கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது இனியும் பிளவுகள் வேண்டாம்

ஐக்கிய இராஜ்யத்தில் (லண்டனில்)  இன்று இலங்கையில் செயல்பட்டுவரும் கடும்போக்கு பெளத்த அமைப்புக்களை கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்தை  வலியுறுத்தும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்று முடித்துள்ளது . இந்த ஆர்ப்பாட்டம் கருத்து முரண்பாடு , மாறுபாட்ட தகவல் பாரிமாற்றம் ஆகியவை மத்தியில் இடம்பெற்று முடிந்துள்ளது , இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இராஜ்யத்தில் சில அமைப்புக்களினால் எதிர்ப்பு தெரிவிக்கபட்டிருந்த போதும் பின்னர் இலங்கையில் இயங்கும் தேசிய சூரா கவுன்சில் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு  ஆதரவான கருத்தை வெளிப்படுத்தியாத அவர்களின் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து பலரும் ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவதை காணக் கூடியதாக இருந்தது. இன்று பலரும் கலந்துகொண்ட நிலையில் ஆர்ப்பாட்டமும் வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது  .
uk 25
இந்த நிலையில் மீண்டும் இன்று நேற்றைய திகதியில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப் பட்டுள்ளது . அந்த அறிக்கையை அகில இலங்கை ஜம்இமிதுல் உலமா , மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ளன .
 
குறித்த அறிக்கையில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் லண்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும்  முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா என்பன எந்த விதத்திலும் தமது ஆதரவினை வழங்க வில்லை என தெரிவித்துள்ளது.
 
மேலும் அதில்  , ஐக்கிய இராஜியத்தில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு! ……..அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும்  முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா இணைத்து லண்டனிலுள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு விடுக்கும் செய்தி என்னவெனில். நாம் எந்தவொரு ஆர்ப்பட்டத்தையும் தூண்டவோ, அல்லது வேறெந்த வகையிலும் அவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்திற்கு எமது ஆதரவினை வழங்கவோ இல்லை  என்பதாகும்.
 
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவது பொருத்தமற்றது என்று நாம் கருதும் அதேவேளை, தூதுவரை சந்தித்து தமது நிலைப்பாட்டை அவருக்கு தெளிவுபடுத்துமாறும் ஏற்பாட்டாளர்களை நாம் வேண்டிகொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
 
இந்த தகவல்கள் மற்றும் நிகழ்வுகளை ஆராயும்    ஒருவர் முரண்பாடான செய்திகளேயே  பெற்றுகொள்வார். முன்னுக்கு பின் முரணான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப் பட்டிருப்பதையே இவை காட்டுகிறது .இவைகள் ஒரு வகையில் முஸ்லிம் தலைமைகள் என கூறுபவர்களின் பலவீனக்களை வெளிபடுத்தி நிற்கிறது . அதேவேளை இவற்றை சரியான   ஆராய்ந்தால் விமர்சங்களை மாறி மாறி முன்வைப்பதை மட்டுமே செய்யும் சூழலே உருவாகும் அந்த அளவுக்கு இரு தரப்பிலும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது  என்பதை விளங்கி கொள்ள முடிகிறது .
ஆனால்  நாம்  ‘நான்தான் சரி நீ பிழை – நீதான் பிழை நான் சரி’ என்ற விவாத்துக்குள் சிக்கிவிடாமல் விட்டு கொடுப்புகளுடன் ஆக்கபூர்வமாக அடுகட்ட நகர்வுகளை எப்படி செய்வது என்பதை பற்றி  கூட்டாக  ஆராய்வதற்கான வாயில்களை திறக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். அதுதான் இன்றைய கால கட்டத்தினதும் தேவையாகவுள்ளது .
 
இணையத்தளங்களிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும்  அடுத்தவை  குற்றம் கண்டு ,குற்றவாளி கூண்டி ஏற்றும் முயற்சிகளை செய்யாமல் ஆர்ப்பாட்டத்தை எதிர்த்தவர்களும் சமூக நோக்கில் எதிர்த்தார்கள் அதேவேளை ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தவர்களும் சமூக நோக்கில் ஆதரித்தார்கள் என அடிப்படையை விளங்கிகொண்டு சமூகம் சார் கூட்டுப் பொறுப்புக்களை இனிவரும் காலங்களில் கூட்டக செய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா ,  முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, தேசிய சூறா கவுன்சில் என்பன லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்க வில்லை ஆர்ப்பாட்டதை இந்த சந்தர்பத்தில் பொருத்தமற்றதாக பார்ப்பதாக முழுஅளவில் பிரசாரம் முன்னெடுக்கப் பட்டிருந்தால் இந்த ஆர்ப்பாட்டம் சிலர் கலந்துகொண்ட ஆர்பாட்டமாக மட்டும் இருந்திருக்கும் என்பது பலரின் அபிப்பிராயம் .
 
எதிர்காலத்தில் புலத்தில்  தாய்நாட்டில் வாழும் உறவுகளுக்காக முன்னெடுக்கப் படும் எந்த ஒரு நகர்வும் முழு அளவிலான கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் , பிரித்தானியாவில் இயங்கும் பிரதான அமைப்புக்கள் கூட்டு பொறிமுறை ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பது காலத்தின் காட்டயமாகும்.
 
நடந்து முடித்து விட்ட ஆர்ப்பாட்டத்தை வைத்தும் , அல்லது அந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தப் போகும் சாதக , பாதக  விளைவுகளை மையமாக வைத்தும் மேலும் பிளவுகளை எம்மத்தியில் ஏற்படுத்தி கொள்ள வலிகளை ஏற்படுத்தாமல் , இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்டிகளாக உருவாக்கப் பட்டிருக்கும் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா ,  முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, தேசிய சூறா கவுன்சில் ஆகியவற்றின் ஆலோசனைகளுக்கு அமைவாக எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் , நடந்து முடிந்தவை வெற்றியாக முடிந்துள்ளது அதன் விளைவுகளும் வெற்றியாக அமையட்டும் இனி எமது நகர்வுகளை கூட்டாக வழிகாட்டிகளின் ஆலோசனைகளை பெற்று செயல்படுவோமாக -
 
M.ரிஸ்னி முஹம்மட்
 
 

0 comments:

Post a Comment