கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு 2100 பேர் மண்ணில் புதைந்தனர்.

ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2100 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. பல ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.

                                       

ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து உருண்டது. இதில் மண், கல் என அருகில் இருந்த வீடுகளை மூடிக்கொண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 350 பேர் இறந்திருக்கலாம் என ஆப்கனில் முகாமிட்டுள்ள ஐ.நா., அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்ணில் புதைந்த நபர்கள் மற்றும் உயிருக்கு போராடி வருவோரை உள்ளூர் அலுவலர்கள் உதவியுடன் ஐ.நா., மனித வளம் காக்கும் ஒருங்கிணைப்பு கமிட்டியினர் உதவி செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சிக்கி 2 ஆயிரம் பேர் வரை மாயமாகி இருப்பதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார். ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

திருமண நிகழ்ச்சியில் சோகம்: இப்பகுதி கவர்னர் ஷாவாலில் அதீப், இது குறித்து கூறுகையில், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்து கிராமத்து மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டபோது மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் உயிர்ப்பலி அதிகரித்துள்ளது என்றார்.தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரத்து 100 பேர் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. என்றும் தெரிவி்த்தார்.
An excavator digs at the site of a landslide at the Argo district in Badakhshan province, May 3, 2014.  REUTERS-Stringer
People walk with their belongings near the site of a landslide at Badakhshan province May 3, 2014. REUTERS/Stringer
Afghan villagers gather at the site of a landslide at the Argo district in Badakhshan province, May 2, 2014. REUTERS-Stringer
Afghan villagers gather at the site of a landslide at the Argo district in Badakhshan province, May 2, 2014. REUTERS-Stringer

0 comments:

Post a Comment