கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிராண்ட்பாஸ் பாணியில் இன்று தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியாவா?

கடந்த 2013 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் கொழும்பு கிராண்ட்பாஸ் மோளவத்தை தீனுல் இஸ்லாம் மஸ்ஜித்  பெளத்த தீவிரவாதிகளினால்   மூர்க்கமான முறையில் பொலிசார் பார்த்திருக்க   தாக்கப்பட்ட பின்னர்  சம்பவம்    தொடர்பில் முஸ்லிம் மற்றும் பௌத்த தரப்பினருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகளாக முன்வைக்கப் பட்டவை முஸ்லிம்களுக்கு சாதகமாக இல்லாத நிலையிலும் எதோ ஒருவகையில் உடன்பாடு எட்டப்பட்டது .

Grandpass-mosqueபிரதமர் டி.எம். ஜயரத்ன ,  தலைமையில் அந்த உயர்மட்டக் கூட்டம் நடாத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள்  கலந்துகொண்டனர்.
 
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி,   அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,  ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
பங்கு பற்றிய முஸ்லிம் தரப்பில் குறித்த இடத்திலிருந்து பள்ளிவாசலை அகற்றுவதென்ற பேச்சுக்கே இடமில்லை என்று வலியுறுத்தப்பட்டது ஆனாலும்  புத்தசாசன அமைச்சின் சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற கிராண்ட்பாஸ் மோளவத்தை புதிய மஸ்ஜித்தை முஸ்லிகள் கைவிடவேண்டும் அதற்கு பதிலாக பழைய மஸ்ஜித்தை அபிவிருத்தி செய்து விரிவாக்கல் செய்து கொடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டன .
 
தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஒரு ஆண்டை எட்டும் இன்றைய நிலையில்  அதிஉயர் மட்ட கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய  உடன்பாடுகள் இதுவரை அமுல்படுத்தப்பட வில்லை.  உடன்பாட்டுக்கு பின்னர் முஸ்லிம்கள் தீனுல் இஸ்லாம் மஸ்ஜித்தை   பரிகொடுத்தமை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதேவேளை எட்டப்பட்ட உடன்பாடுகளை நிறைவேற்றி தருமாறு பழைய பள்ளியின் நிர்வாகம் சம்மந்தப் பட்டவர்களை கோர முற்படும்போது அவர்கள் சில அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அறிய முடிகிறது .
கடந்த 2013  ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற பெளத்த சாசன அமைச்சின் 12 ஆவது ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முனைய கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்பாடுகள் நிறைவேற்றப் படவில்லை என முஸ்லிம் பிரதிநிதிகளால் குற்றம் சாட்டுக்கள் முன்வைக்கப்ட்டது. அக் கூட்டத்தில் பேசிய  பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைஸ் பாரூக் எட்டப்பட்ட உடன்பாடுகள் இது வரை  அமுல் படுத்தப் படவில்லை என்று குற்றம் சாட்டினார். குற்றசாட்டை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உடன்பாடுகள் அமுல்படுத்தப் படவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தாக்குதல் சம்பவம் நடந்து முஸ்லிம்கள் புதிய மஸ்ஜித்தை பறிகொடுத்த பின்னரும் இன்றுவரை எந்த முக்கிய வாக்குறுதியும் நிறைவு  வேற்றப் படவில்லை என்பதுதான் உண்மை .
குறித்த கூட்டத்தில் உடன்பாடுகளை உடனடியாக அமுல்படுத்துவது என்று தீர்மானம் இது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது . குறித்த அமைச்சரவை பத்திரத்தை பெளத்த சாசன அமைச்சின் செயலாளர் அமைச்சரவையில் சமர்பிப்பார் என்று தீர்மானிக்கப்பட்டது . ஆனால் இது வரை அடைவாக கண்டது ஒன்றுமில்லை.
சமாதானம் என்ற போர்வையில் இடம்பெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் பௌத்த மதத் தீவிரவாதிகளின் கோரிக்கைகளே நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவே முஸ்லிம்கள் பார்த்தார்கள் . புத்தசாசன அமைச்சின் சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற கிராண்ட்பாஸ் மோளவத்தை பள்ளிவாயலில் இனிமேல் தொழுகை நடாத்தக்கூடாது என்ற தீர்மானம் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டது . நடந்த பேச்சுவார்த்தைகளில் வன்முறைக் கும்பலின் கோரிக்கைகளை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக அரச தரப்பு இரு முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் கலந்துகொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வாதாடிய போதும் மதத் தீவிரவாதக் கும்பலின் எவ்வித நியாயமுமற்ற கோரிக்கைகளே இங்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஆக நமக்கு இருக்கும் மக்கள் ஆணையையும் அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களையும் பயன்படுத்தி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாத்துத் தர முடியாத கையாலாகாத்தனத்தை அரச தரப்பு முஸ்லிம் அரசியல் வாதிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்கள் என்றுதான் கூறவேண்டும் .
 
தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா
dampuஇதை இன்று தம்புள்ளை பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில் கூறுவதற்கு காரணம் . இன்று சிலர் மாற்று காணியை பெற்றுகொண்டு அங்கு மஸ்ஜிதை அமைப்பதற்கான அனுமதியை பெற்றுகொண்டு இந்த தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜிதை இடித்து அழித்து விட  அனுமதிப்பது என சொல்வதாக கதையாடல்கள் காதுகளுக்கு வந்து எட்டுகிறது . இங்கும் கிராண்ட்பாஸ் வாக்குறுதி  பாணியிலான   உடன்பாடுதான் எட்டப்படப் போகிறதோ என்ற அச்சயம்தான்  ஏற்படுகிறது .
 
தம்புள்ளை பள்ளி அகற்றப் படமாட்டாது என்று ஜனாதிபதி முஸ்லிம் அமைச்சர்களிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.இது தொடர்பான உத்தியோக பூர்வ பதிவு இருப்பதாக அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளார்.   ஆளும் தரப்பு முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம்களுக்கு தொடராக இது பற்றி வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் மீண்டும் கிளம்பியுள்ள சுமங்கள தேரர் மீண்டும் தமது  அடாவடிகளை நேற்று காட்டியுள்ளார் அவரின் வழிகாட்டலின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபை  அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என பிரதேச முஸ்லிம்கள் குற்றம் சுமத்துகின்றனர் . இப்போது புனித பூமியின் வீதி அபிவிருத்திக்கு  தடையாக தம்புள்ளை மஸ்ஜித்  இருப்பதாக காட்டும் வேலைகள் இடம்பெற்று முடிந்துள்ளது . அடுத்து என்ன  அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக     இயங்கி வரும் தம்புள்ளை  ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜித்தின்  உடைப்புத்தான என்ற நிலையில் தற்போதைய நிலவரம் உள்ளது , இந்த நிலையில் நாட்டின்  முக்கிய முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் மௌனித்துள்ளமை அவதானிக்கத்தக்கது.
 
LankaMuslim

0 comments:

Post a Comment