இலங்கை அரசாங்கம் 8 வெப்தளங்களை இலங்கைக்குள் பொதுமக்கள் பார்வையிடாமல் வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் 8 வெப்தளங்களை இலங்கைக்குள் பொதுமக்கள் பார்வையிடாமல் வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக வெப்தள ஊடகவியாளர்கள் சங்கம் இன்று பொரளையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் அடிப்படை மனித உரிமை மீறல் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன் வழக்கு தாக்கலும் செய்யவுள்ளது.
மேற்படி மனித உரிமை மீறல் ஆட்சேபனையை ஜ.தே.கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தனநாயக்க மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைமையில் வெப்தள ஊடக சங்க உறுப்பினர்கள் சென்று ஆணையாளரிடம் அறிக்கையை கையளித்தார்.
இலங்கையில் நாளாந்தம் 30 ஆயிரம் மேற்பட்ட வாசகர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா மீரர், இடைநிறுத்தியதால் தனக்கு விளம்பரம் மற்றும் வருமானம் இலட்சகணக்கில் மாதாந்தம் இழந்துள்ளதாகத் அதன் ஆசிரியர் கெழும் தெரிவித்தார்.
மக்களுக்கு செய்திகள் தொடர்பாடல்களை அறியும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தான் விரும்பும் தொழிலொன்றை எனக்கு செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனது வெப்தளம் மூலம் இலங்கைக்கு வெளியே வாழும் இலட்சக்கணக்கான மக்கள் இலங்கை பற்றிய செய்திகளை அறியாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் நானும் எனது ஏனைய உழியர்களும் தொழிலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் படி 13-1, 14-1ஏ, 14-1 ஜீ ஆகிய சர்த்தின்படி மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. அவர்களது அறிக்கையில் பின்வரும் 8 வெப்தளங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
தமிழ்வின்,
கொழும்பு டெலிகிராப் ,
லங்கா நியுஸ்வெப்,
லங்கா ஈ நியுஸ்,
லங்கா காடியன்,
ஸ்ரீலங்கா மிரர்,
யப்னா முஸ்லீம்,
த இன்டிபெண்டன்ட்,
ஆகிய 8 வெப்தளங்களை அரசு இலங்கை மக்களுக்கு பார்க்கமுடியாமலும் இலங்கையில் இருந்து வெப்தளங்களை இயக்க முடியாமலும் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தலைவர் லலித் வீரதுங்க,அனுஸ்ட பல்பிட்ட,தொலைத்தொடர்பு திணைக்களத்தின் பணிப்பாளர்,ஊடக அமைச்சர். செயலாளர், இலங்கை டெலிகொம், மொபிட்டல், டயலொக் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு எதிராக இவ் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெப்தள ஊடகவியளாலர்களின் சங்கத்தின் தலைவர் கெழும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினுள் உள்ள அமைச்சர்கள் அரச குடும்பஸ்த்தினர்கள், அவர்களது அதிகாரிகளது பண்டவாளங்கள் அரச சொத்துக்களை சூறையாடுதல் மற்றும் ஊழல்கள் போன்ற செய்திகளை இந்த வெப்தளங்கள் மக்களுக்கு கொண்டு சென்றதானலேயே இதனை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. ஆகவே இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் மற்றும் இந்த நாட்டின் வாழும் பிரஜைக்கு தாம் விரும்பியதை வாசித்தறிவதற்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அஸ்ரப் ஏ சமத்:
0 comments:
Post a Comment