும்.
For your any further inquiries please contact Bro Nazeer 00447950261775, Bro Jabeer 00447446914555, Bro Mafas 00447818608568
 
ஏற்பாட்டுக்குழு
SLMDI UK
 
 

0 comments:

Post a Comment