நாளை பாராளுமன்றம் கலைப்பு, எப்பிரல் 8ல் பொதுத் தேர்தல் ?
பாராளுமன்றம் நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்.
ஜனாதிபதி தேர்தலில் போன்றே பொதுத் தேர்தலிலும் நாங்கள் வெற்றியடைவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ண இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம். இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.
வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
சோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் கடந்த ஜனவரி 26ல் ஜனாதிபதித் தேர்தலை வைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ச, பாராளுமன்றத் தேர்தலை ஏப்பிரல் 8ல் நடத்த எண்ணம் கொண்டிருப்பது , சோதிடத்தின் அடிப்படையில் என்றும், 8ம் இலக்கம் ராஜபக்சவுக்கு வெற்றி தரும் என நம்புவதாகவும், விடயமறிந்த ாரப்புக்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment