கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ளை அல்லாஹ்வின் இல்லத்தை, அகற்ற நிருவாகிகள் சம்மதித்தார்களா..?

நீண்ட நாட்களாக பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்ற தம்புள்ளை பள்ளிவாயில் தொடர்பான பிரச்சினை இன்று மீண்டும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக வந்திருக்கின்றது. தம்புள்ளை பள்ளிவாயிலை அந்த இடத்திலிருந்து அகற்றிக் கொள்வது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும் பள்ளி நிருவாக சபைக்குமிடையே (08.05.2014) மாலை நடந்த சந்திப்பொன்றில் இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
இந்த உடன்பாட்டின் படி நகர அபிவிருத்தி அதிகார சபை தமக்குப் பொருத்தமான  இடத்தை பள்ளிவாயில் அமைக்க வழங்கும் பட்சத்தில் தற்போது சர்ச்சைக்குரிய இடத்தை விட்டுத் தருவதற்குத் தயாராக தாம் இருப்பதாக தம்புள்ளை பள்ளி நிருவாக சபையின் தலைவர் அகமட் லெப்பை அதிரடியாக அறிவித்திருக்கின்றார். 

தம்புள்ளை பள்ளி விவகாரம் இந்த நாட்டிலுள்ள ழுழு முஸ்லிம்களின் கவனத்தையும் ஈத்த விவகாரமாக இருக்கின்றபோது அவர் ஒரு தலைப்பட்சமாக இந்த அறிவிப்பைச் செய்திருப்பது எந்தளவிற்று ஆரோக்கியமானது என்று தெரியவில்லை.

இந்தப் பள்ளிவாயில் தலைவருடன் பேசி மேற்கொண்ட இனக்கப்பாட்டின் அடிப்படையில் பள்ளிவாயிலை தரை மட்டமாக்கிவிட்டு, தருவதாகச் சொன்ன இடமுமில்லை பள்ளியுமில்லை என்று நாளை உத்தரவாதம் வழங்கியவர்கள் நடந்து கொண்டால் நிலை என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது. அத்துடன் இந்த உத்தரவாதம் வாய்ப் பேச்சு அடிப்படையிலா எழுத்துருவிலா வழங்கப்பட்டிருக்கின்றது? 

எனவே தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் இப்படி ஒரு நிலைப்பாட்டை அதன் நிருவாகிகள் எடுப்பதாக இருந்தால் இதனைவிடப் பொறுப்பு வாய்ந்தவர்களிடமிருந்து அதற்கான உத்தரவாதத்தை இவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது எமது கருத்து.

நாம் இந்த அரசில் இருக்கும் வரை தம்புள்ளை பள்ளியை குறிப்பிட்ட இடத்திலிருந்து அகற்ற இடம்வைக்க மாட்டோம். அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று சபதம் செய்த அரசியல்வாதிகளின் நிலைப்பாடு இப்போது என்னவென்று தெரியவில்லை.
 
(நஜீப் பின் கபூர்)

0 comments:

Post a Comment